கஷ்டங்களை நீக்கும் நரசிம்மர் தீப வழிபாடு

narsimmar deepam
- Advertisement -

வசதி வாய்ப்புடன் வாழ்ந்த நபர்களுக்கு திடீரென்று ஏதோ ஒரு பிரச்சனை ஏற்பட்டு படிப்படியாக அவர்களுடைய பொருளாதார நிலை சரிந்து சொத்துக்களை இழந்து பணரீதியான பிரச்சினைகளுக்கு உள்ளாகி வாழவே பிடிக்காத உச்சகட்ட துன்பத்தை அனுபவிப்பவர்கள் கூட அவர்களின் துன்பத்திலிருந்து படிப்படியாக விலகி நல்ல நிலைமைக்கு கொண்டுவரக்கூடிய அற்புதமான கடவுளாக நரசிம்மர் திகழ்கிறார். அப்படிப்பட்ட நரசிம்மரை நினைத்து நாம் எந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தன்னை மனதார நினைத்த பக்தனின் துயரத்தை போக்குவதற்காக தூணிலிருந்து தோன்றியவர்தான் நரசிம்மர் என்ற கதை அனைவருக்கும் தெரிந்தது. அப்படிப்பட்ட நரசிம்மரை நாமும் மனதார நினைத்து வழிபாடு செய்து அழைத்தால் நமக்காக அவர் வந்து நம்முடைய கஷ்டங்களை தீர்த்து நம்மை காப்பாற்றுவார் என்பது உண்மையே. அப்படிப்பட்ட நரசிம்மரை அழைப்பதற்கு நாம் எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை தங்களால் இயலும் பட்சத்தில் அருகில் நரசிம்மர் ஆலயம் இருந்தால் அந்த ஆலயத்தில் செய்ய ஆரம்பிக்கலாம். நரசிம்மர் ஆலயம் இல்லாதவர்கள் தங்கள் வீட்டிலேயே நரசிம்மரை மனதார நினைத்து இந்த வழிபாட்டை செய்யலாம். இந்த வழிபாட்டை செய்வதற்கு நமக்கு ஐந்து வெற்றிலைகளும் 5 அகல் விளக்குகளும் தேவைப்படும். முதலில் நல்ல வெற்றிலைகளாக தேர்ந்தெடுத்து அதை சுத்தம் செய்து அந்த வெற்றிலைக்கு நான்கு புறங்களிலும் சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு வெற்றிலையின் நுனி வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு வைத்துவிட்டு அந்த வெற்றிலைக்கு மேல் புதிதாக வாங்கிய ஐந்து அகல் விளக்குகளை சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த அகல் விளக்குகளில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை நாம் நரசிம்மருக்கு உகந்த நேரமான மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் ஏற்ற வேண்டும். எந்த நாளில் வேண்டுமானாலும் இந்த வழிபாட்டை தொடங்கலாம்.

- Advertisement -

தொடர்ச்சியாக தங்களால் இயன்ற அளவு அதாவது 48 நாட்களோ அல்லது தங்களின் கஷ்டத்திற்கு ஏற்ப அந்த நாட்களை அதிகரித்துக் கொண்டோ நாம் செல்லலாம். குறைந்தபட்சம் 48 நாட்கள் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இப்படி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றிய பிறகு நரசிம்மரின் போற்றிகள் தெரியும் பட்சத்தில் அவரின் போற்றிகளை கூற வேண்டும்.

அப்படி போற்றிகள் தெரியாதவர்கள் “ஓம் நரசிம்மரே போற்றி” என்று மட்டும் 108 முறை கூறலாம். மனதை ஒரு நிலைப்படுத்தி மனதார அவரின் நாமத்தை உச்சரித்தால் கண்டிப்பான முறையில் அந்த இடத்தில் நரசிம்மர் தோன்றுவார். வாரத்திற்கு ஒரு முறை அதாவது சனிக்கிழமையோ அல்லது புதன்கிழமையோ நரசிம்மருக்கு பானகத்தை நெய்வேத்தியம் செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கொடுத்த பணம் திரும்ப கிடைக்க அத்தி இலை தீபம்

இந்த எளிமையான நரசிம்மர் தீப வழிபாட்டை நாமும் நம்பிக்கையுடன் செய்து நம் வாழ்வில் இருக்கக் கூடிய கஷ்டங்களை நீக்கி வெற்றிகளை பெறுவோம்.

- Advertisement -