பணக்கஷ்டமும் மன கஷ்டமும் தீர பெருமாள் வழிபாடு

perumal thulasi
- Advertisement -

இந்த உலகத்தில் நாம் வாழ்வதற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தரக்கூடிய தெய்வமாக திகழக்கூடியவர் தான் பெருமாள். அதனால் தான் அவரை காக்கும் தெய்வம் என்று கூறுகிறோம். நாம் பிறக்கும் பொழுது அதற்கு முழு காரண கர்த்தாவாக திகழக் கூடியவர் பிரம்மதேவர் என்றால், நாம் இறக்கும் பொழுது நமக்கு நற்கதிகள் கிடைப்பதற்கு காரண கர்த்தாவாக திகழக் கூடியவர் சிவபெருமான். இடைப்பட்ட காலங்களில் நமக்கு நன்மைகள் நடைபெறுவதற்கு காரண கர்த்தாவாக திகழக்கூடியவர் பெருமாள்தான். அப்படிப்பட்ட பெருமாளை நாம் வழிபடுவதன் மூலம் நம்முடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நம்முடைய பணகஷ்டமும் மனக்கஷ்டமும் தீர்வதற்கு பெருமாளை வழிபடும் முறையைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

மகாலட்சுமியை தன்னுடைய மார்பில் வைத்திருக்கும் பெருமாளே நம்முடைய செல்வ செழிப்பிற்கு காரணமாக திகழ்கிறார். பெருமாளை நாம் வழிபடும் பொழுது நமக்கு பணக்கஷ்டங்கள் தீரும். பணக்கஷ்டம் தீர்ந்தாலே அதனால் ஏற்படக்கூடிய மனக்கஷ்டமும் தீர்ந்துவிடும். இப்படி இந்த இரண்டு கஷ்டமும் இல்லாமல் வாழ்பவர்களுடைய வாழ்க்கை சொர்க்கத்திற்கு இணையாக கருதப்படுகிறது. அந்த வாழ்க்கையை வாழ்வதற்கு பெருமாளை வழிபடும் முறையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை பெருமாளுக்கு உரிய சனிக்கிழமை அன்று செய்ய வேண்டும். மேலும் இந்த வழிபாட்டிற்கு நமக்கு பெருமாளுக்கு மிகவும் உகந்த பொருளான துளசி மட்டும் இருந்தால் போதும். வேறு எதுவும் தேவை இல்லை. சனிக்கிழமை அன்று உங்களுடைய வசதிக்கு ஏற்ப ஏதாவது ஒரு நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய பெருமாளின் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.

அவ்வாறு செல்லும் பொழுது உங்களுடைய கையின் நீளத்திற்கு ஏற்றவாறு துளசி மாலையை வாங்கிக் கொள்ளுங்கள். நேராக கொடி மரத்திற்கு முன்பாக போய் நின்று அந்த துளசி மாலையை உங்களுடைய கையில் வைத்துக்கொண்டு உங்களுடைய பணக்கஷ்டம் மனகஷ்டம் போன்ற அனைத்து கஷ்டங்களையும் பெருமாளை மனதார நினைத்துக் கொண்டு கூற வேண்டும்.

- Advertisement -

பிறகு அந்தக் கோவிலில் வீற்றிருக்கக்கூடிய பெருமாளின் பெயரை 18 முறை உச்சரிக்க வேண்டும். உதாரணமாக வரதராஜ பெருமாள் ஆக இருக்கும் பட்சத்தில் “ஓம் நமோ வரதராஜ பெருமாளே நமஹ” என்று கூற வேண்டும். இப்படி தொடர்ந்து 18 முறை கூறிவிட்டு அந்த துளசி மாலையை அப்படியே கையில் வைத்துக்கொண்டு பெருமாளின் சன்னதிக்கு சென்று பெருமாளுக்கு அந்த துளசி மாலையை சாற்ற சொல்லி தர வேண்டும்.

பெருமாளை வழிபட்டு முடித்துவிட்டு திரும்ப கொடிமரத்திற்கு வந்து அங்கு அமர்ந்து மறுபடியும் பெருமாளின் நாமத்தை 18 முறை கூறிவிட்டு வீட்டிற்கு வரவேண்டும். இப்படி ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் நாம் செய்து வருவதன் மூலம் பெருமாளின் அருளால் நமக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும். செல்வ செழிப்பு மேலோங்கி மன நிம்மதி உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: கஷ்டங்களை தீர்க்கும் எலுமிச்சை

மிகவும் எளிமையான இந்த வழிப்பாட்டு முறையை தொடர்ச்சியாக முழு நம்பிக்கையுடன் யார் ஒருவர் செய்கிறார்களோ அவர்களுக்கு கண்டிப்பான முறையில் மனநிம்மதியும் பண வரவும் ஏற்படும்.

- Advertisement -