எதிரிகள் தரும் குடைசல்களை தவிடு பொடியாக்க, தீய சக்திகள் தெறித்து ஓட வழிபட வேண்டிய தெய்வம் என்ன? இதை செஞ்சா உங்களை வெல்ல யாராலும் முடியாது!

narasimmar-vilakku-enemy
- Advertisement -

ஒருவர் முன்னேற்ற பாதையை நோக்கி பயணிக்கும் பொழுது தான் பல்வேறு இடையூறுகள் வந்து கொண்டே இருக்கும். எல்லாவற்றையும் தாண்டி வெற்றி இலக்கை அடைவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். சுற்றி இருப்பவர்கள், எதிரிகள், பகைவர்கள், துரோகிகள், சுற்றத்தார்கள், சொந்தக்காரர்கள் என்று கண்ணுக்குத் தெரிந்தும், கண்ணுக்குத் தெரியாமலும் நமக்கு பலரும் குடைசல் கொடுத்து கொண்டு இருப்பார்கள். இவர்களின் சூழ்ச்சிகளை தகர்த்து எறிந்து தீய சக்திகளை விரட்டி அடித்து, நம்மை எவரும் வெல்ல முடியாத உயரத்திற்கு செல்ல வணங்க வேண்டிய தெய்வம் என்ன? என்பதைத் தான் இந்த ஆன்மீக குறிப்பு தகவல்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஒவ்வொரு சனிக்கிழமையிலும் நரசிம்ம வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் சகல ஐஸ்வர்யங்களும் நமக்கு கிடைக்கும். மேலும் எத்தகைய பகைவர்களும் தலைதரிக்க ஓடுவர் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. உண்மையான பக்திக்கு மனமிரங்கி நரசிம்ம அவதாரம் எடுத்து உக்கிர மூர்த்தியாக இருப்பவர் நரசிம்மர். நரமும், சிம்மமும் அதாவது மனிதனும், சிங்கமும் கொண்ட இந்த உருவம் மிகுந்த பலம் வாய்ந்தது ஆகும்.

- Advertisement -

உக்ர தெய்வம் என்பதால் பெரும்பாலும் நரசிம்மரை வீட்டில் வைத்து வழிபடக் கூடாது என்று கூறுவார்கள். ஆனால் அம்பாளுடன் கூடிய லட்சுமி நரசிம்மர் படத்தை தாராளமாக வீட்டில் வைத்து பூஜைகள் செய்யலாம். இவரை இஷ்ட தெய்வமாக நினைத்து வாரம் தோறும் சனிக்கிழமைகளில் வழிபட்டு வந்தால் எதிரிகள் தொல்லை அகலும். நம்மை சுற்றி இருக்கும் தீய சக்திகள் தலை தெரிக்க ஓடும் என்பது ஐதீகம். மேலும் புதன் கிழமையிலும் நரசிம்மரை பானகம் நைவேத்தியம் படைத்து வழிபட்டு வரலாம்.

ட்ரிப்ளிகேன் பகுதியில் அமைந்துள்ள நரசிம்ம ஆலயத்தில் வேண்டுதல்களை நிறைவேற்ற பானகம் நைவைத்தியம் படைக்கப்படுகிறது. இங்கு பிரார்த்தனை செய்து கொள்பவர்களுக்கு நினைத்தது நினைத்தபடி நடக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. லக்ஷ்மி நரசிம்மரை அலங்காரம் செய்ய செம்பருத்தி பூக்கள் மற்றும் செவ்வரளி பூக்களை பயன்படுத்தலாம். இவற்றைக் கொண்டு நன்கு அலங்கரித்து சந்தன, குங்குமம் இட்டு நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.

- Advertisement -

நைவேத்தியம் படைக்க கற்கண்டு, ஏலக்காய், உலர் திராட்சை போன்றவற்றை வைக்கலாம். கலசத்தில் தண்ணீர் வைத்து விரதம் இருந்தும், முடியாது போனால் பாலும், பழமும் அருந்தியும் நரசிம்ம மந்திரத்தை உச்சரித்து அவரை மனம் உருக வேண்டி வழிபட்டால் கேட்டது உடனே கிடைக்கும். உண்மை பக்தியும், மன உறுதியும் இருக்கும் பட்சத்தில் அவர் நிச்சயமாக இறங்கி வந்து அருள் புரிவார் என்பது பக்தர்களுடைய நம்பிக்கையாக இன்றளவிலும் இருந்து வருகிறது.

நரசிம்மர் மந்திரம்:
“ஓம் லக்ஷ்மி நரசிம்ஹாய நமஹ!!”

இதையும் படிக்கலாமே:
பழனி முருகன் கோவிலில் ஆண்டி கோலத்தில் தரிசனம் செய்வது சரியா? தவறா? இதனால் விளையும் விபரீதம் என்ன?

இந்த மந்திரத்தை பூஜை செய்யும் பொழுது 27 முறை தியான நிலையில் அமர்ந்து உச்சரிக்க வேண்டும். வளர்பிறையில் வரக்கூடிய சதுர்த்தசி திதி மிகவும் விசேஷமான திதியாக நரசிம்மருக்கு கருதப்படுகிறது. இந்த திதியில் ஒவ்வொரு மாதமும் நரசிம்மர் வழிபாட்டை மேற்கொண்டு வருபவர்களுக்கு எவரும் வெல்ல முடியாத பகையை வெல்லக்கூடிய சக்தி கிடைக்கும். நம்மை எதிர்ப்பவர்கள் எவராயினும் அவர்கள் தவிடு பொடியாகி விடுவார்கள். நம்முடைய முன்னேற்றத்தில் எந்தவித தடையும் இல்லாமல் வெற்றியை அடைய நரசிம்மரை வழிபடுவோம்.

- Advertisement -