கார்த்திகை மாதம் இந்த பொருட்களை தானம் செய்யலாமா? கார்த்திகை மாதத்தில் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் என்ன? கார்த்திகை மாத சிறப்புகள்!

murugan-vilakku
- Advertisement -

கருமேகங்கள் திரண்டு அதிக அளவு மழையை பொழியச் செய்யும் இந்த கார் காலத்தில் காந்தள் பூக்கள் மலர கந்தன் அருள் பெற தோன்றிய கார்த்திகை மாதத்தில் சில பொருட்களை நாம் தானம் செய்யும் பொழுது அதிர்ஷ்ட யோகம் உண்டாகும். மேலும் இந்த மாதத்தில் செய்யக் கூடிய சில எளிய வழிபாடுகளும், பரிகாரங்களை பற்றிய தகவல்களையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

vilakku

பொதுவாக கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்வது சிறப்பான பலன்களைக் கொடுக்கும் என்பது தொன்று தொட்டு வரும் வழக்கமாகும். எப்பொழுதும் நம் வீட்டில் நாம் பயன்படுத்திய விளக்கை மற்றவர்களுக்கு தானம் கொடுப்பது முறை அல்ல. புதிய விளக்கு வாங்கி மற்றவர்களுக்கு அதனை தானமாக இந்த கார்த்திகை மாதத்தில் கொடுத்து வந்தால் பிரம்மஹத்தி தோஷம் கூட நீங்கும் என்பது நியதி. அதே போல விளக்கு மட்டும் அல்லாமல் வெண்கல பாத்திரம், தானியம், பழங்கள் போன்றவற்றையும் நீங்கள் இல்லாத மற்றும் இயலாதவர்களுக்கு தானம் கொடுத்து வந்தால் அள்ள அள்ள குறையாத செல்வ சேர்க்கை உண்டாகும்.

- Advertisement -

கார்த்திகை மாதத்தில் கோவிலுக்கு சென்று அங்கு சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டால் அளவிட முடியாத அளவிற்கு பலன்களை பெறலாம் நீங்கள் வேண்டிய வேண்டுதல்கள் அப்படியே நிறைவேறும் சக்தி உண்டு. கார்த்திகை மாதத்தில் விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் திருமணம் செய்வதற்கு உரிய மாதமாக புகழப்படுகிறது. இம்மாதத்தில் உடல் சேர்க்கை, மன சேர்க்கை போன்றவற்றில் எந்த விதமான பிரச்சனைகளும் ஏற்படாது என்கிறது சாஸ்திரம்.

karunthulasi2

கார்த்திகை மாதத்தில் கார்த்திகேயனை மட்டுமல்லாமல் விஷ்ணுவுக்கு துளசி இலைகளால் அர்ச்சனை செய்வது அசுவமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும். மேலும் சிவனுக்கு நெய்யினால் அபிஷேகம் புரிந்து, வில்வ இலை மற்றும் மரிக்கொழுந்து ஆகியவற்றால் அர்ச்சனை செய்து வந்தால் குடும்பத்தில் இருக்கும் சண்டை, சச்சரவுகள் அனைத்தும் நீங்கும். மாதங்களில் கார்த்திகை மாதம் மிகவும் சிறப்பான மாதமாக இருந்து வருகிறது. இம்மாதத்தில் ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்தின் பொழுது எழுந்து குளித்து முடித்து விட வேண்டும்.

- Advertisement -

சூரியன் உதயமாகும் பொழுது நீராடுபவர்கள் எல்லா புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய பலனைப் பெறுவார்கள் என்கிற நம்பிக்கையும் உண்டு. கார்த்திகை மாதத்தில் மது, மாமிசம் போன்ற எந்த வகையான கெட்ட பழக்க வழக்கங்களையும் கட்டுப்படுத்திக் கொண்டு முழுமையாக இறைவனுக்கு விரதம் அனுஷ்டித்து வந்தால் சகல பாவங்களும் நீங்கி மோட்சம் அடைவார்கள். இம்மாதத்தில் தேவையற்ற ஆசைகளுக்கு இடம் கொடுத்தால், மற்ற உயிர்களுக்கு தீங்கு இழைக்க நினைத்தால் அடுத்த பிறவியில் நீங்கள் புழு, பூச்சிகளை பிறக்க கூடும் என்று பத்ம புராணம் கூறுகிறது.

sunrise

அத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்த கார்த்திகை மாதத்தில் தினமும் விளக்கேற்ற முடியாவிட்டாலும் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய முக்கிய விரத நாட்களில் மட்டும் வீட்டில் விளக்கேற்றி வந்தால் எல்லா நலன்களையும் பெறலாம். பொதுவாக கார்த்திகை மாதத்தின் முடிவு மற்றும் தொடக்கத்தில் கார்த்திகை நட்சத்திரம் வந்தால் அது இன்னும் சிறப்புகளை கொடுக்கும். குழந்தையில்லாதவர்கள் முருகனுக்கு சந்தன அபிஷேகம் செய்வதன் மூலம் நிச்சயம் குழந்தை பேறு உண்டாகும்.

murugan-silai-abishegam

குழந்தை பெறுவதில் தடை, திருமணத்தில் தடை போன்ற எல்லா தடைகளும் நீங்க வேதம் அறிந்த ஒருவருக்கு வெண்கலம் அல்லது வெள்ளி விளக்கு புதிதாக வாங்கி அதில் நெய் ஊற்றி தீபமேற்றி தீப ஜோதியுடன் தானம் கொடுக்க வேண்டும். கார்த்திகையில் மேற்கொள்ளும் கிரிவலத்தின் போது நீங்கள் மழையில் நனைய நேர்ந்தால் தேவர்களின் ஆசீர்வாதம் கிட்டுவதாக ஐதீகம் உண்டு. இப்படி கார்த்திகையின் சிறப்புகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

- Advertisement -