- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகர்ம வினைகளை நீக்கும் தை மாத பஞ்சமி வழிபாடு

கர்ம வினைகளை நீக்கும் தை மாத பஞ்சமி வழிபாடு

- Advertisement -

நீண்ட நாட்களாக ஏதாவது ஒரு காரியம் நடைபெற வேண்டும் என்று நினைத்திருப்போம். ஆனால் அது ஏதாவது ஒரு ரூபத்தில் தடைப்பட்டு கொண்டே சென்றிருக்கும். அப்படி தடைப்பட்டு கொண்டே இருக்க கூடிய காரியங்களும் தடையின்றி நடைபெற வேண்டும் என்றால் நமக்கு இருக்கக்கூடிய தோஷங்கள் நீங்க வேண்டும். அதிலும் குறிப்பாக கர்ம வினைகளும் முன்னோர்களின் தோஷங்களும் நீங்கினால் தான் நமக்கு நடக்க வேண்டிய நல்ல காரியங்கள் அனைத்தும் தடையின்றி நடைபெறும். அந்த வகையில் நமக்கு இருக்கக்கூடிய கர்ம வினைகளையும் முன்னோர்களின் தோஷத்தையும் நீக்குவதற்கு தை மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை பஞ்சமி நாளன்று வாராகி அம்மனை வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தான் பார்க்க போகிறோம்.

தை மாத பஞ்சமி வழிபாடு

தெய்வ வழிபாடு என்பதுதான் நம்முடைய கர்ம வினைகளையும் தோஷங்களையும் நீக்குவதற்குரிய ஒரே வழிபாடு. இந்த வழிபாட்டோடு சேர்த்து தான தர்மங்களையும் நாம் தொடர்ச்சியாக செய்து வந்தோம் என்றால் கண்டிப்பான முறையில் அனைத்து விதமான தோஷங்களும் நம்மை விட்டு விலகும் என்றே கூறலாம். இந்த தோஷங்களின் காரணத்தினால் தான் நாம் பலவிதமான கஷ்டங்களுக்கு ஆளாகி வருகிறோம். தோஷங்கள் படிப்படியாக நீங்க நீங்க நம்முடைய கஷ்டங்களும் நீங்கிவிடும். இந்த தோஷங்களையும் கர்ம வினைகளையும் நீக்குவதற்குரிய மிக முக்கியமான நாளாக திகழ்வதுதான் சனிக்கிழமை. சனிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பஞ்சமி என்பது மிகவும் சிறப்புக்குரியது. மேலும் இது தேய்பிறை பஞ்சமியாக இருப்பதால் நம்முடைய கர்ம வினைகள் தேய்ந்து போகும் என்றும் கூறலாம். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த இந்த நாளில் வாராகி அம்மனை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை மாலை 4 மணிக்கு மேல் இரவு 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். வீட்டில் வாராகி அம்மனை வழிபாடு செய்பவர்கள் கண்டிப்பான முறையில் பஞ்சமி நாளில் ஐந்து தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்வார்கள், ஒரு சிலர் ஐந்து முக தீபத்தை ஏற்றுவார்கள், இன்னும் சிலரோ தேங்காய் தீபத்தை ஏற்றுவார்கள் எந்த தீபத்தை வாராகி அம்மனுக்காக ஏற்றுகிறீர்களோ அந்த தீபத்தில் ஒரு சிறிய துண்டு வெல்லத்தை சேர்க்க வேண்டும். வாராகி அம்மனுக்கு எப்பொழுதும் போல் அபிஷேக ஆராதனை அர்ச்சனைகள், ஏலக்காய் மாலை சாற்றுவது, விரலி மஞ்சள் மாலை சாற்றுவது, கிராம்பு மாலை சாற்றுவது என்று உங்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் செய்து கொள்ளுங்கள்.

நெய்வேத்தியமும் வாராகி அம்மனுக்கு பிடித்த நெய்வேத்தியமான சக்கரவல்லி கிழங்கு, பனங்கிழங்கு போன்ற கிழங்கு வகைகள், பானகம் போன்றவற்றை வைப்பதோடு சனிக்கிழமையோடு வருகிற பஞ்சமி என்பதால் கூடுதலாக கருப்பு எள்ளுடன் வெல்லத்தை கலந்து வைக்க வேண்டும். இவ்வாறு வைத்து முடித்துவிட்டு “ஓம் நமோ வார்தாளியை நமஹ” என்னும் மந்திரத்தை 111 முறை உச்சரித்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விடுங்கள்.

- Advertisement -

வழிபாட்டை நிறைவு செய்த பிறகு பிரசாதங்களை எடுப்போம் அல்லவா? அப்பொழுது இந்த எள் வெல்லத்தை எடுத்து எறும்புகளுக்கு தானமாக தரவேண்டும். இந்த முறையில் நாம் தேய்பிறை தைமாத பஞ்சமி நாளன்று வழிபாடும் பரிகாரமும் செய்தோம் என்றால் நம்முடைய கர்ம வினைகளும் கிரக தோஷங்களும் வாராஹி அம்மனின் அருளால் நீங்கும்.

இதையும் படிக்கலாமே:தை மாதத்தில் போட வேண்டிய கோலம்

முழுமனதோடு வாராகி அம்மனை யாரொருவர் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு வாராகி அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். இந்த தேய்பிறை பஞ்சமி நாளன்று இந்த முறையில் வாராகி அம்மனை வழிபாடு செய்து நம்முடைய கர்ம வினைகளையும் கிரக தோஷங்களையும் நீக்குவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்