கால பைரவரின் இந்த பாடலை வாசித்தால் பகைவர்களும் நம்மை கண்டு அஞ்சுவார்கள்! தீராத நோய்களும், துன்பங்களும் தீர பைரவரை எப்படி வழிபடுவது?

kala-bairavar-thirunavukarasar
- Advertisement -

சிவபெருமானின் அம்சமாக கருதப்படும் இந்த கால பைரவர் மிகுந்த சக்தி வாய்ந்தவர் என்று கருதப்படுகிறது. கலியுகத்தில் காலத்தைக் கூட இவரால் மாற்றி அமைக்கக்கூடிய ஆற்றல் உண்டு என்பதால் கால பைரவர் என்று அழைக்கப்படுகிறார். செய்த பாவங்கள் தீர, தீராத நோய்கள் நீங்க, பகை ஒழிய, வறுமை மறைய இந்த 4 வரி பாடல் ஒன்றே போதும் என்கிறார் திருநாவுக்கரசர். திருநாவுக்கரசர் எழுதிய இந்த பைரவ பாடல் எத்தனை மகிமை வாய்ந்தது? என்கிற ஆன்மீக குறிப்பு தகவல்களைத் தான் இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

திருநாவுக்கரசர் எழுதிய நான்காம் திருமுறை:
விரித்த பல் கதிர் கொள் சூலம், வெடிபடு தமருகம் கை
தரித்ததோர் கோல கால வைரவனாகி வேழம்
உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண்திரு மணிவாய் விள்ளச்
சிரித்து அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே!

- Advertisement -

மேற்கண்ட இப்பாடலில் மட்டுமே தேவாரத்தில் கால பைரவர் உடைய பெயர் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சேறை என்னும் கோவிலில் பாடப்பெற்றுள்ள இப்பாடலில் கால பைரவரின் திருமேனி அழகை பற்றி வர்ணிக்கப்பட்டுள்ளது.

பாடலின் பொருள்:
பலவாறு விரிந்து, எங்கும் பரவி இருக்கும் ஒளி கதிர்களை கொண்ட சூலத்தினை ஏந்தி இருப்பவனே, வெடி போல் முழங்கும் உடுக்கையை கொண்டவனே, இத்திருக்கோலத்துடன் காட்சியளிக்கும் கால பைரவன் என்று தோன்றி, தாருகா வனத்தில் வேள்வி நடத்தி ஏவி விடப்பட்ட யானையின் தோலை உரித்து, தன் மீது போர்த்தி கொண்ட செயலைக் கண்டு அஞ்சிய உமையவளை நோக்கி, ஒளி பொருந்திய சிரிப்புடன் அருள் புரிந்தவரே. சிவபெருமானின் சென்நெறிச் செல்வனாக திருச்சேறை திருத்தலத்தில் உறைந்து என்றும் மக்களுக்கு புன்னகையுடன் அருள் புரிகிறார் என்று புகழப் பெற்றுள்ளது.

- Advertisement -

இப்பாடலை பாடுவதால் கிடைக்கக்கூடிய பலன்கள்:
தினமும் காலையிலும், மாலையிலும் இந்த பாடலை ஒரு முறையேனும் பாடி வந்தால் பைரவ மூர்த்தியின் திருவருள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால் பசிப்பிணி, வறுமை, பகை முதலிய அனைத்தும் நம்மை விட்டு விலகும் என்பது ஆன்றோர் வாக்காக இருந்து வருகிறது.

அக்கினி ஸ்வாலைகளுடன் படர்ந்த கூந்தலை கொண்டவரும், முக்கண்களை கொண்டு விளங்குபவரும், கோரை பற்களும், சூல தண்டத்துடனும், பாச உடுக்கையுடனும், ஒலிக்கும் மணிகள் கொண்டு, வெண் சிர மாலை பூண்டு, நாக கச்சையுடன், வீர தண்டை முழங்கிட காட்சி அளிக்கும் கால பைரவரை வணங்கி வேண்டினால் வேண்டிய வரம் வேண்டியபடி கிடைக்கும் என்பது ஐதீகம். இவருக்கு உகந்தது அஷ்டமி திதி ஆகும்.

- Advertisement -

ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் காலபைரவர் உடைய இந்த பாடலை உச்சரித்து வருபவர்களுக்கு வாழ்க்கையில் பகைமை என்பதே இருக்காது. சுற்றி இருக்கும் எதிரிகள், துரோகிகள் அனைவரும் நம்மை விட்டு விலகுவர். தேய்பிறை அஷ்டமியில் மட்டும் அல்லாமல் வெள்ளிக்கிழமையிலும் பைரவ வழிபாட்டை செய்யலாம். பைரவ கோவில்களுக்கு சென்று அங்குள்ள விபூதியை வாங்கி வந்து வீட்டில் வைத்தால் வீட்டில் இருக்கக்கூடிய திருஷ்டிகள் கழியும், தீய சக்திகள் ஒழியும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே:
நாளை மகா சிவராத்திரி 2023 ஜோதிட பலன்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அடிக்க போகுது ஜாக்பாட்! சிவராத்திரிக்கு பிறகு பெயர், புகழ், பதவி உயர்வு, பணம், அழிவில்லா செல்வம் இவைகளை பெறப்போகும் ராசிகள் எவை?

கார்த்திகை தேய்பிறை அஷ்டமியை காலபைரவாஷ்டமி என்று கூறப்படுகிறது. எனவே இந்த நாளில் கால பைரவரை வழிபடுபவர்களுக்கு சனி பகவானுடைய தாக்கம் குறையும் என்கிற நம்பிக்கையும் உண்டு. மனப்பூர்வமாக பைரவரை வணங்குபவர்களுக்கு எவ்விதமான தோஷங்களும் நெருங்குவது கிடையாது. மன சஞ்சலங்கள் ஏற்படுவது கிடையாது. வீரமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எவரையும் எதிர்க்கும் துணிவு பிறக்கும். நேர்வழியில் வெற்றி பெறுவார்கள்.

- Advertisement -