- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவாழ்க்கை சிறக்க குலதெய்வ வழிபாடு

வாழ்க்கை சிறக்க குலதெய்வ வழிபாடு

- Advertisement -

இந்த உலகத்தில் பிறந்த யாராக இருந்தாலும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு ரூபத்தில் ஒரு சிறிய முன்னேற்றத்தையாவது அடைய வேண்டும். அதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முயற்சிகள் மேற்கொள்ளாமல் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாது. பலருக்கு முயற்சிகளை செய்தாலும் அதனால் எந்த பலனும் இல்லாத சூழ்நிலை உண்டாக்கும். அப்படிப்பட்டவர்கள் குலதெய்வத்தை எந்த முறையில் வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதில் நாம் பார்க்க போகிறோம்.

குடும்பமாக இருந்தாலும் சரி, தொழிலாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி, படிப்பாக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் அதில் ஏதாவது ஒரு விதம் முன்னேற்றத்தை நாம் பெற வேண்டும். அப்பொழுதுதான் அதில் நம்மால் சிறந்து விளங்க முடியும். அப்படி முன்னேற்றத்தை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டும் அதனால் தடைகளோ, தாமதங்களோ ஏற்பட்டு எந்தவித முன்னேற்றமான சூழ்நிலையும் உண்டாகவில்லை என்றால் அவர்கள் கண்டிப்பான முறையில் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

தினமும் வீட்டில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். குலதெய்வத்திற்கென்று தனியாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து வழிபட வேண்டும். இதே போல் பௌர்ணமி தினங்களில் குலதெய்வத்தை நினைத்து வீட்டிலேயே வழிபாடு மேற்கொள்ள வேண்டும். இயன்றவர்கள் குலதெய்வ கோவிலுக்கு பௌர்ணமி தோறும் சென்று வருவது சிறப்பு. இயலாதவர்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வ ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

இப்படி குலதெய்வ ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் எந்த பொருட்களை எடுத்துச் சென்றால் அவர்கள் வாழ்க்கையில் இருக்கக் கூடிய தடைகள் அனைத்தும் நீங்கி நல்ல முன்னேற்றகரமான நிலை ஏற்படும் என்று பார்ப்போம். எந்த தெய்வமாக இருந்தாலும் அந்த தெய்வத்திற்கு நாம் எந்த பொருட்களை வாங்கி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் மல்லிகைப் பூவை நம் கைகளாலேயே மாலையாக தொடுத்து குலதெய்வத்திற்கு கொடுப்பதன் மூலம் நம்முடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் மூன்று காம்பு உடையாத விரலில் மஞ்சளை வாங்கிக் கொண்டு குலதெய்வ கோவிலுக்கு சென்று குலதெய்வத்தின் மடியில் வைத்துவிட்டு எப்பொழுதும் குலதெய்வத்தை எப்படி வணங்குவோமோ அதே போல் வணங்கி வழிபாடு செய்து முடித்துவிட்டு அந்த விரலி மஞ்சளில் இருந்து ஒரே ஒரு மஞ்சளை மட்டுமாவது நம்முடைய வீட்டிற்கு திரும்ப வாங்கி வர வேண்டும். நம்முடைய வீட்டிற்கு வந்த பிறகு இந்த விரலி மஞ்சளை மஞ்சள் நிற துணியில் வைத்து கட்டி அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து அதை குலதெய்வமாகவே நினைத்து தினமும் வழிபாடு செய்து வர நம்முடைய வாழ்க்கையில் பல நல்ல முன்னேற்றங்களை நம்மால் காண முடியும்.

ஒவ்வொரு முறையும் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் பொழுது இந்த இரண்டு பொருட்களை மறவாமல் குலதெய்வத்திற்கு வாங்கி தருவதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை நம்மால் உணர முடியும். இதோடு தினமும் குலதெய்வத்தை மறவாமல் வழிபாடு செய்வதன் மூலமும் குலதெய்வத்தின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். இயன்றவர்கள் குலதெய்வ கோவிலில் தீபம் ஏற்றுவதற்காக எண்ணெய் வாங்கிக் கொடுப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கையும் பிரகாசமாக திகழும்.

இதையும் படிக்கலாமே: கடன் சுமை தீர மாரியம்மன் வழிபாடு

சிரமம் இல்லாமல் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த இரண்டு பொருட்களை வாங்கிக் கொண்டு போய் குலதெய்வத்திற்கு கொடுத்து முழு மனதுடன் வழிபாடு செய்பவர்களுக்கு குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றகரமான நிலை ஏற்படும்.

சற்று முன்