உங்க வீட்டில் மழைக்கு கரையான் புற்று படை எடுக்கிறதா? 15 ரூபாய்க்கு இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்யுங்க, திரும்ப அந்த இடத்தில் கரையான் வரவே வராது!

insects-karaiyan
- Advertisement -

ஒரு வீட்டில் கரையான் படை எடுக்கிறது என்றால் அந்த வீட்டின் கட்டுமான பணி சரியாக அமைக்கப்படவில்லை என்பது அர்த்தமாகிறது. சரியாக பூசப்படாமல் இருப்பது, அடித்தளத்தை அழுத்தமாக போடாமல் இருப்பது போன்றவற்றால் ஏற்படும் சிறு துளைகள் வழியே ஈரப்பதத்தின் மூலம் கரையான் புற்றுகள் படை எடுக்க ஆரம்பிக்கின்றன. நாம் என்னதான் அதனை ஒழித்துக் கட்ட நினைத்தாலும், அதற்காக பல்வேறு வழிகளை கையாண்டாலும் கூட அது சிறிது நாட்களுக்குள் மீண்டும் அதே இடத்தில் மண்ணைத் தோண்டி புற்று கட்ட ஆரம்பித்துவிடும். இந்த கறையான் தொல்லையில் இருந்து எளிதாக விடுபடுவதற்கான ரகசிய வழிமுறையைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

karaiyan

ஒரு சிறிய துளை வீட்டில் இருந்தால் கூட ஈரப்பதம் உண்டாகும் பொழுது அங்கு இருந்து கரையான் முளைக்க ஆரம்பித்துவிடும். நீங்கள் சிமெண்ட் கொண்டு அடைத்தாலும் அல்லது எதைக்கொண்டு அடைத்தாலும் அதில் ஒரு பயனும் இராது. திரும்பத் திரும்ப ஒரே இடத்தில் கரையான் படை எடுக்க ஆரம்பிக்கும். ஒரு இடத்தில் வர ஆரம்பித்தால், அடுத்த இடத்திலும் துளைகளின் வழியே நிறைய வர ஆரம்பித்துவிடும். வீட்டிற்குள் கரையான் வருவது அவ்வளவு நல்ல சகுனமும் அல்ல.

- Advertisement -

வீட்டிற்குள் கரையான் வருவது, கருவண்டு வருவது, காகம் நுழைவது போன்றவை எல்லாம் அப சகுனமாக கருதப்படுகிறது. காகம் வீட்டிற்குள் நுழைந்தால் முன்னோர்கள் சாபம் இருப்பதாக ஆன்மிகம் கூறுகிறது. அது போல் கரையான் வீட்டிற்குள் படையெடுத்தால் அந்த வீட்டிற்குள் தேவையற்ற சண்டை, சச்சரவுகள் அதிகம் உண்டாகும் என்பதும் நம்பப்பட்டு வருகிறது.

karaiyan-putru

கரையான் புற்று அதிகமாக கட்ட ஆரம்பித்தால் வீட்டின் நிலைப்புத் தன்மையும் குறைய ஆரம்பிக்கும். எனவே இதனை அடியோடு ஒழித்துக் கட்டுவது தான் மிகவும் நல்லது. இதற்காக நாம் அதிகம் மெனக்கெட வேண்டிய அவசியமில்லை, அதிக செலவு செய்ய வேண்டிய தேவையுமில்லை! 15 ரூபாயில் கரையான் புற்றை அடியோடு மீண்டும் முளைக்க விடாமல் செய்து விடலாம்.

- Advertisement -

எறும்புகள் வராமல் இருக்க நாம் எறும்பு சாக்பீஸ் போடுவோம் அல்லவா? அதே போல கரப்பான் பூச்சி வராமல் இருக்கவும் சாக்பீஸ் பிரத்தியோகமாக விற்பனைக்கு உள்ளது. இதன் விலை 10 லிருந்து 15 ரூபாய் தான் இருக்கும். இதை ஒன்றை வாங்கி கொள்ளுங்கள். நீங்கள் கரையான் இருக்கும் இடத்தை முற்றிலுமாக கத்தியால் அல்லது ஏதாவது ஒரு ஆயுதத்தால் சுரண்டி எடுத்து சுத்தம் செய்து அப்புறப்படுத்தி விடுங்கள். பின்னர் அந்த இடத்தில் ஈரமில்லாதவாறு நன்கு உலர விடுங்கள். அதன் பின்பு நீங்கள் இந்த சாக்பீஸ் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு அழுத்தம் கொடுத்து கரையான் புற்று கட்டிய இடத்தில் தேய்த்து விடுங்கள்.

erumbu-chalk

நன்கு அழுத்தமாக தேய்க்கும் பொழுது அதன் பவர் இன்னும் கொஞ்சம் காலம் வரை அப்படியே இருக்கும். ஒருமுறை நீங்கள் இதை செய்து விட்டால் இரண்டு மாதத்திற்கு கண்டிப்பாக கரையான் அந்த இடத்தில் மீண்டும் புற்று கட்டாது. அதன் பவர் குறையும் பொழுது திரும்பவும் கட்டுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மீண்டும் அந்த இடத்தில் இதே போல தேய்த்து விடுங்கள். அவ்வளவுதாங்க! இத மட்டும் செஞ்சாலே போதும், உங்கள் வீட்டில் எப்பொழுதும் கரையான் தொல்லை இனி இல்லை.

- Advertisement -