பெண்களுக்கு எப்போதுமே அழகான முடியின் மேல் ஒரு ஆசை உண்டு. எல்லோருக்கும் அவரவர் விரும்பியபடி நீளமான அடர்த்தியான முடி கிடைப்பது கிடையாது. உங்களுக்கும் அழகான நீளமான முடி வேண்டும் என்ற ஆசை இருந்தால், இந்த ஹேர் பேக்கை ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா முடியே வளராத தலையில் கூட, ஒரு சில நாட்களில் நல்ல முடி வளர்ச்சியை பார்க்க முடியும். அந்த அளவிற்கு பயனுள்ள ஒரு ஹேர் பேக் தான் இது. இந்த ஹேர் பேக்கை போடுவதன் மூலம் டிரையாக இருக்கும். முடி சாஃப்ட்டாக சில்க்கியாக மாறிவிடும். முடி உதிர்வு குறையும். முடி அடர்த்தியாக வளரும். முடியின் வேர்க்கால்கள் வலுவாகும்.
இந்த ஹேர் பேக் தயார் செய்ய நமக்கு 3 பொருட்கள் தேவை. கற்றாழை ஜெல், விட்டமின் E கேப்ஸ்யூல், ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் இப்படி உங்கள் வீட்டில் எந்த எண்ணெய் இருக்கிறதோ, அந்த எண்ணெயை இந்த குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இயற்கையாக கற்றாழைச் செடியிலிருந்து எடுக்கப்பட்ட ஆலோவேரா ஜெல் கிடைத்தால் மிகவும் நல்லது. இயற்கையாக கற்றாழை ஜெல் கிடைக்காத பட்சத்தில், கடையில் வாங்கிய கலர் இல்லாத அலோவேரா ஜெல்லை பயன்படுத்தலாம். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து 1/4 கப் அளவு ஆலுவேரா ஜெல் போட்டு, அதில் 2 விட்டமின் E கேப்ஸ்யூல், உள்ளே இருக்கும் ஜல்லை மட்டும் சேர்த்து, 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக அரைக்க வேண்டும். இது கொழ கொழவென ஒரு ஜெல் பக்குவத்தில் நமக்கு கிடைக்கும். இந்த ஜல்லை ஒரு கிண்ணத்தில் மாற்றிக்கொள்ள வேண்டும்.
உங்கள் தலையில் எண்ணெய் வைக்காமல் ட்ரையாக இருந்தாலும், இந்த பேக்கை அப்ளை செய்து கொள்ளலாம். தலையில் எண்ணெய் இருந்தாலும் இந்த பேக்கை அப்ளை செய்து கொள்ளலாம். இந்த பேக்கை முதலில் நன்றாக ஸ்கால்ப்பில் படும்படி போட்டு 2 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். பின்பு மீதம் இருக்கும் ஜெல்லை முடியின் நுனி வரை ஹர்பேக் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு தலையை கொண்டை கட்டிக்கொண்டு, 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். அடுத்து மைல்டான ஷாம்பு போட்டு தலையை அலசிக்கொண்டால், உங்களுடைய தலைமுடி ஷைனிங்காக மாறி இருக்கும். தலை கசக்கும் போதே முடி உதிர்வது குறைவதை உங்களால் நிச்சயம் பார்க்க முடியும்.
வாரத்தில் ஒரு நாள் இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தினால் போதும். நிறைய பேருக்கு விட்டமின் E கேப்ஸ்யூல், தலைமுடிக்கு பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் இருக்கிறது. அளவோடு பயன்படுத்தலாம். தாராளமாக வாரத்தில் ஒரு நாள் இப்படி கற்றாழை ஜெல்லோடு சேர்த்து பயன்படுத்தும் போது உங்களுடைய தலைமுடி வளர்வதற்கு இந்த கேப்சூல் உதவி புரியும்.
நிறைய முடி சீக்கிரமாக வளர வேண்டும் என்பதற்காக விட்டமின் E கேப்ஸ்யூல் அதிகமாகவும் பயன்படுத்தக்கூடாது. அடிக்கடியும் பயன்படுத்தக் கூடாது. இந்த மாத்திரையை நீங்கள் சாப்பிடுவதாக இருந்தால் கட்டாயம் மருத்துவரின் பரிந்துரையோடு தான் உள்ளுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
வழக்கம்போல எப்போதும் சொல்வது தான் ஹேர் பேக் என்பது ஒரு பாகம் முடி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். மற்றொரு பகுதி முடி வளர்ச்சியானது நாம் உள்ளுக்கு எடுத்துக் கொள்ளக்கூடிய உணவில் தான் உள்ளது. என்னதான் தலைக்கு மேலே ஹேர் பேக்கை போட்டு வந்தாலும், நம்முடைய உடலில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் முடி வளர்வதில் சிறிது தாமதம் ஏற்படும். ஆகவே ஊட்டச்சத்து நிறைந்த உணவோடு சேர்த்து ஹர்பாக்கை போடும்போது இரட்டிப்பு பலன் ஒரு சில நாட்களில் சீக்கிரம் கிடைக்கும் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்யலாம்.