- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilநல்ல கலரா தான் பா இருந்தேன் என்னன்னு தெரியல திடீர்னு கறுத்து போய்ட்டேன். இப்படி நீங்க...

நல்ல கலரா தான் பா இருந்தேன் என்னன்னு தெரியல திடீர்னு கறுத்து போய்ட்டேன். இப்படி நீங்க பீல் பண்றீங்களா அப்போ இந்த கிரீம் யூஸ் பண்ணி பாருங்க நம்ப முடியாத அதிசயம் நடக்கும்.

- Advertisement -

சிலர் பார்க்க நல்லா அழகா நல்ல கலரா இருப்பார்கள். கொஞ்ச நாள் கழித்து நாம் பார்த்தால் கறுத்து போய் அடையாளமே தெரியாமல் மாறி இருப்பாங்க காரணம் கேட்டா, அவங்களும் என்னன்னு தெரியல அப்படின்னு பீல் பண்ணுவாங்க. இது போல டயலாக் நம்ம லைஃப்ல நிறைய பேர் சொல்லியும் கேள்விப்பட்டிருப்போம். ஏன் நமக்கே கூட இந்த மாதிரி நடந்திருக்கும். இந்த மாதிரி ஸ்கின் கலர் மாறினவர்களுக்கான ஒரு சூப்பர் டிப்ஸ் தான் இந்த அரிசி மாவு பேக். பச்சரிசியில் என்னென்ன வகை சமைக்கலாம் அப்படின்னு எடுத்த ஒரு நாலு பக்கத்துக்கு எழுதுற அளவுக்கு இருக்கும். ஆனா இந்த பச்சரிசி மாவு வச்சு வெள்ளையாகலாமா அப்படின்னு கேட்டா கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் தான்.

இந்த பச்சரிசி மாவுல நிறத்தை மாத்துற தன்மை அவ்வளவு இருக்கு அப்படிங்கறது இந்த பேக்கை நீங்க யூஸ் பண்ண பிறகு நீங்களே சொல்ல ஆரம்பிச்சிருவீங்க. இது கூட சிகப்பழகை மேலும் கூட்ட கூடிய பீட்ரூட், தோல்களின் செல்களை புதுப்பிக்க கூடிய தக்காளி சாறு, இவையெல்லாம் சேர்த்த ஒரு பேக்கை தான் இப்போது நாம் செய்யப் போகிறோம். அதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த பேக் செய்வதற்கு கால் கப் பச்சரிசி நன்றாக அலசிய பிறகு எடுத்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். அதன் பிறகு ஒரு பீட்ரூட் தோல் சீவி எடுத்து வடிகட்டியில் போட்டு சாறு எடுத்து ஒரு பவுலில் தனியாக வைத்து விடுங்கள். இப்போது இரண்டு மணி நேரம் ஊறிய அந்த அரிசியை மிக்ஸி ஜாரில் போட்டு அரிசி ஊறிய தண்ணீரே சிறிதளவு ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளுங்கள். இதன் பிறகு ஒரு வடிகட்டி கொண்டு இந்த அரைத்த மாவை ஊற்றி வடிகட்டினால் அதில் இருந்து வடியும் தண்ணீரை மட்டும் வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். கடைசியாக மாவு திப்பி போல் தங்கி இருக்கும் அது தேவை இல்லை.

இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு சின்ன கடாயை வைத்து அதில் இந்த அரிசி மாவு வடித்த தண்ணீரை ஊற்றி ஒரு இரண்டு நிமிடம் கைவிடாமல் கிண்டி கொண்டே இருந்தால், கட்டியாக கஞ்சி பதத்திற்கு வந்து விடும்.அதன் பிறகு நீங்கள் துருவி சாறு எடுத்து வைத்த பீட்ரூட் ஜூஸை அதில் சேர்த்து மேலும் ஒரு இரண்டு நிமிடம் கிளறி விட்டால் போதும் நல்ல ஒரு பிங்க் கலர் கிரீம் உங்களுக்கு கிடைத்து விடும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். இதில் ஒரு இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து ஒரு பாதி தக்காளி பழ ஜூஸையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பேக் குளிப்பதற்கு ஒரு அரை மணி நேரம் முன்பு உங்கள் முகம் கை கால் முடிந்தால் உடல் முழுவதுமே கூட தேய்த்துக் கொள்ளலாம். அப்படி தேய்ப்பதாக இருந்தால் கிரீமின் அளவை சற்று கூடுதலாக எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு தக்காளி பழத்தை முழுவதுமாக எடுத்து ஜூஸ் பிழிந்து இதில் சேர்த்த பிறகு பயன்படுத்தி கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: உங்க கண்ண சுத்தி கருப்பு துணி கட்டின மாதிரி கருவளையம் படிந்து போய் இருக்கா. இந்த ஒரு பொருளை வைத்தே, நாளே நாளில் கருவளையம் இருந்த தடம் இல்லாம செஞ்சிடலாம். அது எப்படின்னு பாக்கலாமா?

இந்த பச்சரிசி பீட்ரூட் சேர்த்த பேக்கை நீங்கள் ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து தேவை படும் போது தக்காளி சாறு மட்டும் சேர்த்து உபயோக்கலாம். இதை முதல் முறை தேய்த்து குளித்ததுமே உங்கள் நிறம் மாறி இருப்பதை இருப்பதை நன்றாக உணர்வீர்கள்.

சற்று முன்