- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகாரிய தடை நீக்கும் கால பைரவர் மந்திரம்

காரிய தடை நீக்கும் கால பைரவர் மந்திரம்

- Advertisement -

சிவபெருமானால் உருவாக்கப்பட்ட தெய்வங்களுள் காலபைரவரும் ஒருவர். சிவபெருமானின் அம்சமாகவே கருதக்கூடிய இவர் சிவபெருமானின் ஆலயத்தில் காவல் தெய்வமாக வீற்றிருக்கிறார். அப்படிப்பட்ட காலபைரவரை நாம் அவருக்குரிய அஷ்டமி திதியில் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு பலவிதமான நன்மைகள் உண்டாகும். அதிலும் குறிப்பாக மன பயம் நீங்கும், எதிரிகள் தொல்லை விலகும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், தைரியம் அதிகரிக்கும், பயம் நீங்கும் என்று கூறப்படுகிறது.

இவ்வளவு பலன்களை தரக்கூடிய கால பைரவரை அனுதினமும் வழிபாடு செய்யலாம் அல்லது அவருக்குரிய அஷ்டமி திதியில் வழிபாடு செய்யலாம். இந்த ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி அன்று காலபைரவரை எந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்தால் காரிய தடைகள் நீங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

காரிய தடை நீக்கும் கால பைரவர் மந்திரம்

ஒவ்வொரு தெய்வத்திற்கும் மந்திர உச்சாடல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. சாதாரணமாக நாம் தெய்வத்தை வழிபாடு செய்தாலும் தெய்வத்தின் அருள் நமக்கு கிடைக்கும், இருப்பினும் மந்திர உச்சாடல் என்பது அதீத பலனை தரக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட மந்திர உச்சாடல் என்பது ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். மேலும் அந்த மந்திரத்தை நாம் கூறும்பொழுது அந்த மந்திரத்திற்கு உரிய பலனும் நமக்கு கிடைக்கும். அந்த வகையில் கால பைரவருக்குரிய காரிய தடை நீக்கும் மந்திரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

இந்த மந்திரத்தை ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி அல்லது வளர்பிறை அஷ்டமி திதியில் கூறுவது என்பது மிகவும் சிறப்பு. அதிலும் குறிப்பாக இந்த ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி அன்று நாம் கால பைரவரின் இந்த மந்திரத்தை கூறும் பொழுது அந்த மந்திரத்திற்கு உரிய பலன் பல மடங்கு அதிகமாக நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மந்திரத்தை சிவபெருமானின் ஆலயத்தில் இருக்கக்கூடிய காலபைரவரின் சன்னதிக்கு முன் அமர்ந்தும் கூறலாம். அல்லது வீட்டிலேயே அமர்ந்து கூறலாம்.

- Advertisement -

பொதுவாக அஷ்டமி திதி அன்று நாம் காலபைரவருக்கு பூசணிக்காய் தீபம், தேங்காய் தீபம், மிளகு தீபம் என்று ஏற்றுவோம். இதில் எதை ஏற்றி வழிபாடு செய்தாலும் அதற்குரிய பலன் கிடைக்கும். இப்படி இதை ஏற்றி வழிபாடு செய்யும் வழக்கம் இல்லாதவர்கள் ஒரே ஒரு நெய் தீபத்தை மட்டுமாவது ஏற்றி வைத்து கால பைரவருக்கு சிவப்பு நிற மலர்களால் மாலை வாங்கி தர வேண்டும். பிறகு அங்கேயே அமர்ந்து இந்த மந்திரத்தை நம்மால் இயன்ற அளவு குறைந்தபட்சம் 21 முறையாவது கூற வேண்டும்.

கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய இயலாதவர்கள் வீட்டில் காலபைரவரின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்தை சுத்தம் செய்து சிவப்பு நிற மலர்களை சூட்டி ஒரு நெய் தீபத்தையோ அல்லது நல்லெண்ணெய் தீபத்தையோ ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை கூறலாம். அவ்வாறு கூறும் பொழுது மிளகு தொடர்பான ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை செய்து வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. காலபைரவரின் படம் இல்லாத பட்சத்தில் சிவபெருமானின் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்தும் இந்த மந்திரத்தை கூறலாம்.

- Advertisement -

மந்திரம்

ஓம் கால காலாய வித்மஹே கால தீத்தாய தீமஹி தந்நோ கால பைரவ பிரசோதயாத்.

இதையும் படிக்கலாமே: குரு புஷ்யமி யோகம்

இந்த மந்திரத்தை காலபைரவரை மனுதார நினைத்துக் கொண்டு ஒவ்வொரு அஷ்டமி திதியிலும் கூறி காலபைரவரை முழு மனதோடு வழிபாடு செய்பவர்களுக்கு காலபைரவரின் அருளால் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்தேறுவதோடு, மன பயம் நீங்கும், எதிரிகள் தொல்லை விலகும், தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்