தீராத பழி சொல் கெட்ட பெயர் நீங்க முருகன் வழிபாடு

murugan vetrilai
- Advertisement -

ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் இன்பம் துன்பம் கலந்து தான் இருக்கும். இது தான் வாழ்க்கையின் தத்துவம். நாம் ஏதேனும் ஒரு தவறை தெரியாமல் செய்து விட்டால் அதற்கான பரிகாரத்தையும் மன்னிப்பையும் கூறுவதில் தவறில்லை. அது நிச்சயம் சரி செய்து கொள்ள வேண்டிய ஒன்று தான். ஆனால் தவறே செய்யாமல் பழி ஏற்பது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அதே போல் சிலர் பல நேரங்களில் தேவையில்லாமல் அவமானப்பட்டு கொண்டே இருப்பார்கள். ஒரு சிலருக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர்களை எந்த வகையிலாவது துன்புறுத்திக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் படும் துயரத்தை பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள். இப்படி ஒரு மனிதன் தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கும் வேளையில் சரணாகதி அடையும் ஒரே இடம் இறைவன் தான்.

- Advertisement -

அதிலும் இப்படியான துன்பங்களில் இருந்து உடனே நம்மை காக்கக் கூடிய கருணைமிக்க கடவுளாக இருப்பவர் கந்த பெருமான். அவரை இந்த முறையில் வழிபாடு செய்தால் இது போன்ற அவமானங்கள் பழிச்சொற்கள் கெட்ட பெயர்கள் நீங்கி நல்ல முறையில் வாழ வைப்பார் என்று சொல்லப்படுகிறது. அந்த வழிபாட்டு முறை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

துன்பம் தீர முருகன் வழிபாடு

இந்த வழிபாட்டை ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமை அன்று தொடங்குங்கள். அதே போல் இந்த வழிபாட்டை உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் முருகர் ஆலயத்திற்கு சென்று செய்வது தான் சிறப்பு. ஆலயத்திற்கு செல்லும் முன்பாக வீட்டில் இருந்தே 54 வெற்றிலையை வெள்ளை நிற நூலால் மாலையாக தொடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த மாலையை அருகில் இருக்கும் முருகர் ஆலயத்திற்கு சென்று முருகருக்கு சாற்றி முருகனை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் உங்களுக்கு கெட்ட பெயர், அவமான படுத்தியவர்கள், துன்பப்படுத்தவர்களிடம் இடமிருந்து காக்கும் படி கந்தனை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பழிச்சொற்களை நீக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு ஆலயத்தை வளம் வந்து ஏதேனும் ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். அங்கு கந்தனை நினைத்து ஓம் சரவண பவ என்ற இந்த நாமத்தை 108 முறை சொல்லுங்கள். அதன் பிறகு வீட்டிற்கு வந்து விடுங்கள். இது தான் அந்த வழிபாட்டு முறை இது போல தொடர்ந்து செய்து வரும் போது எப்பேர்பட்ட துன்பத்தில் இருந்தாலும் அதிலிருந்து மீண்டு வரலாம் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

ஒரு வேளை உங்கள் வீட்டின் அருகில் முருகர் ஆலயம் இல்லை என்றால் இந்த வழிபாட்டை வீட்டிலே செய்யுங்கள். அதற்கு இதே போல் முருகர் படத்திற்கு வெற்றிலை மாலையை அணிவித்து சரவண பவ என்ற நாமத்தை 108 முறை சொல்லுங்கள். வீட்டில் வணங்கும் போது ஏதேனும் ஒரு இனிப்பை நெய்வேத்தியமாக செய்து வைத்து வழிபாடு செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: குடும்ப பிரச்சனை தீர செவ்வாய்க்கிழமை வழிபாடு

இந்த மாலை முருகர் படத்தில் இரண்டு நாட்கள் வரை அப்படியே இருக்கட்டும். அதன் பிறகு எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். குமரனிடம் எதைக் கேட்டாலும் உடனே அருளக் கூடிய ஆற்றல் உடையவர். அவரை இந்த முறையில் வழிபாடு செய்யும் பொழுது நிச்சயம் உங்களுடைய தீராத பழி சொல் அவமானம் அனைத்தையும் தீர்ப்பார்.

- Advertisement -