தினசரி நடைமுறை வாழ்க்கையில் பெண்கள் செய்யவேக்கூடாத 5 தவறுகள்! இந்த தவறுகளை பெண்கள் செய்தால், அந்த வீட்டில் தீராத கஷ்டம் வந்து கொண்டே தான் இருக்கும்.

women

ஒரு வீடு கஷ்டம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால், அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் மகாலட்சுமியின் ஸ்வரூபமாக இருந்தாலே போதும். அந்த வீடு சுபிட்சம் அடையும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இருக்காது. கோடி கோடியாக பணத்தை வீட்டில் வைத்திருந்தால் தான் அந்த வீடு சுபிட்சம் அடையும் என்பதும் அர்த்தம் கிடையாது. தேவைக்கு அளவோடு பணமும் நோய்நொடி அற்ற வாழ்க்கையும் மன நிம்மதியோடும் சேர்ந்து ஒரு வீட்டில் இருந்தால் அந்த வீடு செல்வ செழிப்பு நிறைந்த வீடு தான். ஒரு வீட்டை செல்வ செழிப்பாக வைத்துக்கொள்ள பெண்கள் எப்படி தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் இருக்க வேண்டும் எப்படி இருக்கக் கூடாது என்பதை பற்றிய சில விஷயங்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

malli-poo

பெண்கள் எப்போதும் நறுமணமாக இருக்க வேண்டும் என்று தான், வாசனை நிறைந்த பூக்களை தினமும் தலையில் சூடிக் கொள்ள வேண்டும் என்று சொல்லுவார்கள். இன்று நிறைய பெண்களுக்கு தலையில் பூ வைக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. தினமும் பூ வைத்துக் கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை நம்முடைய உடலில் கொஞ்சமாக ஜவ்வாது பொடியை பூசிக்கொள்ள வேண்டும். இது பெண்களை எப்போதுமே நறுமணத்தோடு, மகாலட்சுமி அம்சத்தோடு வைத்திருக்கும். பெண்களின் உடம்பில் துர்நாற்றம் வீசினால் அந்த வீட்டில் கஷ்டம் வரும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

அடுத்தபடியாக தினசரி பெண்கள் தங்களுடைய முகத்தில் மஞ்சள் நிறம் தெரியும்படி மஞ்சளை பூசி தான் குளிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. ஒரு சொட்டு மஞ்சளை உள்ளங்கையில் வைத்து நிறம் தெரியாத அளவுக்கு முகத்தில் பூசி தினமும் குளிப்பது வீட்டிற்கு ஐஸ்வர்யத்தை தேடித்தரும்.

javvathu2

அடுத்தபடியாக மிக மிக முக்கியமான ஒரு விஷயத்தை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பெண்கள் தலை ஸ்நானம் செய்யும்போது, உச்சி பகுதியில் இருக்கக்கூடிய சக்கரமானது விரிவடையும். அந்த சக்கரம் விரிவடையும் போது பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய நல்ல சக்தியானது பெண்களின் உடம்புக்குள் செல்லும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

பெண்களின் உச்சிப் பகுதியில் இருக்க கூடிய சக்கரம் முழுமையாக விரிவடைய வேண்டும் என்றால், முதலில் தலைக்கு 3 கப் அளவு தண்ணீரை, அதாவது மூன்று முறை தண்ணீரை எடுத்து, கையை வைக்காமல் நேரடியாக உச்சந்தலையில் ஊற்ற வேண்டும். இப்படி செய்யும்போது தான், மூன்று முறை தண்ணீரானது உச்சந்தலையில், நேரடியாக படும் போது, உச்சந்தலையில் இருக்கக் கூடிய சக்கரம் முழுமையாக விரிவடைந்து பெண்களுக்குள் பிரபஞ்ச சக்தியானது முழுமையாக உள்ளே புகும் என்றும் சில சாஸ்திர குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள். இதன் மூலம் உங்களுடைய வீட்டில் நிறைய நன்மைகள் நடப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.

women1

குளிக்கும்போது நிறைய பெண்கள் தங்களுடைய மனதில் பலவகையான சிந்தனையோடு குளிப்பார்கள். அப்படி குளிப்பதும் தவறு. நல்ல சிந்தனையுடன் மன தெளிவோடு ஸ்நானம் செய்வதுதான் குடும்பத்திற்கு நல்லது. இதுதவிர பெண்கள் எப்போதுமே குளிக்கும்போது ஏதாவது ஒரு ஆடையை தங்களுடைய உடலில் அணிந்து கொண்டு தான் குளிக்க வேண்டும்.

bathroom-shower

இப்படி ஏதாவது ஒரு ஆடையை அணிந்து கொண்டு பெண்கள் குளிப்பதன் மூலம், அவர்களுடைய உடம்பில் கெட்ட சக்தியும் ஊடுருவதற்கு வாய்ப்பு கிடையாது. ஒரு நேரம் இல்லை என்றாலும், ஏதாவது ஒரு கெட்ட நேரத்தில் தினந்தோறும் நிர்வாண நிலையில் குளிக்கும் பழக்கம் உள்ள பெண்களின் உடம்பில் கெட்ட சக்தி ஊடுருவதற்க்கு நிறையவே வாய்ப்பு உள்ளது என்பதும் ஒரு உண்மையான விஷயம் தான்.

bathing

பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி குளிக்கும்போது உடை இல்லாமல்  குளிக்கக் கூடாது என்று சொல்கிறது சாஸ்திரம். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை கடைப்பிடித்து பாருங்கள் நிச்சயமாக வீட்டில் இருக்கக்கூடிய பலவிதமான பிரச்சனைகளுக்கு, தீர்வுகள் அடுத்தடுத்து உங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வாழ்க்கையில் பிரச்சனையே இருக்கக் கூடாதா? இன்பம் மட்டும் தான் இருக்கணுமா? அப்படின்னா இந்த பதிவு உங்களுக்கு தான்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.