சூரியனின் பார்வையால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்

suriyan jathagam
- Advertisement -

நவகிரகங்களில் அதிபதியாக திகழக்கூடியவர் சூரியன். இவர் தற்போது துலாம் ராசியில் சஞ்சரித்து வருகின்றார் வரும் நவம்பர் 17 முதல் துலாம் ராசியில் இருந்து விருச்சகத்துக்குள் செல்கிறார். இந்த கிரக மாற்றத்தினால் 12 ராசிகளும் பல்வேறு பலன்களை அடையும். அதில் அதிர்ஷ்டத்தை பெறப் போகும் மூன்று ராசிகளை பற்றி ஜோதிடம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாகவே ஒவ்வொரு கிரகத்தின் மாற்றமும் 12 ராசிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இது ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கும். ஒரு சில ராசிகளுக்கு பாதகமான சூழ்நிலையை உருவாக்கும். அந்த வகையில் சூரியனின் இந்த பெயர்ச்சியானது சில ராசிகள் நற்பலன்களை பெற உள்ளது. பொதுவாக செவ்வாய்யும், சூரியனும் இணக்கமான ராசிகள். இதனால் சில ராசிகள் நன்மையை அடையப் போகிறார்கள். அந்த ராசிக்காரர்களை பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

சிம்மம்

சூரியனின் இந்த பெயர்ச்சி காரணமாக சிம்ம ராசிக்காரர்கள் பலவிதமான யோகங்களை பெறப் போகிறார்கள். இவர்களுடைய ராசியில் சூரியன் இருப்பதால் வண்டி, வாகனம் போன்றவற்றை வாங்கக் கூடிய யோகம் இவர்கள் வந்து விட்டது. மேலும் புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் நினைத்த மாதிரியான வேலைகள் கிடைக்கும். அது மட்டும் இன்றி இவர்கள் வாழும் மற்றும் பணி செய்யும் இடத்தில் இவர்களின் மதிப்பு பல மடங்கு உயரும். சூரியனின் இந்த பெயர்ச்சி இவர்களுடைய வாழ்க்கையில் புதிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்றே சொல்லலாம்.

விருச்சகம்

இந்த ராசிக்காரரின் முதல் வீட்டிலேயே சூரியன் சந்திரன் சஞ்சரிக்கிறார். ஆகையால் இவர்களுக்கு சந்தோஷமும் மகிழ்ச்சியும் பொங்கி வழிய கூடிய காலக்கட்டமாக இது பார்க்கப்படுகிறது. தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தை அடைவார்கள். சின்ன சின்ன தொழில் செய்பவர்கள் கூட அதை விருத்தி படுத்துவதற்கான முயற்சியை இந்த நேரத்தில் எடுத்தால் அது பல மடங்கு பலனை தரக் கூடியதாக இருக்கும். அது மட்டும் இன்றி பயணங்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கதவை தட்டும். தயாராக காத்திருங்கள்.

- Advertisement -

மகரம்

சூரியனின் இடப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறக் கூடிய ராசிகளில் மகர ராசியும் முக்கியமானவர். சொந்தமாக தொழில் செய்பவர்கள், துணை தொழில் அதாவது சைடு பிசினஸ் செய்பவர்கள் என அனைவருக்கும் தொழில் விருத்தி ஆகக் கூடிய காலக்கட்டம் இது. இதனால் வங்கியில் சேமிப்பு பல மடங்கு உயரும். இது வரை இருந்த உடல் உபாதைகள் குறைய கூடிய காலகட்டம் இது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை பெருகும். இன்பத்திற்கும் பணவரவிற்கும் தடையில்லாமல் சந்தோஷமாக வாழக் கூடிய காலம் இது.

இதையும் படிக்கலாமே: மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்

சூரியனின் இடப்பெயர்ச்சியால் நன்மை அடையக் கூடிய ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இந்த பதிவில் உள்ள கருத்துக்கள் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துகளின் அடிப்படையில் சேகரிக்கப்பட்டது. கிரகங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப இதில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளுவோம்.

- Advertisement -