கட்டுக்கடங்காத கண் திருஷ்டி அகலவும், மற்றவரின் பொல்லாத பார்வையிலிருந்து விடுபடவும் நமது உடம்பில் எப்பொழுதும் இருக்க வேண்டிய ஒரு பொருள் என்னவென்று தெரியுமா?

thirusti-rasi
- Advertisement -

வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு நமது இந்திய நாடு என்று பல நாடுகளினால் போற்றப்பட்டு வருகிறது. இங்கு பலதரப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அப்படி பல மதங்களும், பல சமயங்களும் பலவித சாஸ்திர, சம்பிரதாயங்களை பின்பற்றி வருகின்றன. அவ்வாறு தீமைகளை அழிக்கவும், தீய சக்திகளிலிருந்து விடுபடவும் ஒவ்வொரு மதமும், ஒவ்வொரு விதமான பூஜை முறைகளை மேற்கொள்கின்றது. இவ்வாறு ஒரு சிலர் தங்கள் உடம்பில் கணுக்கால், கழுத்து, இடுப்பு அல்லது மணிக்கட்டு போன்ற பகுதிகளில் கருப்பு கயிறு கட்டி இருப்பதை பார்த்திருப்போம். இந்த கருப்பு கயிறு எதிர்வினைகளிலிருந்து அவர்களை பாதுகாக்கிறது. இவ்வாறு கருப்பு கயிறை ஏன் கட்ட வேண்டும்? எதற்காக எப்படி கட்ட வேண்டும்? இவற்றால் உண்டாகும் பலன்கள் என்னென்ன? என்பது பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

poojai

பொதுவாகவே நம் சமூகத்தில் கருப்பு என்றால் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பது போல் பார்க்கப்படுகிறது. ஏதேனும் ஒரு நிகழ்ச்சியை துவங்குவதாக இருந்தால் அங்கு உள்ளவர்கள் கருப்பு நிறம் தவிர மற்ற நிறங்களான மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு போன்ற நிறங்களில் உடை அணிந்திருப்பதை கவனிக்க முடியும். ஆன்மீக ரீதியான பூஜைகள் , மத சம்பந்தமான புனித விஷேஷங்களின் பொழுதும் கருப்பு நிற ஆடைகள் அணிபவர்களை அரிதாகவே காணமுடியும்.

- Advertisement -

ஆனால் இப்படி அப சகுனமாக பார்க்கப்படும் கருப்பு நிற கயிரை தான் மக்கள் பலர் தங்கள் பாதங்களில் அல்லது உடம்பில் ஏதேனும் ஒரு பகுதியில் மற்றவர்கள் பார்வையில் படுமாறு கட்டிக் கொள்கின்றனர். இது ஏன் என்று தெரியுமா? இந்த கருப்பு நிறம் நீதி கடவுளான சனீஸ்வர பகவானுக்கு உரிய நிறமாகும்

black

மனிதன் ஒருவன் அவன் செய்த வினைகளுக்கு ஏற்ப வெகுமதி அடைவதும், தண்டனை பெறுவதும் இருக்கிறது. ஒருவரிடம் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் நிறைந்து இருப்பதற்காகவே இந்த கருப்பு கயிறு கட்டப்படுகிறது.

- Advertisement -

இவ்வாறு கட்டப்படும் கருப்பு கயிறில் ஒன்பது முடிச்சுகள் இருக்க வேண்டும். இந்தக் கயிறை சரியாக பிரம்மமுகூர்த்தத்தில் கட்டிக் கொள்ளலாம். அல்லது நண்பகல் 12 மணி அளவில் கட்டிக் கொள்ளலாம். அதிலும் சனிக்கிழமை தினத்தில் இதனை கட்டிக் கொள்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதனை நிச்சயமாக வலதுபுற காலின் கணுக்களில் மட்டுமே கட்ட வேண்டும்.

black-rope-karuppu-kayiru

இவ்வாறு கயிறை காலில் கட்டிக் கொள்வதற்கு முன்னர் சனிபகவானை பாதத்தில் வைத்து, பூஜை செய்து, ஆஞ்சநேயர் மற்றும் துர்காதேவியை மனதார வேண்டிக்கொண்டு, ஸ்ரீராம ஜெயத்தை சொல்லிக்கொண்டு அதன் பின்னர் தான் தாலி கட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அந்தக் கயிறின் பலம் அதிகரித்து அவை உங்களைத் தீய சக்திகளிலிருந்து காப்பாற்றுவது மட்டுமல்லாமல் எதிர்மறை எண்ணங்கள் உடையவர் மூலம் தீய சக்திகளின் தாக்குதல்கள் உங்களை பாதிக்காமல் இருப்பதற்கும், உங்கள் தொழில் மற்றும் குடும்பத்தினரின் மகிழ்ச்சி பாதிக்காமல் இருப்பதற்கும் பயன்படுகிறது.

- Advertisement -