இது கறி வருவலா, இல்லை வாழைக்காய் வறுவலா, என்ற சந்தேகம் உங்களுக்கே வரும். ஒரே ஒரு வாழைக்காய் வீட்டில் இருந்தால் இன்னைக்கு இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாக்குறீங்க.

vazhakkai-varuval_tamil
- Advertisement -

வீட்டில் வாழைக்காய் இருந்தால் தவறாமல் இந்த வருவல் முயற்சி செய்து பாருங்கள். இந்த மழைக்காலத்திற்கு சுடச்சுட ரசம், சாதத்திற்கு தொட்டு சாப்பிட அத்தனை அருமையாக இருக்கும். மிக மிக சுலபமாக அசைவ வாசத்தோடு, ஒரு சைவ வறுவல். அசைவம் சாப்பிட முடியாத சமயத்தில் வீட்டில் இருக்கும் அசைவ பிரியர்களுக்கு உங்கள் கையால் இந்த வருவலை செய்து கொடுத்தால், நிச்சயம் பாராட்டு மழை தான். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த அருமையான ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

மீடியம் சைஸில் இருக்கக்கூடிய இரண்டு வாழை காய்களை எடுத்துக் கொள்ளுங்கள். வாழைக்காயில் இருக்கும் தோலை சீவி கொஞ்சம் பெரிய கியூபுகளாக வெட்டி தண்ணீரில் போட்டு கழுவி, அந்த தண்ணீரை வடிகட்டி விடுங்கள். வெட்டிய வாழைக்காய்கள் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரில் சோம்பு 1 ஸ்பூன், சீரகம் 1 ஸ்பூன், மிளகு 1 ஸ்பூன், பட்டை சிறிய துண்டு 1, கிராம்பு 1, இந்த பொருட்களை போட்டு தண்ணீர் ஊற்றாமல் முதலில் பொடி செய்து விடுங்கள். அதன் பின்பு இதோடு தேங்காய் துருவல் 2 ஸ்பூன், தோல் உரித்த பூண்டு 5 பல், மிளகாய் தூள் 1 ஸ்பூன், மல்லித்தூள் 1 ஸ்பூன், மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், போட்டு மீண்டும் அரைக்க வேண்டும். கொஞ்சமாக தண்ணீர் விட்டு இதை அரைத்துக் கொள்ளுங்கள். இதை திக்காகத்தான் அரைக்க வேண்டும் ரொம்பவும் தண்ணியா அழைக்காதீர்கள்.

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு 1 ஸ்பூன், கருவேப்பிலை 1 கொத்து, பெருங்காயம் 1/4 ஸ்பூன், வரமிளகாய் 2 கிள்ளி போட்டு, தாளித்து வெட்டி வைத்திருக்கும் வாழைக்காய்களை இந்த எண்ணெயில் போட்டு இரண்டிலிருந்து மூன்று நிமிடம் நன்றாக வறுத்து விடுங்கள்.

- Advertisement -

வாழைக்காய் மேலே பொன்னிறமாக வரும். அதன் பின்பு மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை வழித்து இந்த வாழைக்காயில் போட்டு, தேவையான அளவு உப்பு தூளை தூவி, நன்றாக கலந்து விடுங்கள். அடுப்பு சிம்மில் தான் இருக்க வேண்டும். நாம் சேர்த்த மசாலா அனைத்தும் அந்த வாழைக்காயில் இறங்கி அப்படியே மொறுமொறுப்பாக நமக்கு கிடைக்கும். சூப்பரான வறுவல் தயார்.

இதையும் படிக்கலாமே: ரொம்ப சுலபமா, ஈஸியா இந்த அம்மிணி கொழுக்கட்டை எப்படி செய்றதுன்னு பாக்கலாமா ? அதோட கொழுக்கட்டை கல்லு மாதிரி ஆகாம இருக்க டிப்ஸும் இருக்கு, இனி நீங்க எப்ப கொழுக்கட்டை செய்தாலும், இந்த முறையில் செய்ங்க கல்லு மாதிரி ஆகவே ஆகாது.

சுட சுட சாப்பிடுங்க. இந்த மழைக்கு அருமையான சுவையை நாவிற்கு கொடுக்கும். வேற லெவல் வாசம் அடிக்கும். வாழைக்காய் சீக்கிரம் வெந்துவிடும். தண்ணீர் எல்லாம் இதில் ஊற்ற வேண்டாம். அப்படியே டிரையாக செய்யும்போது தான் வருவல் ருசி தரும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. கூடவே தக்காளி ரசம் செம காம்பினேஷனா இருக்கும்.

- Advertisement -