இந்த தீபம் ஏற்றும் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக தங்குவதோடு, உங்கள் பண பிரச்சனைகள் யாவும் தீர்ந்து செல்வம் பெருகுவது உறுதி. இதை ஏற்ற வேண்டும் என்று நினைத்தாலே உங்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது என்று தான் அர்த்தம்.

- Advertisement -

பணம் இல்லா வாழ்க்கை பாழான வாழ்க்கை என்ற ஒரு சொல் நம் வழக்கத்தில் உள்ளது. பணம் இல்லாமல் வாழ்வது மிக மிக கடினம். அந்த பணத்தை சம்பாதிக்க தான் நாம் தினந்தினம் இத்தனை போராட்டங்களை அனுபவித்து வருகிறோம். வாழ்க்கையில் எத்தனையோ துன்பங்களையும், துயரங்களையும் தாங்கியும் தாண்டியும் செல்வது நல்ல முறையில் நாமும், நம் குடும்பமும் வாழ தான். இந்த ஒரு தீபத்தை உங்கள் வீட்டில் ஏற்றும் போது வீட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் மறைந்து பணம் உங்களைத் தேடி வரும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். அது என்ன தீபம் அதை எப்படி ஏற்ற வேண்டும் என்பதை பற்றி எல்லாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

செல்வம் பெருக உப்பு தீபம் ஏற்றும் முறை
பணம் வரவிற்கு நாம் ஏற்ற வேண்டிய தீபம் மகாலட்சுமிக்கு விருப்பமான லட்சுமி கடாட்சத்தை தரும் உப்பு தீபம் தான். உப்பு தீபம் என்றதும் இது தான் எங்களுக்கு தெரியுமே என்று எல்லோரும் நினைப்பது தெரிகிறது. ஆனால் இது அப்படி கிடையாது இந்த தீபத்தை எப்படி ஏற்ற வேண்டும் எந்த நாளில் ஏற்ற வேண்டும் என்பதை எல்லாம் இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

- Advertisement -

இந்த விளக்கு ஏற்ற வேண்டிய நாள் வெள்ளிக்கிழமை இதை அந்த முழுவதிலும் எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். இந்த விளக்கு ஏற்ற நமக்கு தேவை ஒரு தாம்பாளத் தட்டு, அகல் விளக்கு 3, கொஞ்சம் கல்லு உப்பு அவ்வளவு தான். அகல் விளக்கில் ஒன்று பெரியதாகவும், இரண்டு சின்ன அகலாகவும் எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் தாம்பால தட்டிற்கு மஞ்சள். குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். மஞ்சள் குழைக்கும் போது அதில் பன்னீர் ஊற்றி கொள்ளுங்கள். அதே போல் அகல் விளக்கு முழுவதுமாக மஞ்சள் பூசி பொட்டு வைக்க வேண்டும். இப்போது பூஜை அறையில் மகாலட்சுமி தாயார் முன் இந்த தாம்பாள தட்டை வைத்து அதன் மேல் பெரிய அகலை வைத்து விடுங்கள். பெரிய அகல் நிறைய கல்லுப்பை நிரப்பி விடுங்கள்.  நிரப்பும் போது கவனமாக நிரப்புங்கள் உப்பு சிதறாமல் நிரப்ப வேண்டும்.

அதன் பிறகு ஒரு சின்ன அகலை எடுத்து அதில் பச்சரிசியில் மஞ்சளை கலந்து போட்டுக் கொள்ளுங்கள். பிறகு அதற்கு மேல் மற்றொரு அகல் விளக்கை வைத்து பஞ்சுத் திரி போட்டு நல்லெண்ணெய் ஊற்றி வைத்து விடுங்கள். இப்போது இந்த அகல் விளக்கை சுற்றி மலர்களை வைத்து கொள்ளுங்கள், இப்போது தாயாரை மனதார வேண்டி கொண்டு இந்த உப்பு தீபத்தை ஏற்றுங்கள். இந்த தீபம் நல்லெண்ணையில் மட்டும் தான் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றிய உப்பை கால் படாத இடத்திலோ அல்லது தண்ணீரிலோ போட்டு விடுங்கள்.

- Advertisement -

இந்த தீபத்தை முடிந்தால் தினமும் ஏற்றலாம் அல்லது வெள்ளி, செவ்வாய், பவுர்ணமி நாட்களில் ஏற்றி கொள்ளலாம். இந்த தீபம் ஏற்ற ஏற்ற விஷேசம் தான்.

இந்த தீபம் ஏற்றி வரும் வீட்டில் வறுமை, துன்பம்,துயரம், கஷ்டம் என்று எந்த வார்த்தைக்கும் இடமில்லாத சூழ்நிலையை உருவாக்கும். இந்த தீபம் ஏற்றும் போது முதலில் அந்த வீட்டில் நல்ல நேர்மறை ஆற்றல் பரவத் தொடங்கும். நேர்மறை ஆற்றல் நம் வீட்டிலும் நமக்கும் வந்து விட்டாலே அடுத்து நமக்கு நடப்பவையோ எல்லாம் நன்மையாகவே இருக்கும்.

இதையும் படிக்கலாமே: இதில் ஏதாவது 1 பொருளை பூஜை அறையில் வைத்து பூஜை செய்தால் கூட, வீட்டில் வறுமை தங்காது. வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலையாக தங்கும்.

இந்த தீபம் எந்த அளவிற்கு உங்கள் வீட்டில் பிரகாசமாக ஏரிகிறதோ, அந்த அளவுக்கு பணமானது உங்களை தேடி வந்து கடன், கஷ்டம் இல்லாத சந்தோஷ வாழ்க்கை வாழ இந்த தீபம் உதவி செய்யும்.

- Advertisement -