10 நிமிடத்தில் கறி சுவையை மிஞ்சும் கருணைக்கிழங்கு வறுவல் எப்படி செய்வது? இது தெரிஞ்சா இனி கருணைக்கிழங்கு வாங்கினாலே இப்படித்தான் செய்வீங்க!

- Advertisement -

சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு என்றெல்லாம் கூறப்படும் இந்த கிழங்கு வகை ஒரு விதமான நாக்கு அரிப்பு தன்மையை ஏற்படுத்தும் என்பதால் யாரும் இதனை நெருங்குவது இல்லை ஆனால் இதன் சுவையை மிஞ்சிய ஒரு கிழங்கு இருக்கவே முடியாது. கருணைக்கிழங்கை இந்த மாதிரி செஞ்சு பாருங்க அரிக்கவும் செய்யாது, சுவையும் அட்டகாசமாக இருக்கும். கருணைக்கிழங்கு வறுவல் செய்து கொடுத்தால் இன்னும் கொஞ்சம் சாப்பாடு போடுங்க என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு ருசியாக இருக்கப் போகிறது. இந்த கருணைக்கிழங்கு வறுவல் சுலபமாக எப்படி செய்யலாம்? என்பதை இனி தொடர்ந்து இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

கருணைக்கிழங்கு வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:
கருணைக்கிழங்கு – அரை கிலோ, சமையல் எண்ணெய் – தேவையான அளவு, குழம்பு மிளகாய் தூள் – ரெண்டு டீஸ்பூன், சிக்கன் 65 மசாலா – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், புளி கரைசல் – ரெண்டு டீ ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – தேவையான அளவு, கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

கருணைக்கிழங்கு வறுவல் செய்முறை விளக்கம்:
முதலில் கருணைக்கிழங்கை தோல் எல்லாம் நன்கு சீவி எடுத்து கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். கருணைக்கிழங்கை சீவும் பொழுது கைகள் அரிக்கும் என்பதால் கைகளில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள். சுத்தம் செய்து வைத்த கருணைக்கிழங்கை பெரிய பெரிய துண்டுகளாக பட்டை பட்டையாக நறுக்கி அதை குக்கரில் அல்லது ஏதாவது ஒரு பாத்திரத்தில் போட்டு ஐந்து நிமிடம் முக்கால் பாகம் வேக எடுத்துக் கொள்ள வேண்டும். குக்கரில் ஒரு விசில் விட்டு எடுத்தாலே சரியாக இருக்கும். கருணைக்கிழங்கை வேக வைக்கும் பொழுது கால் ஸ்பூன் மஞ்சள் தூள், கால் ஸ்பூன் உப்பு போட்டு வேக வையுங்கள்.

குழம்பு மிளகாய்த்தூள் மற்றும் சிக்கன் 65 மசாலா தேவையான அளவிற்கு உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். திக்கான புளி பேஸ்ட் சேர்த்து கைகளால் பேஸ்ட் போல கரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் கொஞ்சம் போல நீங்கள் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். மீன் வறுவலுக்கு செய்யும் பொழுது மசாலா எப்படி இருக்குமோ, அந்த அளவிற்கு இருந்தால் சரியாக இருக்கும். பின்னர் ஒவ்வொரு கருணைக்கிழங்கு துண்டுகளையும் எடுத்து மசாலா தடவி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

புளி பேஸ்ட் சேர்த்துள்ளதால் கருணைக்கிழங்கில் இருக்கும் அரிப்பு தன்மையை நீக்கி நல்ல ஒரு சுவையை கொடுக்கும். மசாலா தடவிய கருணைக்கிழங்கை பத்து நிமிடம் அப்படியே ஊற விட்டு விடுங்கள். 10 நிமிடத்திற்கு பிறகு ஒரு நான்ஸ்டிக் பேன் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நாலு டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய்யை சுற்றிலும் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் ஒரு கொத்து கருவேப்பிலையை போட்டு பொரிய விடுங்கள். கருவேப்பிலையின் வாசம் சேரும் பொழுது ரொம்பவே ருசியாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
கமகமக்கும் மணத்துடன் டேஸ்டியான ‘கடலைப்பருப்பு சட்னி’ இப்படி அரைத்து பாருங்க, இனி சட்னிக்கு கடலை பருப்பை தான் அதிகமா தேடுவீங்க!

இப்போது ஒவ்வொரு துண்டுகளையும் எடுத்து பரப்பி வையுங்கள். சுற்றிலும் எண்ணெயை விடுங்கள். ஒரு ஐந்து நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். ஒரு புறம் நன்கு சிவக்க வெந்ததும், மறுபுறம் திருப்பி போடுங்கள். அவ்வளவுதான் இதை எடுத்து சுடச்சுட சாதத்துடன் பரிமாறி பாருங்கள், அட்டகாசமாக இருக்கும். இனி இதே மாதிரி தான் நீங்கள் கருணைக்கிழங்கு வறுவல் செய்ய ஆரம்பிப்பீங்க. அந்த அளவிற்கு டேஸ்டியா இருக்கக்கூடிய இந்த கருணைக்கிழங்கு வறுவல் ரெசிபியை இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -