இன்றைய சிவராத்திரியில் இரவு 12 மிளகு மட்டும் உங்கள் கையில் இருந்தால் போதும். உங்கள் கர்ம வினைகள் அனைத்தும் தூள் தூளாகி விடும். கர்ம வினைகள் தீர இந்த ராத்திரியை விட்டால் வேறு ஒரு எளிய வழி கிடையாது.

- Advertisement -

இன்று சனிக்கிழமை சனிமகா பிரதோஷத்தோடு வந்திருக்கும் சிவராத்திரியில் மிளகை வைத்து செய்யப்படும் இந்த ஒரு பரிகாரத்தை செய்து விட்டால் நம் வாழ்வில் சேர்ந்த கர்ம வினைகள் அனைத்தும் தீர்ந்து விடும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதெல்லாம் இந்த ஆன்மீகம் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சிவபெருமான் என்றாலே அவர் பாவங்களை நீக்கி அருள் புரிபவர் என்று தான் பொருள். அவரை சரண் அடைந்து விட்டால் போதும். நம் வாழ்வில் இல்லை என்ற நிலை இல்லாமல் வாழ வைப்பார் என்பது நித்தமும் சிவனை நெஞ்சில் நினைப்பவருக்கு புரியும். கர்மா என்பது நம்மை தொடரும் வரை நம் வாழ்வில் எந்த ஒரு முன்னேற்றமும் இருக்காது. இந்த கர்ம வினைகள் என்பது நம்மை மட்டும் அன்றி நம் சந்ததியினருக்கும் கூட துன்பத்தை விளைவிக்கும். இந்த துயரத்தில் இருந்து விடுவிக்க இந்த சிவராத்திரியை சரியாக பயன்படுத்திக் கொண்டால் போதும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

பிரதோஷம் என்பது சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாள் என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் சனி பிரதோஷம் என்பது ஐந்து வருடம் பிரதோஷ விரதம் இருந்து கோவில் சென்று வழிபட்டதற்கான பலனை அளிக்கக் கூடிய சக்தி வாய்ந்த ஒரு தினமாக கருதப்படுகிறது. அத்தகைய இந்த நாளில் சிவராத்திரியும் இணைந்து வந்திருப்பது நம் பாவங்கள் அனைத்தையும் போக்கி புண்ணிய நிலை அடைவதற்காக நமக்கு கிடைத்த வரம் என்றே சொல்லலாம்.

இந்த நாளில் காலையில் எழுந்து குளித்து முடித்து அந்த நாள் முழுவதும் சிவனை நினைத்து விரதம் இருப்பது மிக மிக உகந்தது. இன்றைய தினம் விரதம் இருப்பதுடன் சிவாலயத்திற்கு சென்று அவரின் நான்கு கால பூஜையிலும் கலந்து கொண்டு வழிபடுவது சிவபெருமானின் பரிபூரண அருளை பெற்று தரும்.

- Advertisement -

அவ்வாறு நாம் கலந்து கொள்ளும் பூஜையில் அவருக்கு அபிஷேக பொருளாக கரும்புச் சாறை வாங்கிக் கொடுக்க வேண்டும். அத்துடன் அபிஷேகத்திற்கு வில்வ இலைகளையும் வாங்கி தர வேண்டும். இந்த வில்வ இலைகளை வாங்கும் பொழுது கொஞ்சம் கூடுதலாகவே வாங்கிக் கொடுப்பது மேலும் சிறப்பு. ஏன் என்றால் இன்று நாள் முழுவதும் நடக்கும் அந்த பூஜை அனைத்திற்கும் வில்வ இலை பயன்படும்.

அத்துடன் அபிஷேகத்திற்கு முக்கியமான இன்னொரு பொருளாக விபூதியையும் வாங்கிக் கொடுக்கலாம். இவை எல்லாம் வாங்கி கொடுப்பது நம் பாவங்கள் தீர்ந்து கர்ம வினைகளை நீக்கி புண்ணிய பலனை சேர்த்துக் கொள்ள ஒரு தாந்த்ரீக பரிகாரம் என்றே இதை சொல்லலாம்.

- Advertisement -

கர்ம வினைகள் தீர பரிகாரம்
இன்று காலை முதல் இரவு வரை உள்ள அனைத்து கால பூஜைகளும் முடிந்து பிறகு இரவு முழுவதும் கோவிலில் கண் விழிப்பவர்கள் அதிகம். அப்படி கண் விழிக்கும் வேளையில் கையில் இந்த 12 மிளகாய் வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒவ்வொரு மிளகை எடுத்து உண்டு தண்ணீர் அருந்த வேண்டும். இப்படி செய்யும் போது என்னுடைய கர்ம வினைகள் அனைத்தும் நீங்கி என்னுடைய உள்ளம் தூய்மை அடைந்து நல்ல ஒரு முத்தி நிலையை தர வேண்டும், என வேண்டிக் கொண்டு ஒவ்வொரு மிளகையும் ஒரு மணி நேரத்திற்கு ஒன்றாக நாம் உட்கொள்ள வேண்டும்.

விரதம் இருக்கும் போது இதை சாப்பிடலாமா என்று கேள்வி இருக்கும். விரதம் இருப்பவர்களும் தாராளமாக இதை சாப்பிடலாம் அல்லது விரதம் இல்லாமல் கோவிலுக்கு செல்லாமல் வீட்டில் இருப்பவர்களும் வீட்டில் ஒரு விளக்கை ஏற்றி வைத்த பிறகு இந்த மிளகு பரிகாரத்தை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: கால பைரவரின் இந்த பாடலை வாசித்தால் பகைவர்களும் நம்மை கண்டு அஞ்சுவார்கள்! தீராத நோய்களும், துன்பங்களும் தீர பைரவரை எப்படி வழிபடுவது?

இன்றைய சிவராத்திரியில் காலை முதல் இரவு வரை இருக்கும் விரதத்தோடு இந்த ஒரு மிளகு பரிகாரத்தையும் செய்யும் போது நம் வாழ்வில் இருக்கும் அத்தனை துன்பங்களும் நீங்கி செல்வ கடாட்சத்துடனும், நோய் நொடி இன்றியும் நாமும் நம் சந்ததியினரும் வாழுவோம் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை என்ற கருத்தோடு பதிவினை நிறைவு செய்வோம்.

- Advertisement -