கற்பூரவள்ளி இலை இருந்தா, கை நிறைய காசு வரும்!

karpooravalli-cash

நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக எத்தனையோ பரிகாரங்களை, எத்தனையோ விதங்களில் செய்து பார்க்கின்றோம். சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது. இப்படி இருக்கும் பட்சத்தில், அவர்கள் இந்த முறையை பின்பற்றி பார்க்கலாம்.

karpooravalli 2

ஏனென்றால், கற்பூரவள்ளி செடிக்கு மருத்துவ குணம் எவ்வளவு அதிகமாக இருக்கின்றதோ, அதே அளவிற்கு அந்த வாசத்திற்கு எந்த ஒரு கெட்ட சக்தியும் நெருங்காது என்றும் சொல்லப்பட்டுள்ளது. கண்ணுக்குத் தெரியாத ஏதாவது பிரச்சினை இருந்தால் கூட, இந்த வாசத்திற்கு தெறித்து ஓடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

அதாவது, நன்றாக லாபத்தை தந்து கொண்டிருந்த தொழில் திடீரென்று முடக்கம் அடைந்து விட்டாலும், வீட்டில் கண்ணுக்கு தெரியாத கெட்ட சக்திகளின் மூலம், கண் திருஷ்டியின் மூலம், பிரச்சினைகள் இருந்தாலும், அதை சரி செய்ய சாம்பிராணி தூபம் போடுவதை நாம் வழக்கமாக வைத்திருப்போம். அந்த சாம்பிராணி தூபத்தில், இந்த கற்பூரவள்ளி இலைகளை சேர்த்து, அந்த வாசனையை வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ தூபமாக போட்டோமேயானால், பிரச்சனைகளில் இருந்து சுலபமாக விடுபடலாம்.

sambrani

கற்பூரவல்லி செடியில் இருந்து சில இலைகளை பறித்து, நன்றாக உலர வைத்து, பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளிலும், செவ்வாய்க் கிழமைகளிலும் நீங்கள் வழக்கம்போல் சாம்பிராணி தூபம் போடும் போது, அதில் ஒரு ஸ்பூன் இந்த கற்பூரவள்ளி இலை தூளையும் சேர்த்து, அந்தப் புகையை மூலை முடுக்குகளிலெல்லாம் காண்பித்து வர, பல நாள் தீராத இருந்த, பல பிரச்சனைகளும் தீரும்.

- Advertisement -

குறிப்பாக பண கஷ்டம், வீண் விரையம், வர வேண்டிய கடன் தொகை வரவில்லை, தொழில் முடக்கம் இப்படிப்பட்ட பண ரீதியான பிரச்சனைகளுக்கு சுலபமான தீர்வு தரும், சுலபமான பரிகாரம் தான் இது. இதோடு விட்டுவிடாமல் ஒரு சிறிய தொட்டியில், கற்பூரவள்ளி செடியை நட்டு வீட்டுவாசலில் வைத்தோமேயானால், வீடு சுபிட்சம் அடையும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

karpooravalli

அந்த செடியானது, செழிப்பாக வளர வளர உங்களது முன்னேற்றமும் செழிப்பாகும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. தண்ணீர் ஊற்றி பராமரிக்க முடியும் எனும் பட்சத்தில் இதை உங்களது வீட்டில் வளர்த்து வரலாம். நம்முடைய வீட்டிற்குள், கண்ணுக்குத் தெரியாத எந்த கெட்ட சக்தியையும் நுழைய விடாமல் பாதுகாக்கும் சக்தியும் இந்த செடிக்கு உண்டு, என்ற கருத்தை முன்வைத்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உப்பை இந்த முறைப்படி வைத்து, பூஜை செய்தால் மகாலட்சுமி வேண்டிய வரத்தை உடனே கொடுத்து விடுவாள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Karpooravalli ilai uses in Tamil. Karpooravalli leaf Tamil. Karpooravalli payangal Tamil. Karpooravalli uses Tamil. Karpooravalli ilai payangal.