செவ்வாய்க் கிழமையில் இந்த தீபமேற்றினால் நீங்களும் வறுமை நீங்கி கோடீஸ்வரர் ஆகிவிடலாமா?

vilakku-arisi

பொதுவாக வீட்டில் தீபம் ஏற்றுவது என்பது வீட்டிற்கு இறை அருள் கிடைக்க செய்வது ஆகும். தினமும் விளக்கேற்றி வழிபடும் வீட்டில் எந்த ஒரு துஷ்ட சக்தியும் அணுகாது என்பது பொருளாகும். இந்த பிரபஞ்சத்தில் நல்ல சக்தியும், கெட்ட சக்தியும் சேர்ந்து தான் நம்மை பயணிக்க செய்கிறது. அதில் எந்த சக்தியை நாம் வீட்டில் வைத்திருப்பது? எந்த சக்தியை வீட்டில் இருந்து விரட்டி அடிப்பது? என்பதை நாம் செய்யும் பூஜையும், புனஸ்காரங்களும் தான் முடிவு செய்கின்றன. வீட்டில் ஒரே ஒரு விளக்கு ஏற்றி வைத்தால் கூட எந்த ஒரு கெட்ட சக்திகளும் அங்கு தங்க முடியாது.

vilakku

கோவில் முழுவதும் தினம்தோறும் விளக்கேற்றி வழிபடுவதால் தான் அங்கு சென்றவுடன் நமக்கு மன அமைதியும், நல்ல எண்ணங்களும் மேலோங்கி விடுகின்றன. சிலருக்கு கோவிலுக்கு சென்றாலே கண்களில் கண்ணீரும், உடம்பு சிலிர்ப்பும் ஏற்படுவதற்கு அங்குள்ள நேர்மறை ஆற்றல்களுடன் கூடிய இறையருள் தான் காரணமாகும். அத்தகைய இறை அருளை நாம் வீட்டிலேயே பெற வேண்டும்? அதற்கு செவ்வாய் தோறும் இந்த விளக்கை ஏற்றி வழிபடுவதால் வறுமை நீங்கி, சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

வறுமை நீங்க கட்டாயம் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வீட்டில் குத்து விளக்கு அல்லது காமாட்சி அம்மன் விளக்கில் தீபம் ஏற்ற வேண்டும். நீங்கள் ஏற்றும் தீபத்தில் நல்லெண்ணெய் மற்றும் நெய் சேர்த்து ஏற்றுவது நல்ல பலன்களை தரும். இப்படி ஏற்றப்படும் தீபத்துடன் கூடிய அகல் விளக்கு ஒன்றை இறைவனுக்கு முன் நிலையில் நாம் ஏற்றி வைத்தால் அதை விட பெரும்பாக்கியம் எதுவும் இல்லை.

agal vilakku

மண் அகல் விளக்கிற்கு இருக்கும் சக்தி மற்ற எல்லா விளக்கையும் விட அதீதமானது. ஒரு சிறிய அளவிலான மண் அகல் விளக்குகளை நிறைய உங்கள் வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் ஒவ்வொன்றாக எடுத்து பூஜையின் பொழுது இதையும் சேர்த்து வைக்க வேண்டும். ஒரு சிறிய செம்பு அல்லது பித்தளை தட்டு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் ஒரு கைப்பிடி அளவிற்கு பச்சரிசியை நிரப்பி பரப்பி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பச்சரிசியில் அன்னபூரணி நிறைந்திருப்பதாக ஐதீகம் உள்ளது. அதனால் தான் எல்லா விசேஷங்களுக்கும் பச்சரிசி பூஜையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பச்சரிசியில் இருக்கும் சக்தி இறை அருளுடன் சேரும் பொழுது வீட்டில் இருக்கும் வறுமை நீங்கும் என்பது நம்பிக்கை. அன்னபூரணியை நினைத்து பச்சரிசியை நிரப்பி விட்டு, அதில் குங்குமத்தை சிறிதளவு தூவி கொள்ளுங்கள். குங்குமத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக கருதப்படுவதால் மகாலட்சுமியின் அருள், அன்னபூரணியின் அருள் நமக்குக் கிடைக்கும். அதற்கு மேலே அகல் விளக்கு வைத்து அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

arisi2

இப்படி ஏற்றப்படும் அகல் விளக்கு தீபத்தில் நீங்கள் தாமரைத் தண்டு திரி, வாழைத்தண்டு திரி, சிகப்பு திரி, மஞ்சள் திரி என்று விதவிதமான வகைகளில் இருக்கும் திரி வகைகளை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் போட்டு ஏற்றி வந்தால் ஒவ்வொரு விதமான கஷ்டங்களும், ஒவ்வொரு வாரமும் உங்களுக்கு நீங்கி செல்வ வளம் என்பது மேலும் அதிகரிக்கும். தொழில் தடை, வருமான தடை, வியாபார கடை என்று வருமானம் ஈட்டக்கூடிய அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து உங்களுடைய இலக்கை நோக்கி உங்களை பயணிக்க செய்யும். மறுவாரம் அந்த அரிசியை பறவைகளுக்கு போட்டுவிடு புதிதாக மாற்றிக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
கல் உப்பு ஜாடியில், யாருக்கும் தெரியாமல், பெண்கள் இந்த 1 பொருளை மறைத்து வைத்தால், உங்கள் கஷ்டங்களும் யாருக்குமே தெரியாமல் மறைந்து போகும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.