இட்லி, தோசைக்கு தோதான சைட் டிஷ்களில் சட்னி தான் ரொம்ப ஃபேமஸ். அந்த சட்னியை பல வகையில் அரைக்கலாம் அதுவும் ஒவ்வொரு ஊருக்கு இதன் சுவையும் செய்யும் விதமும் மாறு படும் அப்படி கர்நாடகாவில் அதிக பேமஸ் ஆக செய்யப் படும் ஒரு சட்னி ரெசிபியை பற்றி தான் இப்பொழுது நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.
தேவையான பொருட்கள்
காய்ந்த மிளகாய் – 12
பூண்டு பல் -15
வெல்லம் – 1 டீஸ்பூன்
உப்பு -1/2 டீஸ்பூன்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
சீரகம் -1 டீஸ்பூன்
கொத்தமல்லி – கைப்பிடி எலுமிச்சை பழம் -1
நல்லெண்ணெய் -1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை
இந்த சட்னி செய்ய முதலில் ஒரு சிறிய பேனில் வெந்தயத்தையும் சீரகத்தையும் சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை வறுத்து தனியாக ஆற வைத்துக் கொள்ளுங்கள். இதே போல் காய்ந்த மிளகாய் வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு பத்து நிமிடம் வரை ஊற விட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த காய்ந்த மிளகாய் பூண்டு பல் வெல்லம் உப்பு கொத்தமல்லி வறுத்த வெந்தயம் சீரகம் இவை அனைத்தையும் சேர்த்த பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை நன்றாக பிழிந்து அதன் சாரை மட்டும் கொள்ளுங்கள்.
இவையெல்லாம் சேர்த்த பிறகு கடைசியாக ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயும் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்தது இந்த சட்னியை தண்ணீர் ஏதும் சேர்க்காமல் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்து விட்டால் போதும். கர்நாடகா ஸ்பெஷல் ரஞ்சக சட்னி காரசாரமாக தயார்.
இதையும் படிக்கலாமே: நல்லா மொறு மொறுன்னு செட்டிநாடு மசாலா கார சீயம் செய்வது எப்படி?
இட்லி தோசைக்கு காரசாரமாக ஏதாவது வைத்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த சட்னி ட்ரை பண்ணி பாருங்க அட்டகாசமா இருக்கும். ஒரு முறை மட்டும் இப்படி அரைத்து டேஸ்ட் பண்ணிட்டீங்கன்னா இனி எப்பவுமே இந்த சட்னி தான் அரைப்பீங்க.