ஆவணி மாதம் என்பது மிகவும் சிறப்பு மிகுந்த மாதம். ஆவணி மாதத்தில் பல நல்ல சுப காரியங்கள் நடைபெறும். மேலும் இந்த ஆவணி மாதத்தில் தான் விநாயகர் சதுர்த்தி போன்ற சிறப்பு மிகுந்த நாட்களும் வருகின்றன. இந்த ஆவணி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சூரிய பகவானை வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ஆவணி மாதத்தில் நாம் செய்ய வேண்டிய விநாயகர் வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
சுப காரியம் நடைபெற வழிபாடு
இதுவரை எந்தவித சுப காரியமும் நடைபெறவில்லை, எந்த ஒரு காரியம் நடைபெறுவதாக இருந்தாலும் அதில் தடைகள் வந்து கொண்டே இருக்கிறது, என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று புலம்புபவர்கள் இந்த ஆவணி மாதத்தை முறையாக பயன்படுத்துவதன் மூலம் காரியத்தடைகள் முற்றிலும் நீங்குவதோடு சுப காரியங்கள் விரைவிலேயே நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த ஆவணி மாதத்தில் நாம் விநாயகர் பெருமானை இந்த ஒரு மந்திரத்தை கூறி வழிபாடு செய்வதன் மூலம் மேற் சொன்ன அனைத்து பலன்களும் நமக்கு கிடைக்கும்.
இந்த வழிபாட்டை நாம் ஆவணி மாதம் முழுவதும் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் இதுவரை இருந்து வந்த காரிய தடைகள் நீங்குவதோடு மேற்கொண்டு எந்தவித காரிய தடைகளும் நம்முடைய வாழ்க்கையில் ஏற்படாது என்றே கூறலாம். காரிய வெற்றி என்றதும் நினைவிற்கு வரக்கூடியவர் விநாயகப் பெருமான் என்பதால் ஆவணி மாதம் முழுவதும் நாம் விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். ஆவணி மாதம் சூரிய வழிபாட்டிற்கு உகந்த மாதம் என்பதால் தினமும் சூரிய உதயம் ஆவதற்கு முன்பாகவே எழுந்து சூரிய பகவானை வழிபாடு செய்ய வேண்டும்.
பிறகு வீட்டு பூஜை அறையில் விநாயகர் பெருமானுக்கு என்று ஒரு தீபத்தை ஏற்றி வைத்து தலையில் ஐந்து முறை கொட்ட வேண்டும். பிறகு மூன்று முறை தோப்புக்கரணம் போட்டுவிட்டு விநாயகப் பெருமானின் பின்வரும் இந்த ஒரு மந்திரத்தை 51 முறை கூற வேண்டும். அவ்வாறு மந்திரத்தை கூறும்பொழுது கைகளில் சிறிதளவு சர்க்கரை, கற்கண்டு போன்ற ஏதாவது ஒரு இனிப்பு பொருளை வைத்துக்கொண்டு கூறவேண்டும். மந்திரத்தை கூறி முடித்த பிறகு கையில் இருக்கக்கூடிய இனிப்பு பொருளை அருகில் இருக்கக்கூடிய மரத்தடியில் போட்டு விட வேண்டும். இப்படி போடுவதன் மூலம் அந்த இனிப்பு பொருளை எறும்புகள் உண்ண ஆரம்பிக்கும். அதன் மூலம் கர்ம வினைகள் தீரும். மேலும் விநாயகப் பெருமானின் அருளால் நம்முடைய காரிய தடைகளும் விலகும். சுப காரியங்கள் விரைவிலேயே நடைபெறும்.
மந்திரம்
” ஓம் கம் சௌமியாய கணபதியே நமோ நம “
இதையும் படிக்கலாமே: தன வசியத்தை ஏற்படுத்தும் விஷ்ணுபதி புண்ணிய கால பரிகாரம்
சிறப்பு மிகுந்த இந்த ஆவணி மாதம் முழுவதும் விநாயகப் பெருமானை இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த காரிய தடைகள் நீங்குவதோடு இனிமேலும் எந்தவித காரிய தடைகளும் ஏற்படாது என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.