அட வாஷிங் மெஷின் கிளீன் பண்றது இவ்ளோ ஈசியா? இது தெரியாம கை வலிக்க துடைச்சி கஷ்டப்பட்டோமே. ஒரே ஒரு முறை இப்படி மட்டும் கிளீன் பண்ணி பாருங்க, பழைய மிஷின் கூட புதுசு மாதிரி மாறிடும்.

- Advertisement -

இப்போது பெரும்பாலும் அனைவர் வீட்டிலும் வாஷிங் மெஷின் பயன்படுத்த தொடங்கி விட்டார்கள் . வாஷிங் மெஷினில் துவைப்பதால் வேலைகள் பாதியாக குறைந்து விடுகிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் இந்த வாஷிங் மெஷின் சுத்தம் செய்ய வேண்டும் என்றால் ஒரு நாள் இதற்கு தனியாக ஒதுக்க வேண்டும் அவ்வளவு அழுக்கு வாஷிங்மெஷினில் சேர்ந்து விடும். இப்போது இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் எளிமையான முறையில் வாஷிங் மெஷின் எப்படி சீக்கிரத்தில் சுத்தம் செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

வாஷிங் மெஷின் துணிகளை துவைக்க தானே அதை எதற்கு நாம் சுத்தம் செய்ய வேண்டும் என்று ஒரு போதும் அதை அப்படியே விட்டு விடாதீர்கள். ஏனென்றால் நாம் தினமும் போடும் அழுக்குத் துணிகளால் மிஷின் டிரம், பெல்ட் பகுதி எல்லாம் மிகுந்த அழுக்கு படிந்து விடும். அதை அடிக்கடி சுத்தப்படுத்தா விட்டால் ஒரு கட்டத்தில் மெஷின் முழுவதுமாக பழுதாகி நின்று விடும். எனவே வாஷிங்மெஷினை சுத்தம் செய்வது மிகவும் முக்கியம்.

- Advertisement -

வாஷிங் மெஷினில் எளிமையாக சுத்தம் செய்யும் முறை:
முதலில் ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி அதன் இரண்டு பக்கத்திலும் நீங்கள் பயன்படுத்தும் எந்த பேஸ்ட்டாக இருந்தாலும் அது இரண்டு புறமும் நன்றாக தேய்த்து அந்த எலுமிச்சை பழத்தை வாஷிங்மெஷினில் போட்டு விடுங்கள்.

அதன் பிறகு மெஷினில் இருக்கும் பெல்ட் பகுதியில் லேசாக எடுத்து அதனுள் மூன்று டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவையும், அத்துடன் கொஞ்சம் வினிகர், உங்களிடம் வினிகர் இல்லாத பட்சத்தில் எலுமிச்சை பழத்தின் சாறை சேர்த்து ஊற்றி விடுங்கள்.

- Advertisement -

அதே போல் வாஷிங் மெஷினில் சோப்பு லிக்விட் போன்றவை போடும் இடத்திலும் கொஞ்சம் பேக்கிங் சோடா,வினிகரை ஊற்றிய பிறகு மிஷினில் டெலிகேட் என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும் அதில் மிஷினை ஆன் செய்து விடுங்கள்.

இது ஒரு அரை மணி நேரம் வரை ஓடும். அந்த நேரத்திற்குள்ளாக மிஷினில் படிந்துள்ள அனைத்து அழுக்கையும் சுத்தம் செய்வதோடு மிஷினின் டிரம்மையும் இது சுத்தப்படுத்தி கொடுத்து விடும். அதன் பிறகு நீங்கள் மெஷினை திறந்து உள்ளிருக்கும் எலுமிச்சை பழத்தோலை எடுத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: வெள்ளிக் கொலுசை புதிது போல சுத்தம் செய்ய நம் வீட்டில் வேண்டாம் என்று தூக்கி எறியும் இந்த பொருள் ஒன்று போதுமே!

இதை நீங்கள் மாதம் மாதம் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது மூன்று மாதத்திற்கு ஒரு முறை இப்படி சுத்தப்படுத்தினாலே கூட போதும் மிஷினில் உள்ள அழுக்கு மட்டும் நீங்கி மிஷின் நீண்ட காலம் பழுதாகாமல் உழைக்கும். இந்த முறையை டாப் லோடு, பிரென்ட் லோடு என இரண்டு வகை மெஷினையும் சுத்த படுத்த பயன்படுத்தலாம்.

- Advertisement -