- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅடமான நகையை திருப்ப உதவும் பரிகாரம்

அடமான நகையை திருப்ப உதவும் பரிகாரம்

- Advertisement -

முருகப்பெருமானை பலவிதமான வேண்டுதலுக்காக பலவிதமான முறையில் நாம் வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருக்கிறோம். அப்படிப்பட்ட முருகப்பெருமானிடம் அடமானத்தில் இருக்கக்கூடிய தங்க நகைகளை திருப்பவும் புதியதாக தங்க நகைகள் வாங்குவதற்குரிய யோகத்தை பெறவும் ஒரு வழிப்பாட்டு முறை இருக்கிறது. அந்த வழிபாட்டு முறையை முழுமையாக நாம் செய்யும் பொழுது முருகப்பெருமானின் அருளால் நமக்கு தங்க நகைகள் சேர்வதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். அப்படிப்பட்ட ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

அடமான நகையை திருப்ப பரிகாரம்

இன்றைய காலத்தில் இருக்கக்கூடிய நிலவரத்தின்படி தங்க நகைகள் வாங்குவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. வசதி படைத்தவர்கள் வேண்டுமானாலும் எளிதில் தங்க நகைகளை வாங்கிவிடலாம். ஆனால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களோ அல்லது அதற்கு கீழ் இருக்கக்கூடியவர்களோ தங்க நகை வாங்குவதற்காக பலவிதமான போராட்டங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். ஒரு சிலருக்கு தங்க நகைகள் என்பது எட்டா கனியாக கூட இருக்கிறது. அப்படிப்பட்ட தங்க நகைகளை சேர்க்கும் யோகத்தை பெறுவதற்கு முருகப்பெருமானை வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை புதிய நகைகள் வாங்குவதற்காக செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். அடமானத்தில் இருக்கக்கூடிய நகையை திருப்பப் போகிறோம் என்பவர்கள் செவ்வாய்க்கிழமையில் செய்வது என்பது மிகவும் சிறப்பு. இதற்கு நமக்கு மூன்று பொருட்கள் தேவைப்படும். ஒன்று கல் உப்பு, மற்றொன்று எலுமிச்சம்பழம். இவை இரண்டையும் வைப்பதற்கு சிவப்பு நிற துணி இவை மட்டும் இருந்தால் போதும்.

செவ்வாய்க்கிழமை அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அந்த ஆலயத்தில் கொடி மரம் கண்டிப்பான முறையில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சிவப்பு நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்கள் கைப்பட ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை வைத்து அதற்குமேல் புள்ளிகள் இல்லாத நல்ல எலுமிச்சம் பழமாக ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து மூட்டியாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த மூட்டையை நாம் வீட்டிலேயும் தயார் செய்யலாம், ஆலயத்திற்கு சென்றும் தயார் செய்யலாம். இப்படி தயார் செய்த இந்த மூட்டையை முருகப் பெருமானின் பாதத்தில் வைத்து முழுமனதோடு உங்களுடைய வேண்டுதலை முன்வைக்க வேண்டும். அதாவது அடமான நகையை திருப்புவது அல்லது புதிய நகைகளை வாங்குவது என்று ஏதாவது ஒரு கோரிக்கையை வைத்து முருகப்பெருமானை முழுமனதோடு வழிபாடு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு முருகப்பெருமானின் பாதத்தில் இருக்கக்கூடிய இந்த எலுமிச்சம் பழ மூட்டையை வாங்கி உங்களுடைய பரிசில் வைத்துக் கொள்ளுங்கள். அடமானத்தில் இருக்கக்கூடிய நகையை திருப்ப வேண்டும் என்று நினைப்பவர் செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் ஹோரையில் தங்களால் இயன்ற பணத்தை அடமானத்தில் இருக்கக்கூடிய நகையின் மீது கட்ட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் விரைவிலேயே நகைகளை திருப்புவதற்குரிய வழி உண்டாக்கும். வீட்டிற்கு இந்த எலுமிச்சம் பழத்தை கொண்டு வந்த பிறகு அந்த மூட்டையை திறந்து அதில் இருக்கக்கூடிய எலுமிச்சம் பழத்தை எடுத்து பூஜையில் வைத்து விட வேண்டும். கல் உப்பை தண்ணீரில் கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும். இந்த முறையில் நாம் முருகப் பெருமான் பாதத்தில் வைத்து எடுப்பதன் மூலம் முருகப்பெருமானின் அருள் நமக்கு அந்த எலுமிச்சம் பழத்தின் மூலம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:கடனாக கொடுத்து ஏமாந்த பணத்தை, திரும்ப பெற கருப்பு மை பரிகாரம்

மிகவும் எளிமையான பரிகாரம் என்று சர்வ சாதாரணமாக நினைக்காமல் முழுமனதோடு முருகப்பெருமானை நினைத்து செய்பவர்களுக்கு இந்த பரிகாரத்தின் பலன் முழுமையாக கிடைக்க பெற்று தங்க நகைகளை சேர்ப்பதற்குரிய யோகம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்