இந்த ஒரு பொருளை இப்படி இரவு நேரத்தில் தானமாக வழங்குவதால் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து, செல்வம் பெருகி, நிம்மதியுடன் வாழலாம்.

thaanam
- Advertisement -

தானம் செய்வதன் மூலம் நம்முடைய கர்ம வினைகள் அனைத்தும் குறைகிறது என்று கூறப்படுகிறது. அவ்வாறு நாம் வழங்கப்படும் தானம் எந்த வகையில் இருக்க வேண்டும்? எப்படி இருக்க வேண்டும்? எந்த நாளில் இருக்க வேண்டும்? என்றெல்லாம் பல வழிமுறைகள் இருக்கின்றது. பகலில் எந்த பொருளை வேண்டுமானாலும் நாம் தானமாக தரலாம். சில கிழமைகளில், சில பொருட்களை தானமாக வழங்குவதன் மூலம் நம் வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். ஆனால் இரவு நேரத்தில் எந்தவித பொருட்களையும் தானமாக வழங்க கூடாது என்று கூறப்படுகிறது. இரவு நேரத்தில் எந்த பொருளை நாம் தானமாக கொடுத்தால் நம் வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து நன்மை நிலவும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பிரதி பலனை எதிர்பார்த்து நாம் செய்யக்கூடிய உதவியை தானம் என்றும், எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் செய்யக்கூடிய உதவியை தர்மம் என்றும் நாம் கூறுகிறோம். மேலும் நமக்கு தெரிந்தவர்களுக்கு நாம் உதவி செய்தால் அது தானம் என்றும், தெரியாத யாரோ ஒருவருக்கு உதவி செய்தால் அதை தர்மம் என்றும் கூறுகிறார்கள். தானமாக இருந்தாலும், தர்மமாக இருந்தாலும் அதை நாம் செய்கிறோம் என்றால் நம்முடைய கர்ம வினைகள் கண்டிப்பாக நீங்கும். நம் வாழ்வில் நமக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் குறைந்து நிம்மதி ஏற்படும். இதுவே தான தர்மம் செய்வதால் ஏற்படும் நன்மை.

- Advertisement -

ஆடைகளை தானமாக வழங்குவது, உணவுப்பொருட்களை தானமாக வழங்குவது, அன்னதானம் செய்வது, படிப்புக்கு உதவி செய்வது, இறுதிச் சடங்குகளுக்கு உதவி செய்வது, திருமணத்திற்கு உதவி செய்வது என்று பல தான தர்மங்கள் இருக்கின்றன. இவை அனைத்தையும் பொதுவாக நாம் பகல் நேரங்களில் மட்டுமே செய்வோம். இரவில் எந்தவித தான தர்மத்தையும் செய்யக்கூடாது என்று எந்த சாஸ்திரம் கூறுகிறது, அதே சாஸ்திரத்தில் இரவு நேரத்தில் நாம் அன்னத்தை தானமாக வழங்கினால் நம்முடைய கஷ்டங்கள் தீரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு நாம் அன்னத்தை தானமாக இரவு நேரத்தில் வழங்கும் பொழுது அந்த அன்னத்தில் நாம் உப்பு போட்டிருக்க கூடாது. காரணம் உப்பு மகாலட்சுமி என்பதால் உப்பு போட்ட பொருட்களை இரவு நேரத்தில் பிறருக்கு தானமாக வழங்கும் பொழுது, நம் வீட்டில் இருக்கக்கூடிய மகாலட்சுமி வெளியில் சென்று விடுவாள் என்று ஒரு கூற்று நிலவி வருகிறது. அதற்கு மாறாக நம் வீட்டிற்கு பிறரை அழைத்து வந்து இரவு நேரத்தில் சாப்பாடு வழங்குவதன் மூலம் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணியாக இருந்தாலும் நாம் சாப்பிட்ட மிச்ச உணவை அதாவது எச்சில் உணவை வழங்கக் கூடாது. அவ்வாறு செய்வதால் நமக்கு கர்ம வினைகள் மேலும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. எச்சில் உணவை தவிர்த்து சுத்தமான உணவை வழங்கினால் நமக்கு பல நன்மைகள் ஏற்படும் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: புதன்கிழமையில் விநாயகருக்கு இந்த ஒரு பொருளை வைத்து வழிபட்டால் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் நீங்கி லாபம் அதிகரித்து பெரிய தொழிலதிபர் ஆகக்கூடிய யோகத்தை பெறலாம்.

கஷ்டத்தை தீர்க்கக் கூடிய இந்த எளிமையான தானத்தை இனிமேல் நாமும் செய்து நம் கர்ம வினைகளில் இருந்து வெளியில் வருவோம்.

- Advertisement -