142 கி.மீ வேகத்தில் வந்த பந்து தலையில் பட்டு சுயநினைவின்றி சுருண்டு விழுந்த இலங்கை வீரர் – நாளை காலையே நிலைமை தெரியும்

karuna
- Advertisement -

ஆஸ்திரேலிய அணி தற்போது இலங்கையில் அந்த அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பெரா மைதானத்தில் நேற்று துவங்கியது.

karunaaa

இந்த போட்டியின் இரண்டாவது நாளான இன்று ஆஸ்திரேலிய அணி 534 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. அதற்கடுத்து தனது முதல் இன்னிங்க்ஸை ஆட துவக்க வீரராக களமிறங்கினார் இலங்கை அணியை சேர்ந்த கருணரத்னே.

- Advertisement -

கருணரத்னே 46 ரன்கள் எடுத்திருந்த போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் வீசிய 142 கி.மீ வேகத்தில் வந்த பந்து நேராக கருணரத்னேவின் தலையின் பின்பகுதியில் பலமாக தாக்கியது. பந்து பட்ட அடுத்த நொடியே களத்தில் சுருண்டு விழுந்தார். அசையக்கூட முடியாமல் இருந்த அவரை மைதான காப்பாளர்கள் படுக்கையில் வைத்து அழைத்து சென்றனர்.

karunaa

மைதானத்தில் இருந்த இலங்கை அணியை சேர்ந்த ரசிகர்கள் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இன்னும் அவர் குறித்த மருத்துவ அறிவிப்பு எதுவும் உறுதியாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் உடல்நிலை குறித்து நாளை காலை அறிக்கை வெளியிடப்படும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

மனைவியுடன் தனித்தீவில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட கோலி – வைரலாகும் புகைப்படம்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -