ஒரு ஸ்பூன் எண்ணெயை வைச்சு ஒரு அருமையான ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா ரெடி பண்ணிடலாம். இதோட டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.

- Advertisement -

சப்பாத்தி, பூரி, பரோட்டா, இடியாப்பம் போன்றவைகளுக்கு எத்தனை சைட் டிஷ் இருந்தாலும் இந்த குருமாவின் சுவைக்கு நிகராக சைவத்தில் வேறு எந்த குழம்பும் அவ்வளவு எளிதில் செட் ஆகி விடாது. அதிக அளவில் காய்கறிகள் சேர்த்து செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு ஊட்டச்சத்தான் உணவாக இது இருக்கும். ஆனாலும் இதன் செய்முறைகள் சற்று நீளமாக போகும் என்பதாலும் சமைக்கும் நேரம் அதிகமாகும் என்பதாலும் பெரும்பாலும் குருமா ரெசிபியை வார நாட்களில் யாரும் முயற்சிப்பதில்லை. ஏனென்றால் வேலைக்கு செல்லும் அவசரத்தில் இவை ஒவ்வொன்றாக தனித்தனியாக வதக்கிய பிறகு அரைத்து இதையெல்லாம் செய்ய நேரம் இருப்பதில்லை. ஆனால் இந்த செய்முறை அப்படி அல்ல எதையும் வதக்கவும் வேண்டாம், அத்தனை நேரம் சமைக்கவும் வேண்டாம் மொத்தமாகவே ஒரே விசில் சட்டுனு குருமா ரெடி பண்ணிடலாம். முக்கியமான ஒன்று இந்த குருமா செய்ய ஒரே ஒரு ஸ்பூன் ஆயில் மட்டும் இதில் சேர்த்தால் போதும்.

அத்தனை சுவையான ஒரு ஹோட்டல் ஸ்டைலில் குருமா சூப்பராக தயார் செய்து விடலாம் வாங்க. அது எப்படி செய்யறதுன்னு இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

தேவையான பொருட்கள் ஒரு கப் கேரட் – 1 கப், பீன்ஸ் – 1 கப்,உருளைக்கிழங்கு – 1கப், பச்சை பட்டாணி – 2, வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது – 2, தேங்காய் துருவியது – 2 டேபிள் ஸ்பூன், கிராம்பு -3, ஏலக்காய் – 2, பட்டை – ஒரு துண்டு, பிரிஞ்சி இலை – 2,தக்காளி -3, சோம்பு 1 ஸ்பூன், கசகசா – 1ஒரு ஸ்பூன், முந்திரி -10, தனி மிளகாய் தூள் -1 1/2 ஸ்பூன் தனியா தூள் – 2 ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, இஞ்சி சிறிதாக நறுக்கியது – 2 துண்டு, பூண்டு- 5 பல், மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், உப்பு – 1 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் – டீஸ்பூன் கொத்தமல்லி இலை சிறிதளவு.

முதலில் ஒரு குக்கரில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, வெங்காயம் இரண்டு பிரிஞ்சி இலை அனைத்தையும் சேர்த்து ஒரு விசில் விட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், லவங்கம் ,ஏலக்காய் ,பட்டை, சோம்பு ,கசகசா, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, முந்திரி இவை அனைத்தையும் போட்ட பிறகு மிளகாய் தூள், தனியா தூள்,சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் ஒரு சுற்று சுற்றிய பிறகு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக பைன் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.

இப்போது ஒரு விசில் விட்டு இறக்கி வைத்து காய்கறி குக்கரை அடுப்பை பற்ற வைத்து அதில் வைத்து விடுங்கள். இதன் பிறகு அதில் நறுக்கி வைத்த தக்காளி பழத்தை சேர்த்து நன்றாக கிளறி இந்த அரைத்த விழுதையும் சேர்த்து குருமாவிற்கு தேவையான உப்பு, மஞ்சள் தூள்,தண்ணீரும் சேர்த்து ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயும் இதற்கு மேல் ஊற்றி ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்தால் போதும். கடைசியா கொத்தமல்லி தூவி இறக்கி விடுங்கள். அருமையான ஹோட்டல் ஸ்டைல் குருமா ரெடி.

இதையும் படிக்கலாமே: இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து புதினா சட்னி அரைத்து கொடுத்துப் பாருங்கள். ஒரு இட்லி சாப்பிடும் உங்கள் குழந்தை கூட ஐந்து இட்லியை சாதாரணமாக சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை பிரமாதமாக இருக்கும்.

ஒரு சூப்பரான ஹோட்டல் ஸ்டைல் குருமா மிக மிக சுலபமாக ஒரே ஒரு ஸ்பூன் எண்ணெயை மட்டும் வைத்து செய்து முடித்து விடலாம். இது டிபன் வகைகள் அனைத்திற்கும் மிகவும் பொருத்தமான ஒரு பக்கா சைடு டிஷ்.

- Advertisement -