கருணைக்கிழங்கு வாங்கினால் ஒரு முறை அதில் இப்படி பச்சடி செய்து பாருங்க. சாப்பாட்டுக்கு பச்சடியா அல்லது பச்சடிக்கு சாப்பாடா என்று தெரியாத அளவிற்கு ருசியாக தொண்டைக்குள் இறங்கும்.

karunaikizhangu pachadi
- Advertisement -

பச்சடி என்று சொன்னாலே வெள்ளரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம் போன்றவற்றை வைத்து செய்வதுதான் பெரும்பாலும் நம் ஞாபகத்திற்கு வரும். ஆனால் பிடி கருணைக்கிழங்கை வைத்து ஒரு அருமையான பச்சடி ரெசிபியை செய்ய முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். அதை தெரியாதவர்கள். இந்த சமையல் குறிப்பு பதிவில் இந்த பச்சடி ரெசிபி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

செய்முறை

இந்த பச்சடி செய்ய கால் கிலோ பிடி கருணை வாங்கி தண்ணீரில் நன்றாக அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள். இதன் மேல் இருக்கும் மண் அனைத்தும் நீங்க வேண்டும். அதன் பிறகு ஒரு குக்கரில் சேர்த்து கிழங்கு போகும் வரை தண்ணீர் ஊற்றி நான்கு விசில் விட்ட பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

குக்கர் விசில் முழுவதுமாக இறங்கிய பிறகு மூடியை திறந்து கருணைக்கிழங்கு தோல் உரித்து ஒரு கிண்ணத்தில் சேர்த்து கரண்டி வைத்து மசித்து கொள்ளுங்கள். கிழங்கு கொஞ்சம் ஒன்றும் பாதியுமாக இருக்க வேண்டும். இப்போது இந்த கிழங்கில் ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து தண்ணீரை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், கால் டீஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து வைத்து விடுங்கள். இந்த பிடிகருணையில் சேர்க்க ஒரு மசாலாவை தயார் செய்ய வேண்டும்.

அதற்கு மிக்ஸி ஜாரில் மூன்று டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவலை சேர்த்த பிறகு அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி லேசான கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த விழுதை நாம் ஏற்கனவே கலந்து வைத்திருக்கும் கிழங்கு புளித்தண்ணீரில் சேர்த்து மீண்டும் ஒரு முறை கலந்து வைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் கடாய் வைத்து சூடானவுடன் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு ஒரு வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வெங்காயம் ஓரளவுக்கு வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து கொஞ்சமாக உப்பையும் சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு நான்கு காய்ந்த மிளகாயை சின்னதாக கிள்ளி சேர்த்த பின்பு நாம் ஏற்கனவே கலந்து வைத்த கிழங்கு மசாலாவை இதில் சேர்த்து இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கலந்து 10 நிமிடம் வரை கொதிக்க விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: இடியாப்பத்தை இப்படி செய்யுங்க, இதை செய்யறது இவ்வளவு ஈஸியான நீங்களே ஷாக் ஆயிடுவீங்க. மாவு பிசையாம இட்லி பாத்திரத்தில் வேக வைக்காம சட்டுனு செஞ்சு முடிச்சிடலாம். அப்புறம் என்னங்க இனி டெய்லி இடியாப்பம் செய்ய வேண்டியது தானே.

இதை இடையிடையே கலந்து விட வேண்டும். அப்படி இல்லை என்றால் கிழங்கு அடிபிடித்து விடும். 10 நிமிடம் கழித்து புளித்தண்ணீர் எல்லாம் நன்றாக வற்றி கிழங்கு வெந்து பச்சடி பதத்திற்கு வந்திருக்கும். இப்போது அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த பச்சடிக்கு சுட சுட ரசம் சாதம், தயிர் சாதம் போன்றவை இருந்தால் அட்டகாசமாக இருக்கும் குழந்தைகளுக்கு இதை லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஆக கூட செய்து கொடுக்கலாம்.

- Advertisement -