கர்மா கரைந்து போக தானங்கள்

செலவே செய்யாமல் இந்த 1 பொருளை தானம் செய்தால் போதும். உங்கள் அத்தனை கர்மாவும் கழிந்து கஷ்டங்கள் ஒரு நொடிப் பொழுதில் விலகும்.
- Advertisement -

ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் எல்லா சூழலும் சரியாகத்தான் அமைந்திருக்கிறது. பிறந்த ஜாதக கட்டம் சரியாக இருக்கிறது. நல்ல இடத்தில் வேலையில் இருப்பான். நல்ல குடும்பம் இருக்கும். ஆனால் ஏனோ தெரியாது மனதில் நிம்மதி நிலைக்காது. எந்த ஒரு காரியத்தையும் அவனால் சரியாக செய்து முடிக்க முடியாது. எல்லா விஷயத்திலும் பின்னடைவு ஏற்படும்.

இப்படிப்பட்ட ஒரு சூழல் ஒரு மனிதனுக்கு வருகிறது என்றால் காரணம் அவன் செய்த கர்மா தாம். செய்த பாவம் நம்மை பின் தொடர்ந்து அடிக்கிறது என்று அர்த்தம். இதிலிருந்து வெளிப்படுவதற்கு ஆன்மீகத்தில் ஏராளமான பரிகாரங்கள் உண்டு. அதையும் தாண்டி இன்று நாம் ஒரு எளிமையான பரிகாரத்தை பார்க்க போகின்றோம்.

- Advertisement -

உங்கள் கையால் இந்த ஒரு பொருளை தானம் கொடுக்கும் போது அந்த நிமிடமே உங்கள் கர்மா குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதிலும் செலவில்லாத தானம், அது என்ன தானம் தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளலாம்.

கர்மாவை கரைக்கும் தானம்

தாகத்தோடு இருக்கும் உயிரினத்திற்கு தண்ணீர் கொடுப்பது. இன்னைக்கு தண்ணீர் காசு கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு நாம் வந்து விட்டோம். அதைப் பற்றி சொல்ல வரவில்லை. ஒரு கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்து வீதியில் நடந்து வருபவர்களுக்கு உங்கள் கையால் ஊற்றினாலே கர்மாவில் பாதி, அந்த தண்ணீரில் கரைந்து விடும் என்று சொல்லுவார்கள்.

- Advertisement -

அந்த காலத்தில் எல்லாம் பார்த்தால் பானையில் தண்ணீரை கிணற்றிலிருந்து மோந்து கொண்டு இருப்பார்கள். யாராவது தாகத்தோடு வந்தால் அந்த தண்ணீரை அவர்களுடைய கையில் ஊற்றுவார்கள். அவர்கள் கையாலே தண்ணீரைப் பிடித்துக் குடித்து தாகத்தை தணித்துக் கொள்வார்கள். இதுதான் சிறந்த தானமாக பார்க்கப்பட்டது. இந்த காலத்திற்கு ஏற்றவாறு வீதியில் தாகத்தால் கஷ்டப்படுபவர்களுக்கு நீங்க தானம் தண்ணீர் தானம் கொடுங்க. பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீராக இருந்தாலும் சரி.

குடி தண்ணீர் வாங்கி தானம் கொடுக்கலாம். உதாரணத்திற்கு ரோட்டோரங்களில் செருப்பு தைக்க கடை வைத்திருப்பவர்கள். சின்ன சின்னதாக பூ விற்பவர்கள், பழம் விற்பவர்கள் வயதான பாட்டிகள் எல்லாம் வெயிலில் கீரை கட்டை தலை மேல் சுமந்து கொண்டு வியாபாரம் செய்யும். அப்படிப்பட்ட பாட்டிக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். இப்படி கஷ்டப்படுபவர்களுக்கு நீங்கள் செய்யக்கூடிய தண்ணீர் தானம் உங்கள் தலைமுறைக்கு வழிகாட்டும் என்பது தான் நம்பிக்கை.

- Advertisement -

அடுத்தபடியாக சொன்னால் அணிந்து கொள்ளக்கூடிய ஆடை. இன்றளவிலும் வீதியில் கிழிந்த ஆடையை போட்டுக் கொண்டிருக்கும் மக்களை நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். பார்த்து விட்டு, ஐயோ பாவம் என்று சொல்லிவிட்டு தான் அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்வோம்.

ஆனால் அவர்களுக்கு ஒரு உதவியும் செய்ய மாட்டோம். உங்களிடம் இருக்கும் துவைத்த, பழைய துணியை கொண்டு போய் அப்படி இருக்கும் நபர்களுக்கு தானம் கொடுத்தாலும் அந்த தர்மம் உங்கள் தலைகாக்கும், உங்கள் தலைமுறையை காக்கும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. அதிலும் ஒரு 10 வயதில் இருந்து 15 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு இந்த தானத்தை கொடுப்பது ரொம்ப சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: பணவரவு அதிகரிக்க பஞ்சமி வழிபாடு

கர்மவால் குடும்பத்தில் கஷ்டத்தை அனுபவிப்பவர்கள், மேலே சொன்ன இந்த எளிய தானத்தை செய்யுங்கள். உங்கள் கர்மா அன்றே, அந்த நிமிடமே குறையும். அடுத்த நாளே நன்மை நடப்பதை பார்க்கலாம் என்ற இந்த தகவலோடு ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -