- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் 'காஷ்மீரி தம் ஆலு' செய்வது எப்படி? உருளைக்கிழங்கு குருமா வைப்பது போலவே இது...

ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் ‘காஷ்மீரி தம் ஆலு’ செய்வது எப்படி? உருளைக்கிழங்கு குருமா வைப்பது போலவே இது ரொம்ப ரொம்ப ஈஸி.

- Advertisement -

உருளைக்கிழங்கை வைத்து வெறும் குருமாவே செஞ்சி எத்தனை நாளைக்கு தான் சாப்பிடுவீங்க. சூப்பரா ஒரு வெள்ளை புலாவ் செஞ்சுக்கோங்க. சைடு டிஷ்க்கு ரிச்சான இந்த பொட்டேட்டோ கிரேவி செய்யுங்க. அவ்வளவு ருசியா இருக்கும். இதை செய்வது ரொம்ப ரொம்ப சுலபம்தான். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்துவிடலாம். குறிப்பை படிப்பதற்கு கொஞ்சம் பெரியதாக தெரிந்தாலும் செய்வதில் எந்த சிரமமும் இருக்காது.

முதலில் 1/2 கிலோ அளவு சின்ன சின்ன உருளைக்கிழங்குகளை எடுத்து நன்றாக கழுவி விட்டு, முழுசாக குக்கரில் போட்டு ஒரு விசில் விட்டு வேக வைத்து எடுத்து, தோல் உரிக்கணும். உருளைக்கிழங்குக்கு உள்ளே மசாலா இறங்க வேண்டும் என்பதற்காக, போஃர்க்கை வைத்து ஆங்காங்கே ஓட்டை போட்டு, இதை அப்படியே வறுத்து எடுக்க வேண்டும். (உருளைக்கிழங்கு குட்டி குட்டியாக முழுசாக தான் இருக்க வேண்டும்.) கடாயில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி வேக வைத்த உருளைக்கிழங்குகளை போட்டு, பொன்னிறம் வரும் வரை பொறித்து எடுத்து அதை அப்படியே தனியாக வைத்துக் கொள்ளுங்கள். (அப்பளம் பொரிப்பது போல நிறைய எண்ணெயில் போட்டு உருளைக்கிழங்கை பொரித்து எடுக்க வேண்டும்.)

- Advertisement -

அடுத்தபடியாக காஷ்மீரி மிளகாய் – 10 லிருந்து 12 உள்ளே இருக்கும் விதைகளை எடுத்து விட்டு, தண்ணீரில் போட்டு 20 நிமிடம் ஊற வைக்கனும். இன்னொரு கிண்ணத்தில் 15 லிருந்து 20 முந்திரி பரப்பில் சுடுதண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்கணும். இந்த இரண்டு பொருட்களுமே ஊறி வந்ததும் தண்ணீரை வடித்து விட்டு தனித்தனியாகவே கொஞ்சமாக தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக 1/2 லிட்டர் அளவு தயிரை எடுத்து நன்றாக மத்து போட்டு கடைஞ்சுக்கோங்க. கடைந்த, இந்த தயிரில் அரைத்து வைத்திருக்கும் மிளகாய் விழுதையும், முந்திரி பருப்பு விழுதையும், சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக அடித்து கலந்து விடுங்கள். இந்த தையிர் சிவப்பு நிறத்தில் மாறியிருக்கும். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் வர மல்லி – 1 டேபிள் ஸ்பூன், சோம்பு – 1 ஸ்பூன், சீரகம் – 3/4 ஸ்பூன், மிளகு – 1/2 ஸ்பூன், ஏலக்காய் – 3, பட்டை – 1, கிராம்பு – 2, சுக்கு – 1 இன்ச், இந்த பொருட்களை எல்லாம் போட்டு எண்ணெய் ஊற்றாமல் இரண்டு நிமிடம் டிரையாக வறுத்து நைசாக பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது கிரேவியை தாளித்து விடலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ள வேண்டும். அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் லேசாக காய்ந்தவுடன் மிளகாய் தூள் – 1 டேபிள்ஸ்பூன், நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடி – 1 டேபிள் ஸ்பூன், போட்டு கருகாமல் வறுத்து விட்டு, உடனடியாக கடைந்து வைத்திருக்கும் தயிரை இதில் ஊற்றி விட வேண்டும். அடுத்து கிரேவிக்கு தேவையான அளவு உப்பு போட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: ஒரு ஸ்பூன் எண்ணெயை வைச்சு ஒரு அருமையான ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா ரெடி பண்ணிடலாம். இதோட டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு 10 நிமிடங்கள் இதை கொதிக்க வையுங்கள். மேலே தட்டு போட்டு மூடிக்கொள்ளலாம். எண்ணெய் பிரிந்து மேலே நமக்கு வரும் அப்போது 3 டேபிள் ஸ்பூன் – டொமேட்டோ கெட்சப் ஊற்றி, நன்றாக கலந்து 1/2 – கப் அளவு தண்ணீரை ஊற்றி, மீண்டும் 5 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். அதன் பின்பு வறுத்து வைத்திருக்கும் பொட்டேட்டோவை இதில் கொட்டி நன்றாக கலந்து விட்டு, மீண்டும் 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். வறுத்த உருளைக்கிழங்கில் இந்த கிரேவி நன்றாக இறங்கிவிடும். அடுப்பை அணைத்து விடுங்கள். மேலே கொத்தமல்லி தழையை தூவி இதை பரிமாறி பாருங்கள். வேற லெவல் டேஸ்ட் கிடைக்கும்.

சற்று முன்