- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகஷ்டத்திலிருந்து நம்மை பாதுகாக்கும் வாராஹி மந்திரம்

கஷ்டத்திலிருந்து நம்மை பாதுகாக்கும் வாராஹி மந்திரம்

- Advertisement -

உக்கிரமான தெய்வம் வாராகி. இவளை கோபக்காரி என்றெல்லாம் சொல்லுவார்கள். ஆனால் அந்த அளவுக்கு அவள் குழந்தை உள்ளம் கொண்டவள் என்பது யாருக்கும் தெரியாது. உக்கிர சுவரூபத்தையும் தாண்டி அந்த வாராஹியை குழந்தையின் சொரூபமாக பார்க்க வேண்டும் என்றால், வாராகியை நீங்கள் உண்மையாக வழிபாடு செய்ய வேண்டும்.

அப்போதுதான் வாராகியின் சக்தி என்ன என்பது உங்களுக்கு புரியும். கெட்ட எண்ணத்தோடு, அடுத்தவர்களை அழிக்கும் குணத்தோடு, பொறாமை எண்ணத்துடன் வாராகியை நம்மால் நெருங்கக் கூட முடியாது. தூய்மையான உள்ளத்தோடு யாருக்கும் எந்த தீங்கும் நினைக்காமல், நீங்கள் இருந்தால் உங்களை அந்த வாராகிதாய் சீக்கிரம் நெருங்கி விடுவாள். இதுதான் வாராகி வழிபாட்டில் இருக்கக்கூடிய சூட்சமம்.

- Advertisement -

புயல் வேகத்தில் கஷ்டங்கள் நீங்க வாராகி வழிபாடு

தீராத வியாதி நம்மை விட்டு விலக, தீராத கண் திருஷ்டி விலக, தீராத எதிரி தொல்லை நீங்க, தீராத கடன் தீர, வாராஹி எப்படி வழிபாடு செய்வது. புயல் வேகத்தில் வாராகி வந்து நம்மை காக்க வேண்டும் என்றால் வாராகியின் எந்த நாமத்தை உச்சரிப்பது. தீராத கேன்சர் வியாதி, தீராத இருக்கும் இன்னும் எவ்வளவு பெரிய வியாதியாக இருந்தாலும் அதிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ளலாம்.

வாரம்தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, வளர்பிறை பஞ்சமி திதி, தேய்பிறை பஞ்சமி திதி இதெல்லாம் வாராஹி வழிபாட்டிற்கு உரிய தினங்கள். இந்த நாளில் எல்லாம் வாராகி நினைத்து வீட்டில் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். சர்க்கரை வள்ளி கிழங்கு அவித்து வாராகிக்கு நெய்வேத்தியம் வைக்க வேண்டும். பிறகு ‘புயல் நங்கை ஸ்ரீவாராஹி போற்றி போற்றி!’ என்ற இந்த நாமத்தைச் சொல்லுங்கள். இது வாராஹி மாலையில் வரக்கூடிய ஒரு சொல்.

- Advertisement -

இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா. உங்களிடம் நெருங்க பார்க்கும் நோய் கஷ்டம் துன்பம் துயரம், கடன் கண் திருஷ்டி எதிரி எல்லாவற்றையும் அந்த வாராஹித்தாய் புயல் நங்கையாக மாறி வந்து, புயல் வேகத்தில் இந்த பிரச்சனைகளை எல்லாம் தடுத்து நிறுத்துவாள் என்பதுதான். எத்தனை சிறப்பு மிக்க வார்த்தைகள். வராகி மாலையில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் தான் இவை.

அதை நம்முடைய வாராஹி பக்தர்களுக்காக இந்த பதிவின் மூலம் சமர்ப்பணம் செய்கின்றோம். இந்த ஆஷாட நவராத்திரி சமயத்தில் இந்த மந்திரத்தை சொல்லி, ஒரே ஒரு நாள் உங்களுடைய வீட்டில் வாராகி வழிபாடு செய்து பாருங்கள். பின்பு உங்களுடைய வீட்டில் நடக்கும் மாற்றத்தை நீங்களே உணருவீர்கள். நம்பியர்களை கைவிடாது, தன்னோடே வைத்து பாதுகாப்பவள் தான் வாராஹி.

இதையும் படிக்கலாமே: தீராத அனைத்து பிரச்சினைகளும் தீர

உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் மேல் சொன்ன வழிபாட்டை செய்யுங்கள். தினமும் வாராகியின் நாமத்தை உச்சரியுங்கள் கஷ்டங்களை விட்டு தூர சென்று விடும். வாழ்க்கையில் எதற்கும் பயப்படாமல் சந்தோஷமாக உங்களுடைய நாட்களை நகத்திச் செல்லலாம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்