- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷா கறி குழப்பமே தோற்று விடும் சுவையில் இருக்கும் இந்த சென்னா கிரேவி...

சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷா கறி குழப்பமே தோற்று விடும் சுவையில் இருக்கும் இந்த சென்னா கிரேவி செய்து பாருங்க. இந்த கிரேவிக்கு பத்து சப்பாத்தி இருந்தா கூட பத்தவே பத்தாது.

- Advertisement -

சப்பாத்தி பூரிக்கெல்லாம் சென்னா மசாலா செய்தால் ரொம்பவே நன்றாக இருக்கும். அதே போல் கருப்புக் கொண்ட கடலை வைத்து செய்யப்படும் இந்த கிரேவியும் சப்பாத்தி பூரி இவற்றுக்கெல்லாம் சைடிஷ் ஆக வைத்து சாப்பிட ரொம்பவே அருமையாக இருக்கும். அது மட்டும் இன்றி இது அசைவ சுவையே மிஞ்சிவிடக் கூடிய அளவிற்கு பிரமாதமாக இருக்கும். வாங்க இந்த சென்னா கிரேவி எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

இந்த கிரேவி செய்வதற்கு முதலில் கொண்டைக் கடலையை எட்டு மணி நேரம் வரை ஊற வைத்த பிறகு குக்கரில் சேர்த்து ஒரு ஸ்பூன் உப்பையும் சேர்த்து நாலு விசில் வரும் வரை விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். இது ஒரு புறம் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்ததாக ஒரு பவுலில் ஒரு டீஸ்பூன் மிளகாய்த் தூள், ஒன்றரை டீஸ்பூன் தனியாத் தூள், கால் டீஸ்பூன் கரம் மசாலா, கால் டீஸ்பூன் சீரகத் தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் இவை அனைத்தையும் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு மூன்று பெரிய பழுத்த தக்காளியை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் கடாய் வைத்து மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு, ஒரு டீஸ்பூன் கடுகு, கால் டீஸ்பூன் சீரகம், சேர்த்து பொரிந்த பிறகு ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பை லோ ஃபிலிமுக்கு மாற்றிய பிறகு நாம் கரைத்து வைத்த மிளகாய் தூள் மசாலாவை இதில் ஊற்றி எண்ணெயிலே வதக்க வேண்டும். இந்த சமயத்தில் அரைத்து வைத்த தக்காளி விழுதையும் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கி விடுங்கள்.

- Advertisement -

இவையெல்லாம் பச்சை வாடை போகும் வரை வதங்கிய பிறகு நாம் ஏற்கனவே வேக வைத்த கொண்டைக் கடலையை தண்ணீருடன் இந்த கிரேவியில் சேர்த்து கொள்ளுங்கள். இந்த சமயத்தில் உப்பு அளவை சரிபார்த்துக் கொள்ளுங்கள். போதவில்லை என்றால் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளுங்கள். இவையெல்லாம் சேர்த்த பிறகு ஒரு முறை நன்றாக கலந்த பின் அடுத்த மூடி போட்டு ஐந்து நிமிடம் வரை கொதிக்க விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: காலிஃப்ளவர் கிரேவி செய்முறை விளக்கம் (Cauliflower gravy recipe in Tamil)

அதன் பிறகு கொஞ்சமாக கஸ்தூரி மேத்தி எடுத்து கைகளால் நன்றாக கசக்கி அதை தூவிய பிறகு இந்த கிரேவியிலிருக்கும் தண்ணீர் எல்லாம் வற்றி எண்ணெய் பிரிந்து மேலே வந்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவு தான் சுவையான கொண்டைக்கடலை கிரேவி தயார். கறி குழம்பே தோற்றுப் போகும் அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும் இந்த சென்னா கிரேவியை நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்