எல்லோருமே ஒரு நல்ல காரியத்திற்கு கிளம்பும்போது அந்த காரியம் நமக்கு சாதகமாக நடக்க வேண்டும். காரிய தடை வரக்கூடாது என்று தான் பிரார்த்தனை செய்வோம். ஆனால் ஏனோ தெரியவில்லை, நமக்கு நடக்கக்கூடிய நல்லது மட்டும்தான் அன்று நடக்காமல் போய்விடும். ஏதாவது ஒரு வகையில் காரியத்தடை வந்துவிடும். இந்த பிரச்சனையிலிருந்து தப்பிக்க எளிமையான ஒரு ஆன்மீகம் சொல்லும் வழிபாட்டை இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
காரியதடை விலக பரிகாரம்
நாளைக்கு ஒரு முக்கியமான வேலைக்காக வெளியே போக போறீங்க. அந்த காரியம் உங்களுக்கு சக்ஸஸ் ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஆனால் ஒரு பதட்டம், ஒரு பயம் மனதிற்குள் இருக்கிறது. என்ன செய்வது. முந்தைய நாள் இரவே பூஜை அறைக்கு செல்லுங்கள். உங்களுடைய கையில் ஒரு பச்சை கற்பூர துண்டை வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து இந்த பச்சை கற்பூரத்தை உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டே நாளைக்கு போற காரியம் உங்களுக்கு சக்ஸஸ் ஆக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். ஐந்து நிமிடங்கள் இந்த பிரார்த்தனை முடிந்ததும், ஒரு சின்ன கிண்ணத்தில் அந்த பச்சை கற்பூரத்தை வைத்து பூஜை அறையிலேயே சுவாமி படங்களுக்கு முன்பு வைத்து விடுங்கள்.
குலதெய்வத்தின் திருவுருவப்படம் இருந்தால் அந்த படத்திற்கு முன்பு இந்த பச்சை கற்பூர கிண்ணத்தை வைக்கவும். அவ்வளவுதான் பூஜை அறையை மூடிவிட்டு நீங்கள் தூங்க செல்லுங்கள். மறுநாள் காலை எழுந்து குளித்துவிட்டு காலை உணவு சாப்பிட்டுவிட்டு சாமி கும்பிட்டு வீட்டில் இருந்து கிளம்ப போறீங்க.
அப்போது அந்த பச்சை கற்பூரத்தை எடுத்து ஒரு சிட்டிகை உள்ளங்கைகளில் வைத்து நசுக்கி தூள் செய்து அதை அப்படியே உங்களுடைய டிரஸுக்கு மேல தடவிக்கோங்க லேசாக அந்த வாசம் உங்கள் மேல் வீச வேண்டும். ட்ரஸ்க்கு உள்பக்கம் தடவிக் கொண்டாலும் தவறு கிடையாது.
மீதம் இருக்கும் அந்த பச்சை கற்பூர துண்டை ஒரு பேப்பரில் மடித்து பர்ஸில் வைத்து உங்களுடைய வேலையை பாருங்கள். நீங்கள் சென்ற காரியம் நிச்சயம் உங்களுக்கு வெற்றி ஆகும். வீடு திரும்பும் போது, நீங்கள் கையோடு எடுத்துச் சென்ற அந்த பச்சை கற்பூரத்தை வாசலுக்கு வெளியிலேயே செடி கொடிகளுக்கு கீழே போட்டு விடவும்.
இதையும் படிக்கலாமே: ஆளுமை திறன் அதிகரிக்க தாயத்து
ஒரு இன்டர்வியூக்கு போறீங்க அல்லது மாப்பிள்ளை பார்க்க போறீங்க, பொண்ணு பாக்க போறீங்க, அல்லது பிள்ளைகளுக்கு படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஏதாவது பேசப் போறீங்க காலேஜில் சீட்டு கிடைக்கணும் இப்படி எந்த நல்ல காரியம் சக்சஸ் ஆக வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். காண்ட்ராக்ட் ஒப்பந்தம் செய்ய வேண்டும், ஒரு வீடு வாங்க வேண்டும் மனை வாங்க வேண்டும் எந்த நல்ல காரியமாக இருந்தாலும் இந்த பரிகாரம் உங்களுக்கு கை கொடுக்கும் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறவும்.