கற்பூரத்தை இப்படியெல்லாம் கூட பயன்படுத்தலாமா? இத்தனை நாட்களாக இந்த டிப்ஸை எல்லாம் தெரிஞ்சுக்காமலே விட்டோமே.

karpuram
- Advertisement -

அடடா கற்பூரத்தில் இத்தனை பயன்பாடுகள் உள்ளதா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு சில சூப்பரான சிம்பிளான குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இறைவனுக்காக ஏற்றும் சூடம் என்று சொல்லக்கூடிய கற்பூரத்தின் மற்ற பயன்பாடுகளை நீங்களும் தெரிந்து வைத்துக் கொண்டு பயனடையுங்கள். குறிப்புக்கு செல்வோமா. கற்பூரத்தை வைத்து பின் சொல்லக்கூடிய குறிப்புகள் நிறைய பேருக்கு தெரிந்திருக்கலாம். தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதற்காகவே இந்த குறிப்பு. குறிப்பாக சமையலறை சிங்கில் கரப்பான் பூச்சி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும். இந்த டிப்ஸ் உங்களுக்காக இந்த பதிவின் இறுதியில்.

sudam

வீடு துடைப்பதற்கு நீங்கள் உங்கள் வீட்டில் எந்த லிக்விட் பயன்படுத்தினாலும் சரி, வீடு துடைக்க பயன்படுத்தும் லிக்விட் கலந்த தண்ணீரில் இரண்டு துண்டு கற்பூரத்தை நசுக்கி போட்டு கரைத்து விட்டு அந்த கற்பூரத் தண்ணீரில் வீட்டை துடைத்துப் பாருங்கள். வீடு எப்போதும் கோவில் போல கமகம வாசனையாக இருக்கும். (வீட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஈ கொசு தொல்லை அதிகமாக இருந்தால் அந்த இடத்தில் எந்த கற்பூர தண்ணீரை தெளித்து விட்டாலும் ஈ எறும்பு தொல்லை உடனே நீங்கிவிடும்.)

- Advertisement -

பூஜை அறையில் இருக்கும் அலமாரி, சமையலறையில் இருக்கும் மேடை அலமாரி, மற்ற இடங்களில் இருக்கும் அலமாரிகளை என்னதான் துடைத்து சுத்தம் செய்தாலும் ஒரு சில நாட்களில் அந்த இடத்தில் கண்ணுக்குத் தெரியாத சில சின்ன சின்ன பூச்சிகள், எறும்புகள் வரத் தொடங்கும். இப்படி அலமாரிகளை துடைக்கும் போது அந்த தண்ணீரில் இரண்டு துண்டு கற்பூரத்தை நொறுக்கிப் போட்டு கரைத்துக் கொள்ளுங்கள். கற்பூரம் சேர்த்து தண்ணீரில் ஒரு துணியை நனைத்து அந்த துணியால், அலமாரிகளை துடைத்தால் சின்ன சின்ன பூச்சிகள் எறும்புகள் தொல்லை வராமல் இருக்கும்.

computer-sambirani1

பூஜையறையில் பூஜை செய்யும் போது இந்த கம்ப்யூட்டர் சாம்பிராணி வத்தியை ஏற்றி வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். கம்ப்யூட்டர் சாம்பிராணி நிற்க வைத்துவிட்டு, அதன் மேலே சிறிய துண்டு உடைத்த கற்பூரத்தை வைத்துவிட்டு, அந்த கற்பூரத்தை ஏற்றி விடுங்கள். கம்ப்யூட்டர் சாம்பிராணியில் தானாக சுலபமாக நெருப்பு பிடித்துக்கொள்ளும்.

- Advertisement -

இதுபோல் தான் தீபம் ஏற்றுவதற்கு சிரமமாக இருந்தால் தீபத் திரியின் முனையில் கொஞ்சமாக கற்பூரத்தை வைத்து விட்டு அதன் பின்பு தீபம் ஏற்றுங்கள் தீப திரியில் சீக்கிரமே நெருப்பு பிடிக்கும்.

kungumam

நெற்றிக்கு இட்டுக் கொள்ளும் குங்குமம், சுவாமிக்கு வைக்கும் குங்கும டப்பாவில் ஒரு கற்பூரத்தை போட்டு வையுங்கள். குங்குமம் வண்டு பிடிக்காமல் இருக்கும். அதேசமயம் குங்குமம் வாசமாகவும் இருக்கும்.

cockroach1

கற்பூர டப்பாவில் இரண்டு மிளகை போட்டு வைத்தால், கற்பூரம் நீண்டநாட்களுக்கு பெரிய கட்டிகள் ஆகவே இருக்கும். சீக்கிரத்தில் கரைந்து போகாது.

shink1

இந்த எல்லா குறிப்பை விட மிக மிக முக்கியமான குறிப்பு என்ன தெரியுமா. தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு சிங்கிள் இருக்கும் ஓட்டையில் பாதி கற்பூரத்தை தூள் செய்து அப்படியே தூவி விட்டு விடுங்கள். கரப்பான் பூச்சி சமையலறைக்குள் வரவே வராது. கரப்பான் பூச்சி தொல்லை இருந்தாலும் அது படிப்படியாக குறைந்து விடும். மேலே சொன்ன குறிப்புகளில் உங்களுக்கு எது பயனுள்ளதாக இருக்கிறதோ அதை ட்ரை பண்ணி பாருங்க. உங்களுக்கு பிடிச்சிருந்தா ஃபாலோ பண்ணுங்க.

- Advertisement -