நல்லா மொறு மொறுன்னு செட்டிநாடு மசாலா கார சீயம் செய்வது எப்படி?

seyam
- Advertisement -

காரைக்குடி பக்கம் இருக்கும் ஊர்களில் உள்ளவர்கள் சமைக்க கூடிய பலகார ரெசிபி தான் இது. இதை செட்டிநாடு சமையல் என்று சொல்லுவோம். செட்டிநாடு கல்யாணம் என்றால், பந்தியில் கட்டாயம் இந்த சீயம் வைப்பார்கள். இதை நம்முடைய ஊர்களில் போண்டா என்றும் சொல்லுவோம்.

ஆனால், இதனுடைய ரெசிபி ரொம்ப ரொம்ப வித்தியாசமாக இருக்கும். பின் சொல்லக்கூடிய குறிப்பை பின்பற்றி ஒரு முறை இந்த சீயம் உங்களுடைய வீட்டிலும் முயற்சி செய்து பாருங்கள். சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும். வாங்க நேரத்தை கடத்தாமல் ரெசிபியை பார்த்து விடுவோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

பச்சரிசி 200 கிராம்
உளுந்தம் பருப்பு 200 கிராம்
நறுக்கிய பெரிய வெங்காயம் 2
பச்சை மிளகாய் 3
கருவேப்பிலை 2 கொத்து
மல்லித்தழை பொடியாக நறுக்கியது சிறிதளவு
தேங்காய் துருவல் 1/4 கப்
கடுகு 1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
சீயம் பொறித்து எடுப்பதற்கு தேவையான எண்ணெய்.

செய்முறை

முதலில் பச்சரிசியையும் உளுந்தையும் ஒன்றாக போட்டு நன்றாக கழுவி 1 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். ஊற வைத்த அரிசி உளுந்தையும் ஒன்றாக கிரைண்டரில் போட்டு அரைக்க வேண்டும். வடை மாவு அளவுக்கு பக்குவமாக கட்டியாக இதை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். (தண்ணீர் ஊற்றி அரைக்க கூடாது. தண்ணீர் தெளித்து தான் இந்த மாவை அரைக்க வேண்டும்).

- Advertisement -

மாவு அறைபடும்போது கொஞ்சம் தண்ணீராக அரைபட்டு விட்டால், சீயம் சரியான பக்குவத்தில் வராது. மாவுக்கு தேவையான அளவு உப்பு போட்டு இந்த மாவை அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த மாவு அப்படியே இருக்கட்டும். அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் போட்டு, நன்றாக வதக்குங்கள்.

வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நறுக்கி வைத்த பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, தேங்காய் போட்டு, இந்த வெங்காயத்துக்கு மட்டும் தேவையான அளவு உப்பு தூவி வதங்கிய இந்த மசாலா பொருட்களை அப்படியே அரைத்து வைத்திருக்கும் மாவில் கொட்டி விட வேண்டும். (உங்களுக்கு தேவை என்றால் அந்த தேங்காயை பொடியாக நறுக்கி கூட போடலாம்).

- Advertisement -

சூடாகவே வதக்கிய இந்த கலவையை நீங்கள் மாவில் கொட்டலாம் தவறு கிடையாது. மாவை நன்றாக கலந்து விடுங்கள். அடுப்பில் ஒரு கடாயில் சீயம் பொறிப்பதற்கு தேவையான எண்ணெயை நன்றாக சூடு செய்து விடுங்கள். இப்போது இந்த மாவை அப்படியே உங்கள் கையாலேயே எடுத்து போண்டாவாக எண்ணெய் சட்டியில் விட வேண்டும்.

குட்டி குட்டி போண்டாவா விடுங்க. அது அப்படியே புசுபுசுன்னு பொங்கி உப்பி சூப்பரா பெருசு பெருசா நமக்கு கிடைக்கும். மிதமான தீயில் பொன்னிறமாக இரண்டு பக்கமும் சிவக்க விட்டு எடுத்து, கூட தேங்காய் சட்னி வைத்து பரிமாறினால் சுவையான மசாலா சீயம் தயார்.

இந்த போண்டாவை எடுத்து இரண்டாக உடைத்துப் பார்த்தால் உள்ளே கொஞ்சம் தான் மாவு இருக்கும். உள்ளே கொஞ்சம் கொஞ்சம் இடைவெளி விட்டுவிட்டு மாவு வெந்து இருக்கும். அப்படி வந்தால் நீங்கள் செய்த சீயம் சரியான பக்குவத்தில் இருக்கிறது என்று அர்த்தம். ரொம்பவும் சீயம் எண்ணெய் குடிக்கிறது எனும் பட்சத்தில், அந்த மாவில் கொஞ்சம் அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: ஓவன் இல்லாமல் முட்டை சேர்க்காமல் ஒரு கேக்

சீயம் எண்ணெய் குடித்தால் நல்ல ருசி தராது. அது மட்டுமல்லாமல் அது ஆரோக்கியத்திற்கு கேடும் கூட. இந்த சுவையான சூப்பரான ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -