மனைவியுடன் தனித்தீவில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட கோலி – வைரலாகும் புகைப்படம்

anushka

இந்திய அணி தற்போது நியூசிலாந்து நாட்டில் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி. தொடர் போட்டிகள் காரணமாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

toss

தனது ஓய்வு நேரத்தினை மனைவியுடன் வெளிநாட்டில் கழிக்க நினைத்த கோலி தற்போது அனுஷ்கா சர்மாவுடன் ஒரு தனி தீவில் ஓய்வினை எடுத்து வருகிறார். சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வழக்கத்தினை உடையவர் கோலி.

தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ஹார்டின் சிம்பிளையும் போட்டுள்ளார். இதன்மூலம் அவர் இந்தியா திரும்பவில்லை என்பதும், பெயர் குறிப்பிடாத ஒரு தனி தீவில் ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறார் என்பதையும் பகிர்ந்துள்ளார். இதோ உங்களுக்காக அந்த பதிவு :

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் கோலி ரசிகர்கள் மூலம் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஓய்வு முடிந்து இந்தியா திரும்பும் கோலி மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கேப்டனாக பங்கேற்க உள்ளார்.

இதையும் படிக்கலாமே :

இனிமேல் டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பண்ட்-க்கு முன்னுரிமை கிடையாது. இவருக்கே வாய்ப்பு அளிக்கப்படும் – இந்திய தேர்வுக்குழு தலைவர்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்