இந்த ஒரு காரியத்தை நீங்கள் சரியாக செய்யாது போனால் காசிக்கு போனால் கூட உங்கள் கருமம் தொலையாது. கங்கையில் நீராடினாலும் கிடைக்காத புண்ணியத்தை இதை செய்தால் நிச்சயம் கிடைக்கும்.

kangai man siva linga
- Advertisement -

இந்து தர்ம சாஸ்திரப்படி மனிதன் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது காசிக்கு சென்று தன்னுடைய கர்மாக்களை தொலைத்து வர வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அப்படியான அந்த காசிக்கு சென்றாலும் கர்மங்கள் தொலையாமல் நம்மை தொடர்வதற்கு நாம் அங்கு சென்று செய்ய வேண்டியவற்றை முறையாக செய்யாமல் வருவதே காரணம் என்று சொல்லப்படுகிறது. அது என்ன என்பதை இப்போது இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

காசிக்கு சென்று வருவது என்பது இன்று நேற்று தொடங்கிய பழக்கம் அல்ல. நாம் பழங்காலம் தொட்டே கடைப் பிடித்து வந்த ஒரு புனித யாத்திரை பயணம் தான். அப்போதெல்லாம் காசிக்கு சென்று விட்டால் திரும்ப வர மாட்டார்கள் என்று சொல்லக்கூட கேள்விப்பட்டிருப்போம். அந்த காலத்தில் மனிதன் தன் கடமைகளை முடித்த பிறகு தன்னுடைய கடைசி பயணமாக காசி யாத்திரையை தான் தேர்ந்தெடுப்பார்கள். அப்போதெல்லாம் இன்றைய காலத்தில் இருப்பது போன்று வசதி வாய்ப்புகள் கிடையாது நடந்தே காசி யாத்திரை பயணம் மேற்கொண்டார்கள். இதனால் பலரும் திரும்பி வர முடியாமல் இருந்திருக்கலாம். அது மட்டும் இன்றி காசிக்கு சென்று வந்தாலே அது நம்முடைய மறுபிறவி என்றும் சொல்லுவார்கள்.

- Advertisement -

இவ்வளவு புனிதம் வாய்ந்த ஒரு ஸ்தலத்தை இன்று ஒரு சுற்றுலா தளம் போல போகத் தொடங்கி விட்டார்கள். காசிக்கு சென்று நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதையே மறந்து விட்டார்கள். காசி என்பது சுற்றுலா ஸ்தலமோ, ஏன் காசிநாதரான எம்பெருமான் சிவபெருமானுடைய தளமாக கூட அதை கருத்தில் கொள்ளக் கூடாது என்றும் சொல்கிறார்கள். அது இறந்தவர்களின் ஆத்மாக்கள் சங்கமிக்கும் ஒரு இடமாகத் தான் காசியை பாவிக்க வேண்டும்.

காசிக்கு போனால் செய்ய வேண்டியவை
உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் இறந்த பின் சங்கமிக்கும் இடமான மூன்று இடங்களில் ஒன்றாக காசி சொல்லப்படுகிறது. அங்கு சென்று நம் முன்னோர்களுக்கு தர வேண்டிய தர்ப்பணத்தை முறையாக தர வேண்டும். காசிக்குச் சென்று கொடுக்கும் தர்ப்பணத்தில் நம் உடன் வாழ்ந்தவர்கள், நண்பர்கள், ஏன் நம் வீட்டில் வளர்க்கும் பிராணிகள் நமக்கு ஆபத்தில் உதவியவர்கள் இவர்களில் யாரேனும் இறந்திருந்தால் அவர்களையும் நினைவு கூர்ந்து அவர்களுக்கும் சேர்த்து எள்ளும் தண்ணியும் இரைத்து அவர்களுக்கு நம்முடைய நன்றி கடனை செலுத்தி வந்தால் மட்டுமே நம்முடைய கர்ம பலன்கள் முழுவதுமாக தீரும்.

- Advertisement -

இங்கு பிண்டம் வைத்து எள்ளும் தண்ணீரும் இறைத்து நாம் முறையாக வணங்கி வந்தாலே நம்முடைய வினைகள் தீருவதுடன், காசியில் இருக்கும் எம்பெருமானின் முழுமையான ஆசிர்வத்தை தர முடியும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: மௌனம் பழகு! மௌனமாக இருப்பதால் இவ்வளவு அதிர்ஷ்டம் வருமா? இது தெரிஞ்சிருந்தா பேசாம சும்மா இருந்திருப்பேனே!

இனி காசிக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்தால் இந்த ஒரு கடமையை தவறாமல் சரியாக செய்து திரும்பி வரும் போது நம்முடைய கர்ம வினைகள் தீங்கி நல்ல முறையில் வாழ்வதற்கான அருளை பரிபூரணமாக நாம் பெறுவோம். இதை சரியாக செய்யாமல் போனால் நிச்சயமாக காசிக்கு சென்றால் கூட நம்முடைய கர்மாக்கள் தீராது என்ற இந்த கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -