கொத்துக் கொத்தாக முடி கொட்டினாலும், ஒரு செலவும் இல்லாமல் கறிவேப்பிலையுடன் இந்த ஒரு பொருளையும் சேர்த்து அரைத்து எண்ணெய் தயாரித்து பாருங்கள். கேரளப் பெண்களைப் போல நீளமான அடர்த்தியான கூந்தல் விரைவிலேயே வளரும்.

long-hair-venthayam
- Advertisement -

எல்லோருக்குமே கேரளப் பெண்களைப் போல அடர்த்தியான நீளமான கருகருவென்ற கூந்தல் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் எப்போதும் இருக்கும். நீளமான கூந்தல் உடைய பெண்களுக்கு அதீத தன்னம்பிக்கையும் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஒரு அளவுக்கு மேல் கூந்தல் வளர்ச்சி இல்லாதவர்கள், கொத்துக் கொத்தாக முடி கொட்டுபவர்கள் கறிவேப்பிலையுடன் இந்த ஒரு பொருளையும் சேர்த்து அரைத்து எண்ணெய் தயாரித்து பாருங்கள், கடகடன்னு முடி வளரத் துவங்கும். கறிவேப்பிலை எண்ணெய் தயாரிப்பது எப்படி? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

அடர்த்தியான கேசத்திற்கு முதலில் தலையில் உஷ்ணம் குறைந்து இருக்க வேண்டும். உஷ்ணம் உடம்பில் அதிகமானால் முடி உதிர துவங்கும். தலையில் ஏற்படும் உஷ்ணத்தை குறைக்க தான் நாம் அனுதினமும் எண்ணெய் தடவி வருகிறோம். ஒரு சிலர் எல்லாம் எண்ணெயே தடவ மாட்டார்கள். இது போல இருப்பவர்களுக்கு விரைவாகவே முடி கொட்டத் துவங்கும்.

- Advertisement -

முடியின் நிறமும் நாளுக்கு நாள் கருமையை இழந்து நரை தோன்ற ஆரம்பிக்கும். எனவே எண்ணெய் தேய்க்காமல் இருக்கக் கூடாது. அது போல அதிக எண்ணெயை நாம் தலையில் தேய்க்க வேண்டிய அவசியமில்லை. ஈரப்பதம் இல்லாமல் தலையின் உஷ்ணம் குறைய சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் ஒன்றே போதும். இதற்கென கண்ட கண்ட எண்ணெய்களை வாங்கி உபயோகிக்க வேண்டிய அவசியமில்லை. தேவை இல்லாமல் பணத்தை விரையம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

ஒரு கைப்பிடி நிறைய கொத்தாக பிரஷ்ஷான கருவேப்பிலைகளை பார்த்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது இதனுடன் 2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். கருவேப்பிலையில் இருக்கும் சத்துக்கள் முடியின் கருமை நிறத்தை தங்க வைக்கும். கருகருவென அலைபாயும் கூந்தலை கொடுக்கும். அது போல வெந்தயம் உடல் உஷ்ணத்தை தணித்து முடியின் வளர்ச்சியை அதிகரிக்க செய்யும். இழந்த இடத்திலும் முடியை மீண்டும் முளைக்க செய்யும் சக்தி வெந்தயத்துக்கு உண்டு எனவே வெந்தயத்தை கண்டிப்பாக சேர்க்க வேண்டும்.

- Advertisement -

வெந்தயத்தையும் சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு 100ml அளவிற்கு சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் இரும்பு வாணலியில் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். செக்கில் ஆட்டிய எண்ணெய் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, சாதாரண தேங்காய் எண்ணெயை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். எண்ணெய் அடுப்பில் கொதித்து வரும் பொழுது நீங்கள் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை மற்றும் வெந்தய பவுடரை சேர்த்து நன்கு பொரிய விட வேண்டும். நீங்கள் போட்டதும் கறிவேப்பிலை பொரியும் சத்தம் சலசலவென கேட்கும். அப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள். இல்லையேல் கரிந்து விடும்.

ஒரு பத்து நிமிடம் நன்கு கொதிக்க வைத்தால் கருவேப்பிலை மற்றும் வெந்தயத்தின் சலசலப்பு அடங்கி மிதக்க ஆரம்பிக்கும். அதுவரை பொறுமையாக கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின்பு அடுப்பை அணைத்து அப்படியே ஒரு நாள் முழுக்க ஊற விட்டு விடுங்கள். 24 மணி நேரம் கழித்து நன்கு ஆறிய பின்பு திப்பிகள் எதுவும் இல்லாமல் நன்கு வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயை நீங்கள் தினமும் லேசாக தலையில் மசாஜ் செய்து தலை முடிக்கு கொஞ்சமாக தடவி வந்தாலே போதும், எதுவுமே தேவையில்லை முடி கருகருன்னு நீளமாக, அடர்த்தியாக வளரும்.

- Advertisement -