இந்த சித்தரை வழிபட்டால் சனியால் ஏற்படும் தொல்லைகள் விலகும் தெரியுமா ?

siddhar-and-sani

கருவூரார் சித்தரை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்புண்டு கருவூரிலே பிறந்த இவர் சிறு வயதிலேயே இறைவன் மீது பக்தி கொண்டு ஞான நூல்கள் பலவற்றை கற்றறிந்தார். கோவில்களில் விக்ரகங்கள் செய்யும் தொழிலை இவரது பெற்றோர் செய்துவந்தனர். அதனால் வேலை காரணமாக பல ஊர்களுக்கு குடும்பதோடு இவர்கள் செல்வது வழக்கம். அப்படி ஒருமுறை திருவாவடுதுறைக்கு சென்றபோது அங்கு போகர் சித்தர் வந்திருந்தார். அவரை தரிசிக்க சென்ற கருவூரார், தன்னை சீடனாக ஏற்கும்படி போகரிடம் வேண்டினார்.

karuvurar Siddhar

போகர், கருவூராரிடம் தன்னுடைய குலதெய்வமான அம்பாளை பணிந்து அவளை வேண்டும்படி கூறி, அதற்கான வழிமுறைகளையும் கற்பித்தார். அதன் பிறகு கருவூரார் தன்னுடைய குலதெய்வமான அம்பாளை நித்தமும் வணங்கினார். ஒரு கட்டத்தில் சிதர்களுக்குரிய கலைகள் அனைத்தையும் அவர் கற்றறிந்தார். பல கோவில்களுக்கு சென்று சிவலிங்கத்தை உருவாக்கினார்.

போகரின் சீடராய் இருந்து கருவூரார் புரிந்த அற்புதங்கள் ஏராளம். இவர் சனி கிரகத்தை பிரதிபலிப்பவர். ஆகையால் சனிக்கிழமைகளில் கருவூராரை பூஜித்து வழிபடுவதன் மூலம் சனி கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் விலகும். ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டச்சனி போன்றவற்றால் ஏற்படும் கோளாறுகள் குறையும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். தடை பட்ட காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். இப்படி இவரை வணங்குவதால் பல நன்மைகள் ஏற்படும்.

karuvurar Siddhar

கருவூராரை வணங்கும் முறை :

- Advertisement -

காலையில் குளித்துவிட்டு ஒரு பலகையை சுத்தமாக கழுவி அதில் கருவூரார் படத்தை வரைந்து, பின் தாமரை திரி அல்லது வாழைத்தண்டு திரி கொண்டு ஐந்து முக விளக்கேற்றி விட்டு, ஒரு சொம்பில் புதிதாய் ஊற்றெடுத்த நீரை நினைப்பி வைத்து, சக்கரை பொங்கலை நிவேதனமாக படைத்தது கீழே உள்ள போற்றியை கூறுவது சிறந்தது.

karuvurar

இதையும் படிக்கலாமே:
சித்தர் சமாதியில் மருந்தாக மாறும் உணவு – சித்தர் நிகழ்த்தும் அற்புதம்

கருவூரார் போற்றி
அவதார புருஷரே போற்றி
இந்திராதி தேவர்களுக்கு ப்ரியரே போற்றி
ஓம் கம் நம்பீஜாட்சரத்தை உடையவரே போற்றி
ஒளி பொருந்தியவரே போற்றி

கற்பூரப்பிரியரே போற்றி
சிவனை பூஜிப்பவரே போற்றி
நடராசனை பிரதிஷ்டை செய்தவரே போற்றி
நாடி யோகியே போற்றி

பூவிலகில் சஞ்சரித்து கருவைக் காப்பவரே போற்றி
லோக க்ஷேம சித்தரே போற்றி
வெட்டை வெளியில் வசிப்பவரே
ஞானம் அளித்து வேண்டிய வரம் தருபவரே போற்றி.