வெளியில் செல்லும் பொழுது 100% காரிய வெற்றி பெற உங்களுடைய உள்ளங்கையை இப்படி பார்த்துவிட்டு செல்லுங்கள்!

asta-lakshmi-hand

ஒவ்வொருவருக்கும் வெளியில் செல்லும் பொழுது ஒவ்வொரு விதமான பிரார்த்தனைகள் இருக்கும். செல்லும் காரியம் வெற்றி பெறுவதற்கும், தடை இல்லாமல் இருப்பதற்கும் மனம் இறைவனை வேண்டிக் கொள்ளும். போகிற காரியம் வெற்றி பெற, எண்ணிய எண்ணம் ஈடேற வெளியில் செல்லும் பொழுது உங்களுடைய உள்ளங்கையை இப்படி பார்த்து விட்டு செல்ல வேண்டும். அது எப்படி? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

marraige-couple

நீங்கள் சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பீர்கள். பெண் பார்க்கும் படலம், நிச்சயதார்த்தம், விசேஷ, விழாக்கள் என்று முக்கிய சுப நிகழ்ச்சிகளுக்காக வெளியில் செல்லும் பொழுது செல்லும் காரியம் தடையின்றி வெற்றி பெறுவதற்கு பிரார்த்தனைகள் இருக்கும். அந்த நேரத்தில் வீட்டில் பூஜை அறையில் விளக்கை ஏற்றி விட்டு சாமி கும்பிட்டு விட்டு செல்லலாம். அதற்கு நேரம் இல்லாதவர்கள் இப்படி எளிதாக செய்து விட்டும் செல்லலாம்.

அது போல ஒரு சிலருக்கு நேர்காணல், வேலைவாய்ப்பு, புதிய தொழில், வியாபாரம், உத்தியோகம் என்று வருமானம் ஈட்டக்கூடிய வகையில் உங்களுக்கு சில விஷயங்கள் வெற்றியை அடைய வெளியில் செல்லும் பொழுது பிரார்த்தனைகள் இருக்கும். நேர்காணலுக்குச் சென்றாலும், புதிய தொழில் தொடங்கினாலும், வீட்டை விட்டு நீங்கள் அந்த இடத்திற்கு செல்லும் முன் இதனை செய்து விட்டு செல்வது உத்தமம்.

praying-god

இறைவழிபாடு என்பது காரிய வெற்றிக்கு மிகவும் அவசியமானது. அவனின்றி அணுவும் அசையாது என்பது போல் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கு பின்னாலும் இறைவன் இருக்கின்றார். காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்த்து விட்டு எழுந்தால் அதிர்ஷ்டம் வரும் என்பார்கள். அந்த நாள் முழுவதும் நமக்கு தடையில்லாத வெற்றி உண்டாகும். உள்ளங்கைக்கு அப்படி ஒரு அற்புதமான சக்தி உண்டு. ஒவ்வொருவருடைய உள்ளங்கையிலும் அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. அந்த வகையில் நாம் செய்யும் வழிபாடு அஷ்ட்ட லக்ஷ்மிகளையும் ஒரு சேர வழிபடுவதற்கு ஈடாகும்.

- Advertisement -

உள்ளங்கையின் நடுப்பகுதியில் முழுமுதற் கடவுளாக விளங்கும் விநாயகப் பெருமான் இருக்கின்றார். நீங்கள் எந்த ஒரு நல்ல காரியத்திற்காக செல்லும் பொழுதும் உங்களுடைய உள்ளங்கையில் அஷ்டலட்சுமிகளும், வினாயகரும் இருப்பதாக உருவேற்றி அவர்களை வணங்கி விட்டு சென்றால் செல்லும் காரியம் ஜெயமாகும் என்பது சூட்சம ரகசியம் ஆகும்.

நம் உள்ளங்கையில் இருக்கும் ஒவ்வொரு விரல்களுக்கு அடி பாகத்திலும், ஒவ்வொரு லஷ்மிகள் வாசம் செய்கிறார்கள். தனலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி என்று இருக்கும் அஷ்ட லட்சுமிகளும் உள்ளங்கையில் வீற்றிருக்கிறார்கள். நல்ல காரியத்திற்காக வெளியில் செல்லும் பொழுது அவசரமாக பூஜைகள் செய்ய முடியாத சூழ்நிலையில் உங்களுடைய உள்ளங்கையில் அஷ்ட்ட லக்ஷ்மிகளையும் உருவேற்றி மனதில் நினைத்து வணங்க வேண்டும். அது போல உள்ளங்கையின் மையப்பகுதியில் இருக்கும் விநாயகப் பெருமானையும் ஆவாகனம் செய்து உள்ளங்கையை கண்களில் ஒற்றி வணங்க வேண்டும்.

hand

தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவதற்கு இதை செய்யலாம். இப்படி செய்யும் பொழுது மனதில் இருக்கும் பயம் நீங்கி படித்தவை எவையும் மறக்காமல் மனதில், நினைவில் அப்படியே நிற்கும். இது போல எந்த ஒரு காரிய சித்தி ஆகவும், எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி பெற நம்முடைய இரண்டு கைகளின் உள்ளங்கையையும் ஒன்றிணைத்து விநாயகப் பெருமானையும், அஷ்டலட்சுமிகளையும் உருவேற்றி கண்களில் ஒற்றி வணங்கி விட்டு பின்னர் வீட்டை விட்டு புறப்பட்டு சென்றால் செல்லும் காரியம் நிச்சயம் வெற்றி பெறும். நீங்களும் முயற்சி செய்து பயனடையுங்கள்.