தினமும் இதை நெற்றியில் இட்டுக்கொண்டு வெளியே சென்றால், சென்ற காரியத்தில் உங்கள் பக்கம் தான் வெற்றி.

thilagam

சில சமயங்களில் நாம் முயற்சி எடுக்கக்கூடிய காரியங்கள் சுலபமாகவே வெற்றி பெற்றுவிடும். ஆனால், சில சமயங்களில் நாம் எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் தாமதங்களும் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும். இப்படி எடுத்த காரியத்தில் வெற்றி காண முடியாமல் கஷ்டப்பட்டு இருக்கும் போது, நீங்கள் வெளியே செல்வதற்கு முன்பு உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் இந்த ஒரு பொருளை நெற்றியில் இட்டுக் கொண்டு சென்றாலே போதும். அந்த காரியம் உங்கள் வசமாகும்.

thilagam1

நேரமும் காலமும் எல்லோருக்கும், எல்லா சமயத்திலும் ஒரே மாதிரி இருப்பது கிடையாது. நேரமும் காலமும் உங்களுக்கு சரியாக இல்லாத சமயத்திலும், இந்த பரிகாரம் கை கொடுக்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை. நம்முடைய முன்னோர்கள் அந்த காலத்தில் இருந்தே வசிய தன்மைக்காக பயன்படுத்திய ஒரு அரிய பொருளை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

எல்லோர் வீட்டு சமையலறையிலும் இருக்கக்கூடியது கசகசா தான் அந்தப் பொருள். இந்தப் பொருளுக்கு அதிகப்படியான வசிய தன்மை உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது. கசகசாவை பொடி செய்து தினம்தோறும் நீங்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளும் விபூதி அல்லது குங்குமத்தில் கலந்து வைத்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் வாசனை மிகுந்த பன்னீரை கொஞ்சம் கசகசா பொடியோடு குழைத்து அதை நெற்றியில் லேசாக இட்டுக்கொண்டு சென்றாலே போதும். இதனுடைய சக்தி மிகவும் அதிகமாக இருக்கும். இதை நெற்றியில் இட்டுக்கொள்ளும் போது குல தெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள்.

kasa-kasa

நீண்ட நாட்களாக இழுபறியாக இருக்கக் கூடிய காரியம் கூட இதை நெற்றியில் இட்டுக்கொண்டு சென்றால் உடனே அது ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அந்த முடிவு உங்களுக்கு சாதகமாக உள்ளதா, பாதகமாக உள்ளதா என்பதை பிறகு கவனித்து கொள்ளலாம். அந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு கொடுக்க கூடிய சக்தி இந்த பரிகாரத்திற்க்கு உண்டு என்பதே நிதர்சனமான உண்மை.

- Advertisement -

இந்த பரிகாரத்தில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், உங்களுடைய வேலை முடிந்தவுடன் உங்கள் நெற்றியில் இருக்கும் இந்த பொட்டை துடைத்து எடுப்பது மிகவும் நல்லது. உங்களுடைய நெற்றியில் இந்தப் பொட்டு இருக்கும் வரை இதனுடைய சக்தியானது அதிவேகமாக செயல்பட்டுக் கொண்டே இருக்கும். அதாவது உடலில் இருக்கக்கூடிய சக்கரங்களின் இயக்கங்கள் வேகமாக செயல்பட தொடங்கிவிடும்.

kamatchi-amman

உடலில் இருக்கும் சக்கரங்கள் இயல்பாக தங்களுடைய சுழற்சியை செய்வது என்பது வேறு, இந்த கசகசாவை நெற்றியில் இட்ட பின்பு, அந்த சக்கரங்களின், ஆராவின் இயக்கத்தில் நிச்சயமாக மாறுபாடு ஏற்படும். இந்த கசகசாவின் தூண்டுதலால் தான் உங்களுடைய ஆற்றல் அதிகரிக்கப்பட்டு, தடைபட்ட காரியம் சுறுசுறுப்பாக நடந்து முடியும்.

chakra

எந்த நேரமும் நம்முடைய உடலில் இருக்கக் கூடிய சக்கரங்கள் அதிவிரைவாக செயல்படுவதன் மூலம், அன்றைய நாள் இறுதியில் உங்களுடைய உடல் சோர்வு அடைவதற்கும் வாய்ப்பு உள்ளது, என்ற காரணத்தினால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த பொட்டு நெற்றியில் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது என்றும் சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பாருங்கள்! நிச்சயம் வெற்றி உங்கள் பக்கம்.

இதையும் படிக்கலாமே
செவ்வாய்க் கிழமையில் இந்த தீபமேற்றினால் நீங்களும் வறுமை நீங்கி கோடீஸ்வரர் ஆகிவிடலாமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.