இன்று தைப்பூச திருநாளில் பூஜையோடு இதையும் மறக்காமல் செய்து விடுங்கள். நீங்கள் வீடு, மனை, என்று சகல செல்வ செழிப்போடும் வாழ்வது உறுதி.

- Advertisement -

முருகப் பெருமானுக்கு எண்ணற்ற வழிபாடு தினங்கள் இருந்தாலும் கூட, இந்த தைப்பூசமானது மிகவும் விசேஷமான ஒன்று. இந்த நாளில் கந்தக் கடவுளை அவருக்கு பிடித்தது போல் வழிபாடு செய்யும் பொழுது நம் துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் தீர்வதோடு, வாழ்வில் அனைத்து செல்வ நலன்களையும் பெறலாம். இந்த நல்ல நாளில் அவரை வணங்கும் பொழுது இந்த ஒரு வழிப்பாட்டையும் சேர்த்து செய்யதால் நம் வீட்டில் மேலும் செல்வ நிலை உயரும். அது என்னவென்று இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடவுள்களிலே காக்கும் கடவுள் என்று பெயர் பெற்றவர் இந்த கந்த கடவுள் தான். இவரிடம் சரண் அடைந்தால் போதும் நம் துன்பங்கள் அனைத்தும் தூரப் போய் விடும். இவரின் கரம் பற்றி விட்டால் எந்த தோஷங்களும் கூட நம்மை தொடராது, கிரகங்களினால் ஏற்படும் பாதிப்பை கூட தடுத்துக் காக்கும் கடவுளாக இந்த கந்தக் கடவுள் இருப்பார். இவரை இந்த தைப்பூச திருநாளில் இப்படி வழிபடுவது என்று தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த நாளில் காலையில் எழுந்து குளித்து முடித்து வீட்டில் பூஜை அறையெல்லாம் சுத்தம் செய்து சுவாமி படங்களை துடைத்து மஞ்சள், குங்குமம் பொட்டு இட்டு பூ வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள்.

உங்கள் வீட்டில் முருகர் விக்ரகம் அல்லது வேல் இரண்டில் எது இருந்தாலும் இந்த நாளில் பாலாபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் முக்கியம். இவை இரண்டும் இல்லை சுவாமி படம் மட்டுமே உள்ளது என்பவர்கள், படத்திற்கு மஞ்சள், குங்குமம், பொட்டு வைத்து அரளிப்பூ மாலை சாற்றினால் மிகவும் விசேஷம். அத்தோடு சுவாமிக்கு வெற்றிலை பாக்கு பூ பழம் தேங்காயுடன், ஒரு டம்ளர் பாலும், சர்க்கரை பொங்கலும் நெய்வேத்தியமாக வைத்து படைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இவையெல்லாம் செய்த பிறகு ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் தட்டு முழுவதும் சந்தனத்தை பரப்பி விடுங்கள். அந்த சந்தனத்தின் நடுவில் சந்தனத்தாலே விநாயகரை பிடித்து வைத்து அவருக்கும் பொட்டு வைத்து ஒரு மாவிலையை சொருகி பூ வைத்து விடுங்கள்.

இப்பொழுது தட்டில் பரப்பி வைத்திருக்கும் சந்தனத்தின் மேல் ஓம் என்ற மந்திரத்தை எழுதுங்கள். இந்த மந்திரத்தை எழுதி முடித்த பிறகு ஓம் சரவணபவ என்ற இந்த மந்திரத்தை நூத்தி எட்டு முறை பாராயணம் செய்ய வேண்டும். அதன் பிறகு நீங்கள் வழிபட்ட இந்த தட்டில் இருக்கும் விநாயகருக்கு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்த நாள் இந்த சந்தனம் எல்லாம் காய்ந்த பிறகு பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிள்ளையார் பிடித்து வைத்த சந்தனத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மாவிலை பூ இவற்றையெல்லாம் கால் படாத இடத்தில் சேர்த்து விடுங்கள்.

தினந்தோறும் நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது இந்த சந்தனத்தை நெற்றியில் வைத்து சென்றால் நீங்கள் நினைத்த காரியம் அனைத்துமே நல்லபடியாக முடியும். வீட்டில் இருப்பவர்களும் பூஜை செய்த பிறகு தினமும் இந்த சந்தனத்தை நெற்றியில் வைக்கும் பொழுது உங்களின் துன்பங்கள் அனைத்தையும் தீர்த்து வைக்கும் அருமருந்தாக இந்த சந்தனம் இருக்கும்.

பூஜை அறையில் வைத்து நாம் 108 முறை பாராயணம் செய்யும் பொழுது இந்த சந்தனத்திற்கும் சந்தனத்தில் பிடித்த விநாயகருக்கும் உருவேறி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த சந்தனத்தை நாம் தினமும் பயன்படுத்தும் பொழுது தெய்வ அனுகிரகம் கிடைத்து நாம் நினைப்பவை எல்லாம் நமக்கு நடந்தேறும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: எதிரிகள் தரும் குடைசல்களை தவிடு பொடியாக்க, தீய சக்திகள் தெறித்து ஓட வழிபட வேண்டிய தெய்வம் என்ன? இதை செஞ்சா உங்களை வெல்ல யாராலும் முடியாது!

இன்று இந்த தைப்பூச திருநாளில் முருகரை வழிபடும் பொழுது இந்த ஒரு சின்ன வழிபாட்டையும் சேஙசெய்து நம் வீட்டில் உள்ள துன்பங்களை எல்லாம் நீக்கி வீடு மனை என்று செல்வ செழிப்போடு நல்லதொரு வாழ்க்கையை வாழ வழி செய்து கொள்ளலாம்.

- Advertisement -