வீட்டில் கரப்பான் தொல்லை அதிகமாக இருக்கிறதா? இதை உருண்டை பிடித்து வையுங்க, ஒரு கரப்பான் பூச்சி கூட இனி உங்க வீட்டை எட்டி கூட பார்க்காது!

cockroach-wheart-powder
- Advertisement -

வீட்டில் சில ஜந்துக்கள் இருப்பது அவ்வளவு நல்லது அல்ல! அந்த வகையில் கரப்பான் பூச்சியும் ஒன்று. கரப்பான் பூச்சிகள் வீட்டில் நடமாடினால் தேவையில்லாத ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படக்கூடும். எனவே இவற்றை எளிதாக ஒழித்துக் கட்ட என்ன செய்ய வேண்டும்? ஒரு கரப்பான் பூச்சி கூட இனி உங்கள் வீட்டில் நுழையாமல் இருக்க இதை உருண்டை பிடித்து வையுங்க! அது என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த வீட்டு குறிப்பு சார்ந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

கரப்பான் பூச்சிகள் வீட்டில் அதிகம் நடமாடினால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக வேண்டி இருக்கும். கரப்பான் பூச்சிகள் வீட்டில் எல்லோரும் தூங்கிய பிறகு இரவு நேரத்தில் தான் அதிகம் நடமாடும். நீங்கள் நன்கு தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென எழுந்து அமைதியாக லைட்டை போட்டு கிச்சனுக்கு சென்று பாருங்கள், கண்டிப்பாக கரப்பான் பூச்சிகள் நடமாடுவதை காணலாம். சிலருக்கு காலையில் அவற்றின் கழிவுகள் பாத்திரத்தின் மீது இருப்பதை பார்த்து அதை வைத்தும் கண்டுபிடிக்க முடியும்.

- Advertisement -

இந்த கரப்பான் பூச்சிகள் தொல்லை முற்றிலுமாக ஒழித்து கட்டுவதற்கு நாம் பல்வேறு முயற்சிகளை செய்திருப்போம். ஆனால் எதுவும் பலன் தரவில்லை என்கிற பட்சத்தில் இதை செய்து பார்க்கலாம், நிச்சயம் நல்ல ஒரு ரிசல்ட் கிடைக்கும். போரிக் பவுடர் சிலர் வீட்டில் கண்டிப்பாக வைத்திருப்பார்கள். தீக்காயம் ஏதாவது திடீரென பட்டுவிட்டால் இந்த பவுடரை தான் எடுத்து தடவுவார்கள். இதனால் தீக்காயம் சீக்கிரம் குணமாகும். இது ஒரு சிறந்த கிருமி நாசினி மற்றும் பூச்சிக்கொல்லியாகவும் செயல்படுகிறது. அறிவியலில் நியூட்ரான் உறிஞ்சியாகவும் மற்றும் வேதி சேர்மங்கள் தயாரிக்கவும் இதை பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.

இந்த போரிக் பவுடருடன் சிறிதளவு கோதுமை மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் தெளித்து உருண்டை போல பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். சிறு சிறு உருண்டைகளாக பின் பிரித்து கரப்பான் பூச்சி எந்த இடங்களில் எல்லாம் நடமாடுகிறதோ, அந்த இடங்களில் எல்லாம் வைத்து விடுங்கள். குறிப்பாக சமையலறையில் நிறைய வையுங்கள். பாத்திரம் கழுவும் தண்ணீர் போகும் இடங்களில் எல்லாம் வையுங்கள். மறைமுகமாக இருக்கக்கூடிய மூலை முடுக்குகளில் வையுங்கள்.

- Advertisement -

இப்படி எல்லா இடங்களிலும் வைத்து விட்டு தூங்கிப் பாருங்கள். காலையில் எழுந்ததும் ஒரு கரப்பான் பூச்சி கூட உங்கள் வீட்டில் இருக்கவே செய்யாது. கரப்பான் பூச்சிகள் கண்ட இடங்களில் அமரக்கூடியவை. இவை எங்காவது சுற்றிவிட்டு நோய் தொற்றுகளை கொண்டு வந்து, நம்முடைய வீட்டில் பாத்திரங்களின் மீது பரப்பி விட்டு செல்லக்கூடியவை. கழுவிய பாத்திரங்களின் மீது இவை ஏறி செல்வதால் இவற்றிடம் இருக்கக்கூடிய தொற்றுநோய் கிருமிகள் சாப்பிடும் தட்டில் வந்து சேருகிறது.

இதையும் படிக்கலாமே:
கொத்தமல்லி தழையில் இருக்கும் கடைசி தண்டு வரை வீணா போகாமல் பயன்படுத்தலாம். இந்த ஐடியா மட்டும் உங்களுக்கு தெரிந்தால்.

அதனால் தான் ஒருமுறை கழுவிய தட்டாக இருந்தாலும் சாப்பிடும் முன்பு கழுவி விட்டு பின்னர் சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார்கள். இப்படி செய்வதால் பல பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். கரப்பான் மட்டும் அல்ல, பல்லிகளும் இது போல வந்து உட்கார வாய்ப்புகள் நிறையவே உண்டு எனவே எப்பொழுதும் சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பது அவசியமாகும்.

- Advertisement -