தாம்பு கயிறு போல உங்களுடைய முடியை தடிமனாக வளர்க்க கரிசலாங்கண்ணி இலையை தலையில் இப்படி போடணும்.

hair10
- Advertisement -

ஒவ்வொரு முடியும் திக்காக அறுபடாமல் வளரவேண்டும் என்றால் நாம் எந்த ஹேர் பேக் பயன்படுத்தலாம் என்பதை பற்றிய ஒரு டிப்ஸ் தான் இந்த குறிப்பின் மூலம் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. முடி விழுந்த இடத்தில் உடனடியாக மீண்டும் முடிகள் வளர வேண்டும். மீண்டும் அந்த முடி உதிராமல் வளர வேண்டும். அப்போதுதான் தலைமுடி அடர்த்தியாக பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இயற்கையாக கிடைக்கும் இரண்டு கீரை வகைகளை வைத்து தான் இந்த ஹேர் பேக்கை நாம் தயார் செய்யப் போகின்றோம்.

நம்மில் நிறைய பேருக்கு தெரியும். கரிசிலாங்கண்ணி முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவக்கூடிய ஒரு கீரை வகை என்பது. கருவேப்பிலை பற்றி சொல்லவே தேவையில்லை. முடி கருகருவென வளர இந்த கருவேப்பிலை மிக மிக அவசியம் தேவை. கரிசலாங்கண்ணி ஒரு கைப்பிடி அளவு, கறிவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு, இந்த இரண்டு பொருட்களையும் எடுத்து தண்ணீரில் நன்றாக அலசி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுது போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அரைத்த இந்த விழுதை ஒரு காட்டன் துணியில் ஊற்றி வடிகட்டினால் கரும்பச்சை நிறத்தில் சாறு நமக்கு கிடைத்திருக்கும். இந்த சாறுடன் 2 டேபிள்ஸ்பூன் தயிர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். நமக்கு தேவையான சூப்பரான ஹேர் பேக் தயார். இந்த ஹேர் பேக் லிக்விட் ஆகத்தான் இருக்கும். உங்களுடைய ஸ்கால்ப்பில் இந்த ஹேர் பேக்கை போட்டு நன்றாக மசாஜ் செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு முடியின் நுனிப்பகுதி வரை இந்த ஹேர் பேக்கை போட்டு முடியை கொண்டை கட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

20 நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு உங்களுடைய தலையை நன்றாக அலசி விட்டால் போதும். முடி கருகருவென பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருக்கும். கரிசலாங்கண்ணி இலை என்பது கீரை கடைகளில் நமக்கு கிடைக்கும். கீரை விற்பவர்களிடம் முன்கூட்டியே சொல்லி வைத்து வாங்கி வைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட இந்த ஹேர் பேக்கை நீங்கள் பயன்படுத்தி வரலாம். இளநரையை தடுக்கவும் இந்த ஹார் பேக் பயனுள்ளதாக இருக்கும். தாம்பு கயிறு போல உங்களுடைய முடி வளர வேண்டுமென்றால் இந்த ஹேர் பேக் ட்ரை பண்ணி பாருங்க.

தற்போது வெயில் காலம் என்பதால் நம்முடைய முடியில் அழுக்கு நிறைய படியும். வியர்வை தண்ணீர் நிறைய இருக்கும். வாரத்தில் இரண்டு நாட்கள் கட்டாயமாக தலைக்கு ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு குளித்து தலையில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். தலையில் அழுக்கு ரொம்பவும் படிந்தால் முடி உதிர்வு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். வெய்யில் காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைந்தாலும் தலைமுடி உதிரும். நிறைய தண்ணீர் குடிப்பது தான் நம்முடைய முடிக்கும் சருமத்திற்கும் நல்லது.

- Advertisement -