கஸ்தூரி மஞ்சளை முகத்தில் ஒரு முறை இப்படி போட்டு பாருங்கள். கருப்பா இருக்க நீங்க டக்குன்னு ஓவர் நைட்ல உலக அழகிய மாறிடுவீங்க.

face2
- Advertisement -

தூங்கி எழுந்ததும் மேஜிக் போட்டது போல அழகாக மாறிவிட்டால் நல்லா தான் இருக்கும். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் இதெல்லாம் சாத்தியம் கிடையாது. அழகாக முடியும். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தான் அழகாக முடியும். அதற்காக கஸ்தூரி மஞ்சளை வைத்து ஒரு ஃபேஸ் பேக்கை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். பெண்கள் தினமும் சாதாரண மஞ்சள் அல்லது கஸ்தூரி மஞ்சள் தேய்த்துக் குளித்தாலே சருமம் பளபளப்பாக தான் இருக்கும். இருந்தாலும் அந்த மஞ்சள் நிறம் முகத்தில் ஒட்டுகிறது. இன்றைய கால சூழ்நிலைக்கு அதை நிறைய பேர் விரும்புவது இல்லை. பரவாயில்லை, மஞ்சளை வைத்து இந்த பேக் ட்ரை பண்ணுங்க. சீக்கிரம் அழகா மாறிவிடலாம்.

ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூள், 2 ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு, 2 டேபிள் ஸ்பூன் அலோ வேரா ஜெல், இந்த 3 பொருட்களையும் போட்டு நன்றாக கலக்க வேண்டும். கஸ்தூரிமஞ்சள் நல்ல ஆர்கானிக் கஸ்தூரிமஞ்சள் ஆக வாங்கிக்கொள்ளுங்கள். அதில் கலப்படம் இருக்கக் கூடாது. உருளைக்கிழங்கைத் துருவி அதை உங்கள் உள்ளங்கையால் பிழிந்தாலே சூப்பராக ஜூஸ் கிடைத்துவிடும்.

- Advertisement -

ரெடி பண்ண இந்த பேக்கை ஒரு பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்தால் மூன்று நாள் யூஸ் பண்ணலாம். தினமும் இரவு இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். முகத்தை சுத்தமாக கழுவி துடைத்து விடுங்கள். அதன் பின்பு இந்த பேக்கை முகம் முழுவதும் போட்டுக்கொள்ளுங்கள். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். வாரத்தில் 2 நாட்கள் இந்த பேக்கை பயன்படுத்தலாம்.

முகம் பார்ப்பதற்குப் பொலிவாக இருக்கும். முகத்தில் இருக்கும் கருமை நிறம் குறையும். நெற்றி ஒரு கலர், மூக்கு ஒரு கலர், தாடை ஒரு கலர் என மாறி மாறி இருப்பவர்களுக்கு ஸ்கின் டோன் ஈவனாக சீக்கிரம் மாறத் தொடங்கும். இதில் கஸ்தூரி மஞ்சள் கட்டாயம் சேர்க்கப்படவேண்டும். உங்களுடைய வீட்டில் அலோ வேரா ஜெல் இல்லை என்றால், அந்த ஜெல் லுக்கே பதிலாக தயிர் சேர்க்கலாம். பால் சேர்த்துக் கொள்ளலாம். ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் முடிந்தவரை தயிர் பால் பயன்படுத்தாமல் இருப்பதுதான் நல்லது.

- Advertisement -

சிலபேருக்கு கடலைமாவு சருமத்திற்கு செட் ஆகும். சில பேருக்கு பயத்தமாவு சருமத்திற்கு செட் ஆகும். இப்படிப்பட்டவர்கள் கடலை மாவுடன் கஸ்தூரி மஞ்சளை சேர்த்து உருளைக்கிழங்கு சாறு சேர்த்து கலந்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளலாம். அது அவரவர் விருப்பம் தான்.

இதோடு சேர்த்து தினமும் ஆரோக்கியமான பச்சைநிற காய்கறிகள் சாப்பிட வேண்டும். வரப்போவது வெயில் காலம் என்பதால் நிறைய தண்ணீரை குடித்துக் கொண்டே இருங்கள். சிலபேர் தண்ணீர் குடிப்பதை விட்டு விட்டு வேலையில் கவனம் செலுத்துவார்கள். தவறு, பாட்டிலில் அளவு வைத்து தினமும் 4 – 5 லிட்டர் தண்ணீர் பருகி விட உங்களுடைய சருமம் மினுமினுப்பாக இருக்கும்.

- Advertisement -