கருமையான முடிக்கு கரிசலாங்கண்ணி

karisalankanni keerai
- Advertisement -

முடியை கருமையாக வளரச் செய்ய பல மூலிகைகள் உதவுகின்றன. அந்த மூலிகைகளை பயன்படுத்துவதன் மூலம் தலைமுடியின் ஆரோக்கியத்தை நம்மால் மேம்படுத்த முடியும். அதை தவிர்த்து கெமிக்கல் நிறைந்த சாதனங்களை பயன்படுத்துவதால் நம் தலைமுடியின் ஆரோக்கியம் கெட்டுவிடுகிறது. இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் தலைமுடியை கருகருவென்று அடர்த்தியாக வளரச் செய்ய உதவக்கூடிய கரிசலாங்கண்ணியை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

நம் முன்னோர்கள் அவர்களின் காலத்தில் தங்களுடைய முடியை பராமரிப்பதற்காக உபயோகப்படுத்திய மூலிகையைப் பற்றி தான் நாம் பார்க்கப் போகிறோம். இந்த மூலிகையை நாம் இரண்டு வகைகளில் பயன்படுத்தலாம். இந்த மூலிகையை வைத்து எண்ணையும் தயார் செய்யலாம். அதே சமயம் இந்த மூலிகையை ஹேர் டையாகவும் பயன்படுத்தலாம். எப்படி செய்தாலும் தலைமுடியை கருமையாக்குவதற்கு இந்த மூலிகையை தொடர்ச்சியாக உபயோகப்படுத்த வேண்டும்.

- Advertisement -

அந்த மூலிகை தான் கரிசலாங்கண்ணி. கரிசலாங்கண்ணியில் இரண்டு வகைகள் இருக்கிறது. வெள்ளை கரிசலாங்கண்ணி, மஞ்சள் கரிசலாங்கண்ணி. வெள்ளை கரிசலாங்கண்ணிக்கு அதிகமான மருத்துவ குணம் இருக்கிறது என்று கூறப்படுகிறது. வெள்ளை கரிசலாங்கண்ணி கிடைக்காதவர்கள் மஞ்சள் கரிசலாங்கண்ணியை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இதை எந்தவித சிரமமும் இல்லாமல் எளிமையாகவே செய்து பயன்படுத்த முடியும்.

கரிசலாங்கண்ணியை டையாக பயன்படுத்த விரும்புபவர்கள் முதல் நாளே தலையில் எண்ணெய் பசை இல்லாமல் நன்றாக தலைக்கு குளித்து இருக்க வேண்டும். மறுநாள் இந்த கரிசலாங்கண்ணியை நன்றாக மிக்ஸி ஜாரிலோ அல்லது அம்மிலோ வைத்து அரைக்க வேண்டும். மைய அரைத்த இந்த கரிசலாங்கண்ணி விழுதை தலையின் வேர்க்கால்களில் படும் அளவிற்கு நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

- Advertisement -

குறைந்தது அரை மணி நேரமாவது அப்படியே இருக்க வேண்டும். இதைத் தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு முறை என்று வீதத்தில் செய்யும் பொழுது தலைமுடி கருமையாக வளர ஆரம்பிக்கும். மேலும் முடி உதிர்தல் பிரச்சனையும் சரியாகும். இந்த கரிசலாங்கண்ணியை என்று நாம் தலையில் தேய்கிறோமோ அன்றைய தினம் தான் அரைக்க வேண்டுமே தவிர முன்கூட்டியே அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாது.

அதிகமான அளவு கரிசலாங்கண்ணி கிடைக்கும் பட்சத்தில் அதை நன்றாக சுத்தம் செய்து அலசி ஒரு காட்டன் துணியில் போட்டு ஈரம் காயும் வரை வைக்க வேண்டும். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் ஒரு லிட்டர் அளவு எண்ணெயை ஊற்றி அதில் நான்கு கைப்பிடி அளவு கரிசலாங்கண்ணியை போட்டு எண்ணெய் காய்ச்ச வேண்டும்.

- Advertisement -

கரிசலாங்கண்ணி இலை நன்றாக சுருங்கி கருகிய பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். இந்த எண்ணெய் நன்றாக ஆரியபிறகு கண்ணாடி பாட்டிலில் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தலையில் தடவி வருவதன் மூலம் தலை முடி உதிர்தல் பிரச்சினையை சரி செய்ய முடியும். இளநரை, செம்பட்டை முடி போன்றவற்றையும் மாற்றி கருமையாக முடியை வளர செய்ய முடியும்.

இதையும் படிக்கலாமே: கருஞ்சீரக எண்ணெய்

இந்த கரிசலாங்கண்ணி இலையை நம் தலைக்கு பயன்படுத்தும் பொழுது ஒருமுறை இரண்டு முறை செய்தவுடன் அதன் பலன் முழுமையாக நமக்கு கிடைக்காது. தொடர்ந்து மூன்று மாதங்களாவது இதை செய்து கொண்டே வந்தால் தான் அதன் மாற்றத்தை நம்மால் காண முடியும் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

- Advertisement -