கார்த்திகை தீபத்தன்று செய்யக்கூடாத 3 தவறுகள்

sivan2
- Advertisement -

நாளைய தினம் திருக்கார்த்திகை தீபமானது கொண்டாடப்பட இருக்கின்றது. நம்முடைய வீடுகள் எல்லாம் தீப ஒளியில் அப்படியே ஜொலி ஜொலிக்கும். இந்த தீபத்திருநாளில் நம்முடைய வீட்டில் தவறியும் கூட இந்த மூன்று தவறுகளை செய்யக்கூடாது என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் நம்முடைய முன்னோர்கள்.

அது என்னென்ன தவறுகள் என்பதை நாமும் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா. அதற்காகத்தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு. கார்த்திகை தீபத்தன்று வீட்டில் இருக்கும் பெண்கள் மாதவிலக்கு ஆகிவிட்டால் என்ன செய்வது. இந்த கேள்வி நம்மில் நிறைய பேர் மனதில் இருக்கிறது. அதற்கு உண்டான பதிலையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

கார்த்திகை தீபத்தன்று செய்யக்கூடாத மூன்று தவறுகள்

முதல் தவறு. எக்காரணத்தைக் கொண்டும் கார்த்திகை தீபத்தன்று வீட்டில் விளக்கு ஏற்றாமல் வீட்டை பூட்டி விட்டு வெளியிடங்களுக்கு செல்லக்கூடாது. நீங்கள் இந்த கார்த்திகை தீபத்தன்று ஏதாவது ஆன்மீக ரீதியான வழிபாட்டிற்காக வெளியிடங்களுக்கு, கோவில்களுக்கு செல்வதாக இருந்தால் கூட, பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் அல்லது உங்கள் சொந்த பந்தங்கள் யாராவது ஒருவரை வீட்டுக்கு வரச் சொல்லி நிலை வாசலில் ஆவது கட்டாயம் இரண்டு விளக்கு ஏற்ற வேண்டும். உங்கள் வீடு கார்த்திகை தீபத்தன்று இருள் அடைந்து இருக்கவே கூடாது. இது முதல் விஷயம்.

இரண்டாவது விஷயம். கார்த்திகை தீபத்தன்று நீங்கள் வழிபாடு எதுவும் மேற்கொள்ளவில்லை என்றாலும், விளக்கு மட்டும் ஏற்றி வைத்துவிட்டு அசைவம் சாப்பிடக்கூடாது. இரவு நேரத்துக்கு மேல் கார்த்திகை தீபம் முடிந்து விட்டது என்று இரவு வெளியிடங்களுக்கு சென்றும் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது ரொம்ப ரொம்ப நல்லது.

- Advertisement -

இந்த கார்த்திகை தீபத்தன்று முடிந்தவரை அடுத்தவர்களிடம் கைநீட்டி கடன் வாங்காதீங்க. மளிகை கடையில் ஏதாவது பொருள் வாங்குவதாக இருந்தால் கூட, கடன் வைக்காமல் காசு கொடுத்து வாங்குங்க. இந்த நல்ல நாளில் கடன் வாங்குவது நல்ல விஷயம் அல்ல. இந்த தீபத்திருநாளில் நாம் செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்றால் மேல் சொன்ன இந்த மூன்று விஷயங்களையும் பின்பற்றுங்கள்.

மாதவிலக்கான பெண்கள் கார்த்திகை தீபத்தன்று விளக்கு ஏற்றலாமா?

மாதவிலக்கு, இது இயற்கையாக கடவுள் பெண்களுக்கு கொடுத்து இருக்கக்கூடிய ஒரு விஷயம். கார்த்திகை தீபத்தன்று உங்களுடைய வீட்டில் இருக்கும் பெண்கள் மாதவிலக்கு ஆகிவிட்டால் வீட்டில் விளக்கு ஏற்றலாமா, என்ற சந்தேகம் இருக்கும் அல்லவா.

- Advertisement -

ஒரு வீடு கார்த்திகை தீபத்தன்று இரண்டு இருக்கக் கூடாது என்று சொல்லி வைத்துள்ளார்கள். உங்க வீட்டுப் பெண்கள் மாதவிலக்கு ஆகிவிட்டால், வீட்டில் மற்றவர்கள் இருப்பார்கள் அல்லவா, அவர்கள் வீட்டில் தாராளமாக விளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாம். பூஜை அறையிலும் மற்றவர்கள் விளக்கேற்றலாம். ஒருவேளை உங்களுடைய வீட்டில் விளக்கு ஏற்ற வேறு யாரும் இல்லை.

அக்கம் பக்கம் வீட்டில் இருப்பவர்களும் உதவிக்கு வர மாட்டார்கள் எனும் பட்சத்தில், மாதவிலக்கான பெண்களே பூஜை அறைக்கு செல்லாமல், பூஜை அறையில் பயன்படுத்தும் நல்லெண்ணெய் விளக்கு திரி இதையெல்லாம் தொடாமல், விளக்கு ஏற்ற தேவையான பொருட்களை எல்லாம் புதுசாக கடையிலிருந்து வாங்கி, பூஜை அறை தவிற வீட்டின் மற்ற இடங்களில் விளக்கு ஏற்றலாம்.

ஆனால், இந்த மாதவிலக்கு சமயத்தில் பயன்படுத்திய மண் அகல் விளக்கு, எண்ணெய், திரி இவை எல்லாவற்றையும் மீண்டும் கொண்டு போய் பூஜை அறையில் வைத்து பயன்படுத்தக் கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த சலுகை மாதவிலக்கான பெண்களுக்கு கார்த்திகை தீபத்திற்கு மட்டும் உண்டு.

இதையும் படிக்கலாமே: சுக்கிர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்.

எக்காரணத்தைக் கொண்டும் கார்த்திகை தீபத்திருநாள் அன்று உங்களுடைய வீட்டை இருள் சூழ விடக்கூடாது. மின்விளக்குகள் இருந்தாலும் இந்த கார்த்திகை தீபத்தன்று கட்டாயம் வீட்டில் இரண்டு மண் நகல் விளக்குகள் ஆவது ஏற்றிய ஆக வேண்டும். ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவு உங்களுக்கு பயன்படும் படி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம். அண்ணாமலையானே போற்றி போற்றி.

- Advertisement -