இதில் ஏதாவது 1 பொருளை பூஜை அறையில் வைத்து பூஜை செய்தால் கூட, வீட்டில் வறுமை தங்காது. வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலையாக தங்கும்.

mahalakshmi-vilakku
- Advertisement -

நம் வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம் நீங்க, வறுமை நீங்க, லட்சுமி கடாட்சமும் ஐஸ்வரியமும் நிலையாக தங்குவதற்கு பூஜை அறையில் வைக்க வேண்டிய உயிரோட்டம் உள்ள பொருட்களை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். பின் சொல்லக்கூடிய ஏதாவது ஒரு பொருளை பூஜை அறையில் வாங்கி வைத்து தினம்தோறும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வரும் பட்சத்தில், உங்களுடைய வீடு சுபிட்சம் பெறும். மிக மிக எளிமையான முறையில் ஐஸ்வர்யத்தை கொடுக்கக்கூடிய ஆன்மீக பொருட்களை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

மகாலட்சுமி அம்சம் பொருந்திய பொருட்கள் 
முதலில் மகாலட்சுமி அம்சம் பொருந்திய பொருட்களில் பூஜை அறையில் வலம்புரி சங்கை வைக்கலாம். மிகச்சிறிய அளவிலும் வலம்புரி சங்கு கிடைக்கிறது. கொஞ்சம் பெரிய அளவிலும் வலம்புரிச் சங்கு கிடைக்கிறது. உங்களுக்கு எது சௌகரியமோ, எது ஒரிஜினலாக கிடைக்கிறதோ அதில் ஒன்றை வாங்கி பூஜையறையில் வைத்து வழிபாடு செய்வது வீட்டிற்கு நல்லது.

- Advertisement -

வலம்புரி சங்கை வாங்கிக் கொள்ளுங்கள். வலம்புரி சங்கு வைப்பதற்கு என்றே ஸ்டாண்ட் கடைகளில் விற்கிறது. அந்த ஸ்டாண்ட் வாங்கியும், அதன் மேல் வைக்கலாம். அதையெல்லாம் வாங்க முடியாது. ஆனால் எங்கள் வீட்டில் வலம்புரி சங்கு இருக்கிறது என்றால் அதை ஒரு அகலமான கிண்ணத்தில், பச்சரிசி நெல்லை கொட்டி, அதன் மேலே இந்த வலம்புரி சங்கை நிற்க வைத்து, அதன் உள்ளே தண்ணீர் ஊற்றி, தண்ணீருக்கு உள்ளே பூ போட்டு, ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும்.

மிகச் சிறிய அளவில் வலம்புரி சங்கு நமக்கு கிடைக்கிறது. அதில் தண்ணீரை எல்லாம் ஊற்றி நம்மால் வைக்க முடியாது. ஒரு தட்டில் சில்லறை நாணயங்களை கொட்டி, அதன் மேலே அந்த வலம்புரி சங்கை வைக்கலாம். வலம்புரி சங்கு கிழக்கு மேற்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். சக்கரம் போல இருக்கும் பகுதி, கிழக்கு பார்த்த வாரும், கூர்மையான பகுதி மேற்கைப் பார்த்தவாறு பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

தினமும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தாலே போதும். சங்குக்கு உள்ளே இருக்கும் தண்ணீரை மட்டும் தினம் தோறும் மாற்றி விடுங்கள். சங்கு உங்களால் வாங்க முடியவில்லை. சங்கு உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் வெள்ளெருக்கன் பிள்ளையாரை பூஜை அறையில் வைக்கலாம். வெள்ளருக்கு பிள்ளையாரும் ஐஸ்வர்ய கடாட்சத்தை நிறைவாக வீட்டில் கொடுக்கும். ஒரு சிறிய கிண்ணத்தில் குன்றின்மணி போட்டு வைக்கலாம். ஒரு தட்டில் பச்சரிசியை கொட்டி அதன் மேலே கோமதி சக்கரத்தை வைக்கலாம்.

இதையும் படிக்கலாமே: நாளை 16/12/2022 மார்கழி ஒன்றாம் நாள் வாழ்க்கை இனிக்க தவறாமல் செய்ய வேண்டிய 5 விஷயங்கள் என்னென்ன?

கோமதி சக்கரம், சங்கு, இந்த இரண்டு பொருட்களுமே பூஜை அறையில் இருந்தால் அதற்கு வாரம் ஒரு முறை பால் அபிஷேகம் செய்து, மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து, ஏதாவது ஒரு நிவேதனம் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். ஏனென்றால் இந்த பொருட்கள் எல்லாம் உயிரோட்டம் உள்ள பொருட்கள். அவைகளை வாங்கி வீட்டில் ஒரு ஓரத்தில் பூஜை செய்யாமல் போட்டு வைக்கவே கூடாது. அது குடும்பத்திற்கு கஷ்டத்தை கொடுத்து விடும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன வழிபாட்டு முறைகளை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -