வில் போல வளைந்த அழகிய புருவமும், கரு கருவென வளர்ந்த இமையும் வேண்டுமா? அப்படியானால் உங்களுக்கான பதிவு தான் இது.

eye-brow-lashes
- Advertisement -

நாம் என்னதான் முகத்திற்கு மேக்கப் போட்டு தலை முடியை சீவி அலங்காரம் செய்து, நல்ல அழகழகான புடவை, நகை என அழகு படுத்திக் கொண்டாலும், பெண்களுக்கு அந்த முகத்தின் அழகை தனியாக எடுத்துக் காட்டுவது அவர்களின் புருவமும், இமையும் தான். அதனால் தான் இன்றைய சூழலில் முகத்திற்கான மேக்கப் போட பார்லர் எப்போதாவது ஒரு தரம் போனாலும் கூட, இந்த புருவ முடியை திரெட்டிங் செய்வது மட்டும், மாத மாதம் சரியாக செய்து விடுகிறார்கள். அந்த அளவிற்கு முகத்தின் அழகை எடுத்து காட்டும் சிறப்பு இந்த புருவத்திற்கும், இமைக்கும் உண்டு.

ஒரு சிலருக்கு இயற்கையிலே நல்ல அடர்த்தியான புருவம், இமை முடிகள் இருக்கும். ஆனால் பெரும்பாலோனருக்கு அப்படி இருப்பதில்லை. இவர்கள் இதற்கென ஐப்ரோ பென்சில், மை இதைப் போன்றவைகளை உபயோகப்படுத்துகிறார்கள். இன்னும் சிலர் முடி வளர அதிக அளவு கெமிக்கல் கலந்த கிரீம்களையும் உபயோகிக்கிறார்கள். ஆனால் இனி நீங்கள் இதற்காக அதிக அளவில் செலவு செய்ய வேண்டாம். வீட்டிலிருக்கும் மிக எளிமையான பொருட்களைக் கொண்டே புருவம், இமை முடிகளை அழகாக வளர்த்து விடலாம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்: விளக்கெண்ணெய் – 1 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 1ஸ்பூன், ஆலிவ் எண்ணெய் -1ஸ்பூன், விட்டமின் ஈ கேப்ஸ்யூல் – 1.

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு விளக்கெண்ணெய், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய், (இந்த எண்ணெய்கள் மூன்றும் நல்ல சுத்தமானதாகவும், நல்ல தரமானதாகவும் இருக்க வேண்டும்). இத்துடன் ஒரே ஒரு விட்டமின் ஈ கேப்ஸ்யூல் சேர்த்து, நன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு ஜெல் போல மாறி வரும்.

- Advertisement -

இதை தினமும் இரவு தூங்கும் முன் உங்கள் முகத்தை கழுவிய பிறகு, ஒரு நல்ல சாப்ட்டான துணியை கொண்டு நன்றாக ஈரம் இல்லமால் துடைத்த பிறகு, இந்த ஜெல்லை புருவதிற்கு மீதும், இமை முடிகளின் மீதும் தடவி வாருங்கள். இதை ஜெல்லை ஒரு வாரம் வரை பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். இது தீர்ந்த பிறகு இதே போல மறுபடியும் செய்து வைத்து கொள்ளுங்கள்.

இந்த ஜெல்லை தொடர்ந்து தேய்த்து வர வேண்டும். ஒரு நாள், இரண்டு நாள் மட்டுமே தேய்த்து விட்டு முடி வளரவில்லையே என்று நினைக்கக் கூடாது. இதை குறைந்தது ஒரு மாதம் வரை தொடர்ந்து தேய்த்து வந்தால் தான் இதற்கான ரிசல்ட் தெரியும். இதில் முக்கியமான ஒன்று தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் ஆயில் இவை அனைத்துமே கலப்படம் இல்லாத தரமான எண்ணெய்யாக இருக்க வேண்டும். இனி நீங்களும் இதே போல செய்து உங்கள் புருவ, இமை மூடிகளை, அழகாக வளர்த்து மேலும் உங்கள் முகத்தை அழகாக்கி கொள்ளுங்கள்.

- Advertisement -